திருவான்மியூரில் ‘சிக்னலைக்” கடந்து செல்வது என்பது பெரிய சவால். சாலைச் சந்திப்பை நெருங்கும் போதே நம்மை மனச் சோர்வு ஆட்கொள்ளும். மழை தூரிக் கொண்டே இருந்தது. இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த கதிரேசனும் நானும் ‘ரெயின் கோட்’ அணிந்திருந்தோம். வாகனங்களின் இரைச்சலும் புகையும் தம் கடமையை நன்றாகத் தான் செய்து கொண்டிருந்தன. கதிரேசன் புதிதாக வாங்கி இருந்த இரண்டாம் மாடியில் உள்ள ‘ஃபிளாட்டு” க்கு கிரகப் பிரவேசம் என்று அவன் அழைப்பு வைத்த போதே நான் போயிருக்க […]
எஸ். நரசிம்மன் [ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001இல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே வட்டத்தின் முதன்மையான நோக்கமாகும். மேலும் பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் பல கூட்டங்கள் நடந்துள்ளன. சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகும்.கூட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சில முக்கியமான உரைகள் இந்த வரிசையில் இடம் பெறுகின்றன.] “நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?” – இப்படித் […]
தமிழ் நவீன சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக், மாப்பசான், செகாவ் ஆகிய மேதைகளின் சிறுகதைகளை தமிழின் நவீன சிறுகதையாசிரியர்களே தமிழ்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்கள். புதுமைப்பித்தன் தன்னுடைய சொந்தச் சிறுகதைகளுக்கு இணையான பக்க அளவுள்ள அயல்மொழிச்சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தினார். தமிழில் ஒரு சிறுகதையை வாசிக்கும் ஒரு வாசகன், உலகச் சிறுகதைகளில் நிகழ்ந்துள்ள உச்சங்களை அறிந்து தன் வாசிப்பு உலகத்தையும் பார்வையையும் விரிவு செய்துகொள்ள இத்தகைய அறிமுக முயற்சிகள் காலந்தோறும் உதவியபடி […]