எண்ணெயை அவ்வப்போது ஏற்றிக் கொள்கிறது தீபம். அங்குமிங்குமாய் ஆடும் ஊசலாய் ஆடி ஆடி அலைகிறது தீபம். எண்ணெயினை ஏற்றிக் கொண்டும் அணைகிற வரை அலைந்து கொண்டும் இருக்கும் தீபம் ஆடும் குடிகாரனின் ஆக்ரோஷ உருவத்தைக் காட்டி.
நம்பிராஜன் என்கிற விக்கிரமாதித்யன் நம்பியை நான் சந்தித்தது ஒரு சுவையான அனுபவம். இருபது வருடங்களாக இடைவெளீவிட்டு விருட்சம் சிற்றிதழை நடத்திக் கொண்டிருக்கும் அழகியசிங்கர் என்கிற சந்திரமௌலியும் ரிஷி என்கி ற பெயரில் கவிதை எழுதிவரும் லதா ராமகிருஷ்ணனும் கொஞ்ச காலம் நடத்திய ‘ பொருனை ‘ என்கிற இலக்கிய அமைப்பின் கூட்டம் ஒன்று ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி ஸ்டேட் வங்கியின் மாடியில் நடந்தது. பல இடங்களிலிருந்து கவிஞர்கள் அங்கே ஒன்று கூடியிருந்தார்கள். கிழக்கு பதிப்பகம் பா.ராகவன் […]
நம் சந்திப்புகளின் கோர்வையை எளிதாக சொல்லிவிட முடிகிறது இந்த காலத்திருக்கு . உன் புன்னகையின் உலா வீற்றிருப்பதை இந்த மாலையும் மயங்கி கிடக்கிறது . நம் இரவினையும் விட்டு வைக்கவில்லை நினைவுகள் மவுன மன ஒலிகளை கடத்துகிறது உன்னிடமாகவும் என்னிடமாகவும் இரவு ஓய்ந்து விட்டிருக்கிறது . உன்னிடம் சொல்வதற்காக விட்டு வைத்திருக்கிறது விடியல் அவை ஒவ்வொன்றாக பட்டியலிட்டிருக்கிறது உறக்கமற்ற இரவுவின் நம் கனவின் மீதங்களை . இதற்காகவே அன்றும் பிரபஞ்சம் இருந்திருகின்றது . -வளத்தூர் தி .ராஜேஷ் […]
எனது தேவைக்கென பிரதிகள் எடுத்துக்கொள்ள வசதியாய் நெகட்டிவ்கள் சேமித்து வைக்கிறேன் பிறர் அவ்வளவு விரைவில் அறியாவண்ணம் அவற்றைப் பெட்டகத்தினுள் சேமித்து வைக்கிறேன். அந்த நெகடிவ்வின் அருகில் புதிதாக எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்வை வைத்து நோக்கும் போது இன்னும் பொலிவுடன் நெகட்டிவ்வே பரிமளிக்கிறது எத்தனை பாஸிட்டிவ்கள் உண்டாக்கப்படினும் நெகட்டிவ்வில் உள்ள பூதம் போன்ற பிம்பமே மனதில் பாசி போல் படிந்து கிடக்கிறது. நாட்கள் கடந்து போவதால் நெகட்டிவ்களின் மேல் உண்டாகும் சிறு கறைகள் மேலும் அதன் மீதான ஞாபகங்களை வலிய […]
தூங்க ஆரம்பித்த ஒரு மழை ஞாயிற்றுக்கிழமையின் பின்னிரவு பொழுதில் மூன்றாம் வீட்டிலிருந்து ஏதோ அலறல் சத்தம் ஜன்னலை திறந்து அலறலை உற்றுக்கேட்டால் யாருக்கோ மோசமான உடல்நிலை திங்கள்கிழமை வேலைப்பளு நினைவுக்கு வர ஜன்னலை சாத்தி போர்வையை இழுத்துப்போர்த்தி நல்ல தூக்கம் ரெண்டு நாளாச்சு அவருக்கு என்ன ஆச்சு யாரவது சொன்னால் தேவலை. ********** அ.லெட்சுமணன்
புதை குழி புகுந்த பின்னரும் உயிர்த்தலின் பாவனைகள் நெஞ்சு தேக்கி வைத்திருந்த தாத்தாவின் ஆவலாதிகளை யார் தீர்ப்பார்கள் எனும் தீர்மானத்துள் மூழ்கித் தவிக்கும் வேர்களிடம் தொடங்குகிறது அவரின் முதல் குற்றச்சுமை அனுபவித்த உலகின் பொக்கைவாய் பொய் பூசிய வெற்றிலை பாக்கு மென்று துப்பியிருந்ததென்று உவகையின் கைக்கோல் இடரும் களமாகத்தான் உலவிக் கொண்டிருக்கும் ஊமை நிழல்கள் என்று வயோதிகக் கனவுகள் வன்மை உபாதைகள் சுமக்கச் செய்தனவென்று பார்வையின் மாயை புரைவிழுந்து நவீனங்களின் காட்சி மங்கலாய் புராதானத்திரையில் மெழுகியிருந்ததென்று ஒன்று, […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com பக்தி இயக்கப் பாடல்கள் நெகிழ்வான மொழிநடையை உடையன. பேச்சு மொழியின் அடிக் கூறுகளான வழக்குச் சொற்கள், சொல்லடைகள், பழமொழிகள், ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகியவை கலந்த ஒரு மொழிநடையினையே தேவார மூவரும், ஆழ்வார்களும் பயன்படுத்தியுள்ளனர். இக்காலத்திலேயே மக்களிடையே வழங்கப்பட்ட பல்வேறு விதமான நாட்டுப்புறக் கூறுகள் இலக்கிய வடிவம் பெற்றன. மக்களின் விளையாட்டுக்கள், புதிர்கள், பழமொழிகள் ஆகியவை அவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. தேவாரம் பாடிய மூவரில் நீண்ட காலம் வாழ்ந்த பெருமைக்கு உரியவர் திருநாவுக்கரசர். இந்நாவுக்கரின் இயற்பெயர் மருணீக்கியார் என்பதாகும். இவரை, உழவாரப் படையாளி, தாண்டக […]
1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி மொழிக் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டன. அம்மொழி நாவல்களும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்பே க.நா.சு ஜர்மனி, ஸ்வீடிஷ் போன்ற மேலை நாட்டு மொழி நாவல்களை, அநேகமாக அனைத்து உலக நாவல்களையும் அசுர வேகத்தில் மொழி பெயர்த்துத் தள்ளினார். 60களில் தீபம், கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களில் நம் சகோதர […]
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 . கடந்த 13 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற புலம் பெயர்ந்த தமிழ்பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற மாநாட்டை ஜூன் 8, 9, 10 – 2012ல் சான்ஃபிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள Santa clara convension center -ல் நடத்த இருக்கின்றது. சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள் என்ற கருப் பொருளின் பின்னணியில் இம்மாநாடு நடத்தப்படும். உலகின் பல்வேறு […]
நாள்: நவம்பர் 19 -20 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) இடம்: ஏலகிரி, ஜவ்வாது மலை கட்டணம்: 1200/- வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோவின் மூன்றாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி ஏலகிரியில் தொடங்குகிறது. குளிர்காலத்தில் ஏலகிரி செல்வது என்பது கொஞ்சம் புதிதாகத்தான் இருக்கும். ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் மட்டுமே அங்கே உருவாகும் சில அருவிகளைப் பார்ப்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். முக்கியமாக ஜலகம்பாறை அருவி […]