நீவிய பாதை

This entry is part 23 of 53 in the series 6 நவம்பர் 2011

பிறர் நிர்ப்பந்தித்த பாதையில் பலவீனமாய் பாதம் பதிக்கையில் முளைத்தது முதல் கோணல். அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும் தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக… முற்றும் கோணலாகும் துற்சம்பவம் தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்.. பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக. ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த நீவி நேராகிறது புதிய பாதைகள்.. -சித்ரா (k_chithra@yahoo.com)

மீண்டும் முத்தத்திலிருந்து

This entry is part 22 of 53 in the series 6 நவம்பர் 2011

நீ யாராக மாற விருப்பம் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். நான் புலியாக வீரத்தின் சின்னமாக ஆணின் ஆகுருதியாக… நான் தென்றலாக பூவாக எங்கும் உலாவி… ஆடை களைந்து ஆடிய ஆட்டத்தில் உடம்பு சோர்ந்து விடவில்லை என் பிரிய மீனே என்று கொஞ்சினான் என் பிரிய காற்றே என்றாள் அவள். உடம்புகள் பிரிந்து தனித்தனியாக்க் கிடந்த போது புலியாக இருந்த்தாக அவன் சொன்னான். இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட. நானும் தென்றலாக உலவி வந்தேன் அப்புறம் புறாவாகவும், காடையாகவும் […]

சிலர்

This entry is part 21 of 53 in the series 6 நவம்பர் 2011

சிறிய நைலான் கயிறு போதும் வாழ்விலிருந்து விடுபட யாரோ வாங்கிக் கொடுத்த சேலையிலா விதி முடிய வேண்டும் வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்காது தப்பிப்போவது விடுதலையாகாது குரல்வளை நெரியும் போது நினைத்துப் பார்த்தாயல்லவா வாழ்ந்திருக்கலாமே என்று மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கவே வேண்டாம் உன்னைப் போன்றவர்களுக்காகத்தானே கடவுள் இருக்கிறார் வாழ்வின் ஏற்ற இறக்கங்களை சமமாய் பாவிக்க கற்றுத்தரவில்லையா உனக்கு வரவிருக்கும் வசந்தகாலத்தை நினைத்து இலையுதிர்க்கும் மரத்திடம் கற்றிருக்கலாமே வாழ்க்கைப் பாடத்தை தற்கொலையின் மூலம் எந்த மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க […]

என் பாட்டி

This entry is part 20 of 53 in the series 6 நவம்பர் 2011

சித்தி சித்தப்பா அத்தை மாமா எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள் எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார் சர்க்கரை அளவு கேட்டபின் அவர்களுக்குக் காப்பி சீடை தருவார் பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள் காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பார் ஓமவல்லி, துளசி வேம்பு கீழாநெல்லி எல்லாம் கொல்லையில் வளரும் பாட்டியின் பிள்ளைகள் ஈரம் அறிந்து தண்ணீர் விடுவார் தலைவலி காய்ச்சல் என்றால் ஒருகையில் கசாயம் மறுகையில் அரிசியுடன் பாட்டிதான் வருவார் பாட்டியின் சேலைத் துண்டில்தான் இட்டலி வேகும். […]

நிரந்தரமாய்…

This entry is part 19 of 53 in the series 6 நவம்பர் 2011

வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு வீதியில் நிற்கும் ஒருவன்.. கரையான் புற்றில் கருநாகமாய் ஒருவன்.. கல்லை அரிசியில் கலப்பவன் ஒருவன்.. வாங்கிக் கடித்து பல்லை உடைப்பவன் ஒருவன்.. ஏழுகோடி பரிசென எஸ்எம்எஸ் அனுப்ப ஒருவன்.. ஏமாந்து இருப்புப் பணத்தையும் இழப்பவன் ஓருவன்.. ஒன்றுக்கு ஒன்று இலவசம் என்பவன் ஒருவன்.. வாங்கி ஒன்றுமே இல்லாமல் போய்விடும் ஒருவன்.. இந்தப் பட்டியலுக்கு முடிவில்லை…! ஏமாற்றுபவன்.. ஏமாறுபவன்.. இரண்டும் மனிதன்தான், இரண்டும் நிரந்தரம்தான்…! -செண்பக ஜெகதீசன்…

நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்

This entry is part 17 of 53 in the series 6 நவம்பர் 2011

– எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது வறண்ட பொட்டல்வெளிதான் நாளைகளில் மாற்றங்கொள்ளுமென்றதும் வணங்கிவிட்டு திரும்பினீர்கள் குறைச்சலான காலத்திற்குப் பின் மீண்டும் பொய்களோடு வருவோம் நீங்களும் ஆசைகளோடு பின்தொடர்வீர்கள்…

விலகா நினைவு

This entry is part 16 of 53 in the series 6 நவம்பர் 2011

எப்பொழுதும் எங்கள்நெஞ்சில் துஞ்சிய குழந்தையை மண்அடுக்குகளின் கீழ் புதைத்து விட்டு வெறுமையோடு வீடுதிரும்புகிறோம் மயானத்திலிருந்து. தோள்களில் இன்னும் ஊர்கிறது எறும்பைப்போல குழந்தையின் மெல்லிய மூச்சுக்காற்று. ரவிஉதயன் raviuthayan@gmail.com

நேர்மையின் காத்திருப்பு

This entry is part 15 of 53 in the series 6 நவம்பர் 2011

மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய ஆட்சி அந்தரத்து ஆரவாரமாய் தாங்கிய நினைவுகள். நேற்றைய முடிவுகளே நாளைய தீர்மானமாய் வைக்கோல் நுழைந்து உறிஞ்சும் புழுவென வழியும் எச்சில் நேர்மை வேண்டாம் வேண்டாம். நேர்மை பற்றி அறியும் சுவர்களும் யன்னல் சீலைகளின் தையல் நுனிகளும்கூட இங்கு. கட்டிய வேட்டிக்குள் சீழ்பிடித்த மனிதரும் நுழைவார் இங்கே. கைகாட்டும்வரை என்னை… அகற்றாதிருக்கட்டும் மூட்டைப்பூச்சிகளோடு சாட்சியாய் இங்கு […]

ராசிப் பிரசவங்கள்

This entry is part 14 of 53 in the series 6 நவம்பர் 2011

நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால் கோள் ராசி பயமில்லை….டாக்டரின் கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் … மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் அற்புதமான நாளன்று – அறுவை முறை கலையோடு அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம் இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும் கைமாறி காலங்கள் ஆகிப் போச்சு.. என் குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல் பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்.. டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்… சோதிடமும் […]

தாலாட்டு

This entry is part 13 of 53 in the series 6 நவம்பர் 2011

தாலாட்டு நானும் பட தனிப்பாட்டு தேவையில்லை பாராட்டும் கடலை பார்த்து படகோட்டும் பகலவனாலே ஒளிபார்த்து உள்ளம் மகிழ ஒலிக்காதோ உயிரின் ஓசை ? கேட்காத காதும் இல்லை கிடைக்காத கவிதை சொல்ல பார்க்காத கனவில் ஒன்றை பசிக்காக நீ அழுதிருந்தாலும் பாலூட்ட நிலவு வருமே பகுத்தறிவால் புசித்திருப்பாயோ ? இதயத்தில் மலரினை பூக்க இறையிடம்தான் அடத்தினால் கேட்க கைகாலை நீ உதைத்து அழுதால் காரணம்தான் நான் கேட்க மாட்டேன் எனக்காக நீதான் அழுது இதற்காக அழுவேன் சொன்னால் […]