திண்ணையின் இலக்கியத்தடம்-4

This entry is part 7 of 31 in the series 13 அக்டோபர் 2013

மார்ச் 5, 2000 இதழ்: கவிதைகள்: காதல் என்பது பலவிதம் – பாரி பூபாலன் மூன்றில் வேம்பு – வ.ஐ.ச.ஜெயபாலன் ஒரு குறிப்பு: தேதிவாரியான பழைய இதழ்களுக்கான சுட்டியின் வழியே பழைய இதழ்களை வாசித்து எழுதி வருகிறேன். ஆனால் சில சமயம் பிந்தைய இதழில் குறிப்பிடப்படும் இதழ்கள் முந்தைய இதழின் வாசிப்பில் கிடைக்கவில்லை. உதாரணத்துக்கு 27 மார்ச் 2000 இதழில் இதாலியோ கால்வினோ பற்றிய முந்தைய கட்டுரையை கோபால் ராஜாராம் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு முன் அப்படி […]

நினைவுகளின் பரண் – கல்யாண்ஜியின் ‘பூனை எழுதிய அறை’

This entry is part 6 of 31 in the series 13 அக்டோபர் 2013

மொழி ததும்பும் மனம் வாய்க்கப் பெறுவது ஒரு பெரும்பேறு. சட்டென்று வெள்ளம் பொங்கிப் பெருகும் நாட்களில் கிணற்றின் மேல்விளிம்புவரைக்கும் உயர்ந்துவந்து ததும்பும் தண்ணீர்போல மொழி மனத்தில் பொங்கித் ததும்புகிறது. அத்தருணம் ஒரு படைப்பாளியின் வாழ்வில் ஓர் அபூர்வத்தருணம். மொழி பழகும் ஒரு குழந்தை கண்ணில் படுகிற ஒவ்வொன்றுக்கும் தன் போக்கில் ஒரு பெயரைச் சொல்லி அடையாளப்படுத்தி அழைக்கத் தொடங்குவதுபோல, அந்த அபூர்வத்தருணத்தில் படைப்பாளி தன் கண்ணில் தென்படும் ஒவ்வொன்றையும் புதிதாகப் பார்க்கிறான். புதிதாக அடையாளப்படுத்த முனைகிறான். புதிய […]

அழகிப்போட்டி

This entry is part 5 of 31 in the series 13 அக்டோபர் 2013

ப.அழகுநிலா   “கொஞ்சம் தள்ளி ஒட்கார முடியுமா? நின்னு நின்னு கால்வலி உசுரு போவுது” ‘’அதுக்கென்ன! இப்படி ஒட்காருங்க. இந்த போட்டில இப்பதான் மொத தடவையா கலந்துக்கிறிங்களா!’’ “ஆமாம். எப்படி கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க?’’ ‘’போட்டி ஆரம்பிச்சு ரெண்டு மணிநேரம் கூட ஆகலை. அதுக்குள்ள கால்வலிக்குதுங்கிறிங்களே! அதை வச்சுதான்’’ “போட்டி முடிய இன்னும் எவ்வளவு நேரமாகும்?’’ ‘’அது சாயந்திரம் ஆயிடும். எடையில லன்ச் பிரேக் ஒரு மணிநேரம்’’ ‘’நீங்க எத்தனை வருஷமா கலந்துக்கிறிங்க?’’ ‘’இந்த போட்டி ஆரம்பிச்சதிலேந்து கிட்டத்தட்ட […]

சிலை

This entry is part 4 of 31 in the series 13 அக்டோபர் 2013

                    டாக்டர் ஜி. ஜான்சன்   ஒரு விடுமுறையில் தமிழகம் சென்றிருந்தேன். அப்போது மகாபலிபுரம் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க விரும்பினேன். நான் கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நாவலை விரும்பி திரும்பத் திரும்ப பலமுறைகள் படித்து மகிழ்ந்திருந்ததால் மகாபலிபுரம் மீது அதிகமான ஈர்ப்பு உண்டானது.           முன்பே அங்கு நான் சென்றிருந்தாலும் இந்த முறை அங்குள்ள சிற்பக் கலை மீது கவனம் செலுத்த முடிவு செய்திருந்தேன் .           முதலில் கடற்கரைக் கோவில் சென்றேன். […]

மருத்துவக் கட்டுரை நெஞ்சு படபடப்பு

This entry is part 3 of 31 in the series 13 அக்டோபர் 2013

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்            நெஞ்சு படபடப்பு அல்லது மார்புப் படபடப்பு ( palpitations ) என்பது அளவுக்கு மீறிய இருதயத் துடிப்பாகும். இது வியாதி இல்லாமலும் ஏற்படலாம், அல்லது இருதயப் பிரச்னையாலும் உண்டாகலாம். கடும் உழைப்பு, கவலை, பரபரப்பு காரணமாகவும் இது ஏற்படலாம்.           சாதாரணமாக நமது இருதயத் துடிப்பை நாம் அறிவதில்லை. சில வேளைகளில் இருதயம் வேகமாகத் துடிப்பதை நம்மால் உணரமுடியும். இதையே நெஞ்சு படபடப்பு என்கிறோம்.அதிகமான மது , புகைத்தல் , […]

மேத்தாவின் கவிதைகளில் எதிர்காலம் குறித்த பதிவுகள்

This entry is part 2 of 31 in the series 13 அக்டோபர் 2013

ப. லட்சமி முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதிநேரம்), தமிழாய்வத்துறை பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, (தன்னாட்சி) திருச்சிராப்பள்ளி   படைப்பாளன் படைப்புகளில் தான் வாழும் காலத்தையும் பதிவு செய்கிறான். தனக்கு முந்தைய காலத்தையும் மதிப்பிடுகிறான். அதே நேரத்தில் எதிர்காலம் பற்றிய பதிவுகளையும் அவன் உணர்த்திநிற்கிறான். இம்முக்காலத்தையும் பதிவாக்கும் இலக்கியம் நல்ல படைப்பாக உயர்ந்து நிற்கிறது. முக்காலத்தையும் உணர்த்துதலே படைப்பாளனின் கடமையும் ஆகின்றது. ஒவ்வொரு படைப்பாளரிடத்திலும் இத்தகைய மூன்று காலத்தின் இயல்புகளைப், பண்புகளைக் காணமுடிகின்றது. புதுக்கவிதை உலகில் தனித்த இடம் […]

தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்

This entry is part 23 of 31 in the series 13 அக்டோபர் 2013

  வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் […]

தேவிபாரதி – ‘ஒரு மரணத்தின் வீச்சம்…. ’

This entry is part 30 of 31 in the series 13 அக்டோபர் 2013

அவள் ஒரு பௌதிக மாணவி.அவளது வீட்டின்  கடிகாரம் திடீரென வினோதமாக பின்னோக்கிச் செல்கிறது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, பதினொரு மணி ஆறு நிமிடங்கள் இருக்கும் போது தான் அவள் கடிகாரத்தை கவனித்தாள்.  அவளது வாழ்வில் அது  மிக முக்கியமான நேரம்  என்பதால் அதனை அவள் தனது மனதில் குறித்தும் கொண்டிருந்தாள். அதன் பின் மிகப் பதட்டமாகவும் பயங்கரமாகவும் நகர்ந்த நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் இப்போதுதான் கடிகாரத்தைக் கவனிக்கிறாள்.நேரம் பின்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.அதனை அவள் உறுதிப்படுத்த கடிகாரத்தை உற்று […]

டௌரி தராத கௌரி கல்யாணம் …22

This entry is part 12 of 31 in the series 13 அக்டோபர் 2013

  குழந்தைகள் இரண்டும் ஒரு சேர அழுவதைக் கேட்டபடி, பாலை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சித்ரா, என்னாச்சுடி….கௌரி ரெண்டும் இப்படி அழறது…பாவம்…ரொம்பப் பசிக்கறதோ என்னமோ…இந்தா பாலைக் கொடு…..இதென்ன உன் கையில் லெட்டர்…இங்க கொடு பார்க்கலாம்..வாங்கியவள் அறைக்கு வெளியில் வந்து பிரித்துப் பார்க்கவும், ஓ ..இது அவரோட எழுத்து மாதிரி இருக்கே…யாருக்காக்கும்…? என்னும் கேள்வியோடு படிக்க ஆரம்பிக்கிறாள் சித்ரா. கணவர் கடைசியாக தனது கைப்பட எழுதிய கடிதம்..அது எப்படி இந்த நேரத்தில் காசியில் தனது கையில் கிடைக்க […]

நீங்காத நினைவுகள் – 19

This entry is part 1 of 31 in the series 13 அக்டோபர் 2013

தொட்டதும் சுட்டதும் தொட்டது கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ஒரு வார இதழில் “இந்துத்துவம் என்பது…’ எனும் தலைப்பில் எனது சிறுகதை ஒன்று வெளிவந்தது. அது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாகும்.  ஆனால், அவ்வார இதழின் ஆசிரியர் நான் எழுதாத ஒரு வாக்கியத்தை ஒரு கதாபாத்திரம் சொல்லுவது போல் இடைச் செருகல் செய்து விட்டிருந்தார். “இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்!” என்கிற அந்த இடைச்செருகல் மற்றவர்கள் இந்தியர் அல்லர் என்னும் கருத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அது எனது கருத்துப் போன்றும் […]