குழந்தை ஊர்மிளா கோமதியின் முழுப் பொறுப்பு ஆனதில் அவளுக்குப் பொழுது மிக நன்றாய்ப் போய்க்கொண்டிருந்தது. தன் அம்மாவுக்குத் தானே ஒரு குழந்தை என்பதாய் அதுகாறும் நினைத்துக்கொண்டிருந்த கோமதி அந்தக் குழந்தையைக் கொஞ்சும் போதெல்லாம் தாய்மை உணர்ச்சிக்கு ஆளானாள். தன்னை வயதில் பெரியவளாய் நினைக்கவும் தலைப்பட்டாள். முன்பின் அறிமுகமே இல்லாத பிற குடும்பத்துக் குழந்தையிடம் இவ்வளவு ஒட்டுதல் ஏற்படுமா என்னும் வியப்பு அவளுக்கு அடிக்கடி வந்துகொண்டிருந்தது. அவளுள் ஏதேதோ கற்பனைகள் விரிந்தன. அப்போதெல்லாம், ‘சேச்சே’ என்று அவள் தலையைக் […]
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா 1 “சரி” என்று நான் உடன்பட்டேன் நேற்று; “இல்லை” என்கிறேன் இன்று காலையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிறங்கள் வேறாய்த் தெரிந்திடும் பகற்பொழுதில் ! 2 உன்னதமாய் வாத்தியக் கருவி இசைக்கும் போது புன்னகை புரியும் விளக்குகள் மேலும் கீழும். “என்னை நேசி”, என்பது நகைப்பாய்த் தொனிக்கும் ! உடன்பாடோ, மறுப்போ அதற்கேற்ற பதிலாகலாம். 3 மாதரின் தவறென்றோ, உரிமை […]
வாசலில் செம்மண் இட்டு கோலம் போடப்பட்டிருந்தது. வாசலில் மாவிலை தோரணம் கட்டப்பட்டிருந்தது. கூடத்தில் மாக்கோலம் போடப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. ஆண்கள் பட்டு வேட்டியிலும் பெண்கள் பட்டு சேலையிலும் தோன்றினர். மெல்லியதாக சிஸ்டம் நாகஸ்வர இசையை ஒலித்துக் கொண்டிருந்தது. ஷேக் சின்ன மௌலானாவின் நாகஸ்வரம். தோடி ராக கீர்த்தனை. “ வாங்க வாங்க “ வாய் கொள்ளாமல் வரவேற்றார்கள் சத்தியசீலனின் குடும்பத்தினர். கனகாவும் அவள் கணவன் விஜயராகவனும் எதிலும் பட்டுக் கொள்ளாமல் தனித்தே இருந்தனர். கனகா […]
பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்” ”எப்படி சொல்ற?” என்று கேட்டேன். ”என் பை பக்கத்துல அவன்தான் ஒக்காந்திருந்தான். நான் வெளியே போயிட்டு வந்தா புத்தகத்தைக் காணோம்.” ”சரி; போய் ஆறுமுகத்தை அழைத்து வா; கேட்போம்” என்றேன். அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் தான் எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அவன் […]
என்.செல்வராஜ் சிறந்த நாவல்கள் பட்டியல் —1 ல் பல எழுத்தாளர்களின் பதிவுகளை பதிவு செய்ய முடியவில்லை. சிறந்த நாவல்கள் பட்டியலையும் 62 என்கிற அளவில் முடித்திருந்தேன். இப்போது முக்கிய எழுத்தாளர்களின் பதிவுகளையும், பட்டியலில் இடம் பிடிக்கும் மற்ற நாவல்களையும் பார்க்கலாம். பட்டியல் 1 ல் டாப் 10 இடங்களைப் பிடித்த 26 நாவல்களை தர வரிசைப் படுத்தி இருந்தேன். டாப் 10 பதிவில் 3 பரிந்துரைகளைப் பெற்ற நாவல்களை 11 […]
நள்ளிரவு நேரத்திலும் […]
டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது தெரிந்தது. ஆனால். அது பல வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள். சலுகை விலையில் ஒரு கடையில் கிடைக்கும் என்றாலும் அந்த சொற்பப் பணத்திற்காக அந்த ஹீரோ படும் சிரமங்கள் கதையில் கண்ணீர் வரவழைக்கும். குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் என்றால் பெரியம்மை, கக்குவான் இருமல், போலியோ, தொண்டை அடைப்பான், நிமோனியாக் காய்ச்சல், டிஹைட்ரேஷன், மலேரியா, […]
இடம்: ஜமுனா வீட்டுக் கிணற்றடி நேரம்: முற்பகம் பதினொரு மணி உறுப்பினர்: ஜமுனா, ராஜாமணி (சூழ்நிலை: ஜமுனா கிணற்றில் தண்ணீர் இழுத்து கொண்டிருக்கிறாள். கிறீச் கிறீச்சென்று ராட்டின ஒலி கேட்கிறது. வாளி இறங்கி தண்ணீரில் தொம்மென்ற ஓசை வருகிறது. ஜமுனா கயிற்றை இழுக்கிறாள். அப்போது தெரு நடையில் செருப்பு சத்தம் கேட்கிறது) ஜமுனா: (கயிற்றை இழுத்துக் கொண்டே) யாரது? ராஜாமணி: (உள்ளே வருகிறான்) நான்தான் ஜமுனா! […]
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்(90) திங்கள் அன்று (20.10.2014) சென்னையில் போருர் ராமசந்திரா மருத்துவமனையில் காலமானார். அவர் அங்கு தங்கித்தன் இறுதி நாட்களை கழித்திட வாய்ப்பு தந்தது அந்த நிறுவனம். நாம் அந்த நிறுவனத்திற்கு நன்றி சொல்லவேண்டும். ராஜம் கிருஷ்ணன் நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதிக்குவித்த எழுத்து உழைப்பாளி. .சாகித்ய அகாதெமி,சரஸ்வதி சம்மான்,பாரதிய பாஷா விருது இலக்கியச்சிந்தனை விருது என விருதுகள் அணிவகுத்து அவருக்குப்பெருமை கூட்டின. தருமமிகு சென்னையில் தான்வாழ்ந்த வீடும் தன் கணவன் கிருஷ்ணன் மறைந்த பிறகு தனக்கு […]
முருகபூபதி எல்லாம் இழந்து நிர்க்கதியான பின்னரும் தனது உடலை தானமாக வழங்கிய சகோதரி ராஜம் கிருஷ்ணன். அவுஸ்திரேலியா – சிட்னியில் கடந்த 14 ஆம் திகதி மறைந்த மூத்தபடைப்பாளி காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் சிட்னி மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து மெல்பன் புறப்படும் ரயிலில் அமர்ந்திருக்கின்றேன். பத்திரிகையாளர் சுந்தரதாஸ் கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றார். காவலூரை வழியனுப்பிவிட்டு புறப்பட்டீர்கள். மற்றும் ஒருவரும் மீள முடியாத இடம் நோக்கிப்புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது என்றார். யார்…? எனக்கேட்கின்றேன். […]