இலக்கியா தேன்மொழி நடப்பதைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள் என்றாலும், எல்லாரும் இப்படி இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. இந்த படம் எல்லோருக்குமான படம் அல்ல. மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். 1. புரிந்துகொள்ள எளிமையான உறவுகளை பழகுபவர்கள், துணைக்கென காத்திருப்பவர்களை நான் இந்த பிரிவில் அடைக்க விரும்புகிறேன். 2. புரிந்துகொள்ள கடினமான உறவுகளை பழகுபவர்கள். துணைக்கென காத்திருக்காதவர்களுக்கு இந்த பிரிவு. ‘நான் ஒரு விர்ஜின் ஆம்பளை. எனக்கு விர்ஜின் பொண்ணு தான் வேணும்’ என்கிற டயலாக்கும், ‘என்னை […]
(மிதிலா விலாஸ் தொடரின் அத்தியாயங்கள் 14லிருந்து 18 வரை பதிவு பெறாமல் விடுபட்டு விட்டது. தவறுக்கு வருந்துகிறோம். வாசகர்களும், ஆசிரியரும் மன்னிக்க வேண்டுகிறோம். விடுபட்ட அத்தியாயங்கள் இரு வாரங்களில் வெளியாகும். – ஆசிரியர் குழு.) தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மைதிலி சித்தார்த்தை வீட்டுக்கு அழைத்து வரும்போது அந்தி மயங்கும் நேரமாகிக் கொண்டிருந்தது. சாலைகளில், வீடுகளில் மின்விளக்குகள் எரியத் தொடங்கின. மழை வரும் அறிகுறி இல்லாமல் வானம் தெளிவாக இருந்தது. மைதிலியின் காரைப் […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நள்ளிரவு நேரம். இரண்டு மணி ஆகி விட்டது போல் கடியாரத்தில் மணி அடித்தது. படுக்கையறையில் அபிஜித் ஒருக்களித்து படுத்தபடி ஆழமான உறக்கத்தில் இருந்தான். அவன் இடது கை மைதிலியின் தலையைச் சுற்றிலும் வளைத்தது போல் அவள் தலையணையின் மீது இருந்தது. ஆனால் அவன் பக்கத்தில் மைதிலி இருக்கவில்லை. பக்கத்து அறையில் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மைதிலி நாற்காலியில் உட்கார்ந்து மேஜை விளக்கு அருகில் குனிந்து இந்த […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நல்ல வேளையாக அரவிந்தின் பாட்டி ஊரில் இல்லை. உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு சென்றிருந்தாள். மறுநாள் காலையில் அந்த ஊர் அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். “மைதிலி! பூனாவில் எங்க உறவினர் ரமாகாந்த் இருக்கிறார். அங்கே போய் விடுவோம். அவர் நமக்கு ஆதரவு தருவார்” என்றான். இருவரும் அன்றே கிளம்பிப் போனார்கள். இரண்டு மாதங்கள் கண்மூடித் திறப்பதற்குள் பறந்து விட்டன, மைதிலிக்கு வாழ்க்கை […]
நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய் அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய் மின்ன்ணு ஒத்திகைகள் எப்போதும் முழு ஒப்பனையுடன் ஒப்பனையின்றி ஒத்திகையின்றி சாட்டையால் கத்தியால் தன்னை ரணமாக்கும் கல்லூளிமங்கன் சலங்கை சத்தம் மேல் தளத்தில் இருக்கும் என் அறை வரை எட்டுவதில்லை இம்மாநகரின் ஏதோ ஒரு மூலையில் அவன் இருக்கக் கூடும் நிச்சயம் அவன் முகநூலில் […]
அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!… வரும் 8 அக்டோபர் 2015 அன்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள். அவரின் நினைவினப் போற்றும் முகமாக பாட்டரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்நிகழ்வு வரும் 10 அக்டோபர் 2015, சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்திட ஏற்பாடு செய்திருக்கின்றோம். அனுமதி இலவசம் . அனைவரும் வந்திருந்து கவிஞர்களின் கவிச்சுவையைப் பருகிடவும் மக்கள் கவிஞரைப் போற்றிடவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். அன்பின் இரா […]
அ. இளவரசி முருகவேல் பக்தி இலக்கியத்தில் இறைவன் மீது கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடாக பல செய்யுள்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் இறைத் தொண்டர்கள் தங்களின் பக்தியுணர்வுகளை செய்யுள் வடிவிலும் பா வடிவிலும் இயற்றியதோடு இறைபக்தி, இறைவனை வணங்கும் முறைகள் போன்றவற்றை அவர்களின் பாக்கள் வாயிலாக நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. அவ்வகையில் பிறமொழிக் கருத்துக்களல்லாமல் தமிழ்மொழியில் முதன்முதலாக பக்திச்சுவையை எடுத்துணர்த்தும் வகையில் எழுதப்பட்டது பெரியபுராணம். இப்புராணத்தில் சிவனை போற்றி பாக்கள் எழுதிய 63 மூவர்களின் பக்தியைப் பற்றியும் பெருமளவில் சுந்தரரின் பக்தியுணர்வைப் […]
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால் மறைந்த மாபெரும் எழுத்தாளரும், அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தின் பிரதம இலக்கிய ஆலோசகராக இருந்தவருமான எஸ்.பொ. அவர்களின் ஓராண்டு நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர் ஆகக்கூடியது மூன்று சிறுகதைகளை அனுப்பலாம். அவை போட்டியாளரின் சொந்தப் படைப்புக்களாக இருத்தல் வேண்டும். சிறுகதைகள் தமிழ் ஒருங்குகுறி(Unicode) அல்லது பாமினி […]
அற்புதநாதர் ஆலயத்தைப் பார்த்ததும் எனக்குப் புத்துயிர் பிறந்தது. அது கிராமத்தின் சிற்றாலயமாக இருந்தாலும் அங்கே பல அற்புதங்கள் நடந்துள்ளது எனக்கு ஞாபகம் வருவதுண்டு. அம்மாவுக்கு நல்ல பாம்பு கடித்து விஷம் ஏறி நினைவிழந்தபோது சிறுவனான அண்ணன் அங்கு மெழுவர்த்திகளுடன் ஓடி ஜெபம் செய்தபோது ஊரே வியக்கும்வண்ணம் அற்புதமாக உயிர் பிழைத்துள்ளார்! ? இஸ்ரவேல் உபதேசியார் ஜெபம் செய்து எண்ணெய் தருவார். அதைப் பயன்படுத்திய பல நோயாளிகள் குணமாகி, அந்த செய்தி சுற்று வட்டார கிராமங்களுக்குப் பரவியபின்பு கூட்டம் […]