ஒரு முறை தோல்வியின் வலி உயிரின் வேரை பிடுங்கிவிட்டு திரும்பும் போது தோல்வியோடு வலியும் மனப்பாடமாகி போவதில் ஆச்சரியமில்லை இரவை தோற்று பகல் அழிவதில் மழை தோற்று வெயில் அழிவதில் இரைச்சல் தோற்று மௌனம் அழிவதில் கனவுகள் தோற்று வாழ்க்கை அழிவதில் பிணி தோற்று உடல் அழிவதில் முதுமை தோற்று அழகு அழிவதில் துன்பம் தோற்று இன்பம் அழிவதில் உலகமயமாக்கல் தோற்று விவசாயம் அழிவதில் அரசியல் தோற்று மக்கள்ஆட்சி அழிவதில்.. வறுமை தோற்று ஆசை அழிவதில் ஆணவம் […]
ரிஷி ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று என் கண் முன். அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும் பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன். அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன். அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம் வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை. விரையும் வேகத்தில் ‘ராணுவ வீரனின் பொம்மை கைநழுவி சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக, பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில் நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில் இன்றும் […]
லதா ராமகிருஷ்ணன் மரணதண்டனை கூடாது என்ற கருத்திற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது. மானுட வாழ்க்கையை முன்னின்று வழிநடத்திச்செல்வது அன்பும், அக்கறையும், அனுசரணையும், விட்டுக்கொடுக்கும் இயல்பும், மன்னிக்கும் மனோபாவமுமே. [ஒரு பிரச்னையில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைத்து தரப்பினரிடமும் இவையாவும் இடம்பெற்றிருக்கவேண்டியதும் இன்றியமையாதது]. யார் அதிக வல்லமையாளர்களோ அவர்களே வெல்வார்கள் என்பதே வாழ்க்கைநியதி என்று சொல்லப்படுவது ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதுவே ஒட்டுமொத்த உண்மையல்ல. அதே சமயம், ‘மரணதண்டனை கூடாது’ என்ற இயக்கம் தொடர்ந்த ரீதியில் நடத்தப்படவேண்டிய ஒன்று. கருத்தியல் ரீதியாக இது […]
_கோபால்தாசன் எனக்கான வீடு இது. என் சிந்தனையின் பட்டறை என்றுகூடச் சொல்லலாம். தோற்றம் பழைய கட்ட்டிடமாக இருந்தாலும் உள்ளிருக்கும் ஒவ்வொரு அறையும் என்னுள்ளிருக்கும் உறுப்புகளாய்… மிளகாய் விதை இட்டு முளைத்த செடிகளும் உண்டு. திருட்டுத்தனமாய் பிடுங்கி வந்து நட்ட பூச்செடியும் உண்டு. அப்பா அம்மா இருந்தும் இல்லாத அந்தப் பருவம் அவிழ்த்து விட்ட கன்று போன்றது. பக்கத்து வீட்டிற்கும் என் வீட்டிற்கும் மதிற்சுவர் பொது என்பதால் அடிக்கடி அம்மாவும் பக்கத்துவீட்டு அக்காவும் தலையை நீட்டிப் பேசிக்கொண்டிருக்கும் பேச்சில் […]
நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம். ஜெயராணி பூபாலசிங்கம்-அதீதா-சத்யா தில்லைநாதன்-தர்சன் சிவகுருநாதன்-ரெஜி மனுவல்பிள்ளை-பிரசாத் சிவகுருநாதன்-முத்து கிருஸ்ணன்-கிருபா கந்தையா-தர்சினி வரப்பிரகாசம் ஆகியோர் அடேலின் கைக்குட்டை நாடகத்தின் பாத்திரங்களை ஏற்று நடிக்கின்றார்கள். நடன அமைப்பு-தர்சினி வரப்பிரகாசம் பிரதி ஆக்கம் இயக்கம்: பா. அ. ஜயகரன் — Tamil Resource Centre (Thedakam) Toronto, Ontario, Canada 416 840 7335 www.trcto.org