இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?

This entry is part 41 of 41 in the series 25 செப்டம்பர் 2011

(குறிப்பு: இந்த பேச்சு மேற்கத்திய ஒன்டாரியோ, கனடா பல்கலைக்கழகத்தின் முஸ்லீம் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மார்ச் 9, 2011 விவாதத்தில் வழங்கப்பட்டது ஹம்சா ட்சோர்டிஸ் (Hamza Tzortzis) இங்கிலாந்தைச் சேர்ந்த முஸ்லீம் அறிஞர், மற்றும் டாக்டர் காலித் சோஹைல் இடையே நடந்தது) பெரியோர்களே, தாய்மார்களே, நான் இஸ்லாமிலிருந்து வெளியேறி மதசார்பற்ற மனிதநேயத்தை அடைந்த என் பயணத்தின் சிறப்பு பகுதிகள் மற்றும் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள மேற்கத்திய ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் என்னை அழைத்த முஸ்லீம் மாணவர்கள் […]

ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்

This entry is part 40 of 41 in the series 25 செப்டம்பர் 2011

கலாநிதி ஆ.கந்தையா ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இலங்கையில் இருந்தபோது கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்த பல பதவிகளை வகித்தவர். தமிழ்மொழி, சமயம், சிறுவர் இலக்கியம், கவிதை, நாவல், கட்டுரை, ஆய்வு என பல துறைகளில் பங்களிப்புச் செய்திருக்கிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இதுவரை 45 நூல்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள் ஆஸ்திரேலியா சார்ந்து மட்டும் எழுதிய பத்துக்கு மேற்பட்ட நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. இந்த வகையில் 1998 இல் வெளிவந்த ‘ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல்’ என்ற நூல் பற்றிய அறிமுகமாக […]

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47

This entry is part 39 of 41 in the series 25 செப்டம்பர் 2011

   சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 47 பிடிஎஃப் கோப்பு   இந்த வாரம் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம்.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.   १. अहं क्रीडित्वा पठामि।(ahaṁ krīḍitvā paṭhāmi|) நான் விளையாடிவிட்டுப் படிக்கிறேன். २. सः स्थित्वा गायति। (saḥ sthitvā gāyati |) அவன் நின்றுகொண்டு பாடுகிறான்.   ३. अम्बा पाकं कृत्वा परिवेषयति। (ambā pākaṁ kṛtvā pariveṣayati|) அம்மா சமைத்துவிட்டுப் பரிமாறுகிறாள். […]

இலக்கியவாதிகளின் அடிமைகள்

This entry is part 38 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பாவலர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள்.  சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.   இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள்.  பின்னர் அவர்களுள் சிலர் விட்டு விடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போது.  சிலர் தொடர்கிறார்கள்.  சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள்.  சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள்.  சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெகட்டிவ் பப்ளிசிட்டியைப் பெற்றுக் […]

நவீனத்துவம்

This entry is part 37 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மரப்பாச்சி பொம்மை மறைத்து மயில் தோகை பக்கம் மறந்து பைசா கைச்செலவு தவிர்த்து குச்சு ஐஸ் பிசுபிசுப்பு விலகி பள்ளிக்கூட வாசல் நெல்லிக்காய் இழந்து, தெருக்கோடி விளையாட்டு அறுத்து என் மகனும் பழமைத்துவம் அளித்த நவீனத்துவம் பழகுகிறான் செயற்கையாய்……..     ராசை நேத்திரன்

பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்

This entry is part 36 of 41 in the series 25 செப்டம்பர் 2011

சிங்கமும் முயலும்   ஒரு காட்டில்  சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தது. எந்த மிருகத்தைக் கண்டாலும் அதற்குப் பிடிக்க வில்லை. இந்த நிலைமையில் மான், பன்றி, எருமை, எருது, முயல் முதலிய வன மிருகங்களெல்லாம் ஒன்று கூடின. எல்லாம் சேர்ந்து முகவாட்டத்துடன் சிங்கத்திடம் போயின. கால் முட்டுக்கள் பூமியைத் தொடும்படி மண்டியிட்டுத் தலை வணங்கின. மிகவும் தாழ்மையுடன், ”அரசே! இப்படி நீங்கள் அர்த்த […]

முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்

This entry is part 35 of 41 in the series 25 செப்டம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அந்த பிறைச் சந்திர தெருவில் மேடேறிப் போகிறேன். பிகாதிலியின் உற்சாகப் பொங்கலும் கலகலப்பும் அடங்கி இங்கே அமைதி ஆளைத் தழுவியது. கௌரவமான, பிறத்தியாரை மதிக்கிற அமைதி அது. நிறைய வீடுகள் பகுதிகளை வாடகைக்கு என்று அளித்தன. என்றாலும் அதை பறைசாற்றி வாடகைக்கு என அறிவிப்பு தொங்கவில்லை. சில வீடுகளில் பளபளப்பான பித்தளைத் தகடு அவர்கள் பெயர்பொறித்து. அவர் மருத்துவர் என்றால் தொழிலை அவை அறிவித்தன. வாசல் கதவுக்கு மேல்பக்க ஜன்னலில் அழகாய் அபார்ட்மென்ட் […]

தற்காலப் பார்வையில் திருக்குறள்

This entry is part 34 of 41 in the series 25 செப்டம்பர் 2011

திரு. பெ. சக்திவேல், உதவிப்பேராசிரியர், ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம். இந்தியத் திருநாடு வள்ளுவர் காலத்திருந்த மன்னராட்சி முற்றிலும் ஒழிக்கப்பட்டு மக்களை மக்களே ஆளும் மக்களாட்சி முறை (அ) குடியாட்சி முறை சென்ற நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. “மாற்றம் என்பது மானுடத் தத்துவம்’ என்பார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எல்லாக் காலத்துக்கும் நிலைபெற்ற உண்மைகள்/நீதிகள் என்று ஒன்றுமே இல்லை. உண்மைகளும் நீதிகளும் காலத்துக்குக் காலம் இனத்துக்கு இனம் மொழிக்கு மொழி மாநிலத்துக்கு மாநிலம் […]

மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்

This entry is part 33 of 41 in the series 25 செப்டம்பர் 2011

முனைவர்.மு.முருகேசன் உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, வடசென்னிமலை,ஆத்தூர். வகுப்பறைகளை விவாத களங்களாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனைத் தாக்கத்தை கல்வியாளர் பாவோலோ ப்ரையரிடமிருந்தும், பேராசிரியர் மாடசாமி இடமிருந்தும் நான் பெற்றுக் கொண்டேன். தற்பொழுது அதை செயல்படுத்துவதற்கான முயற்சியிலும், பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக கூறப்படும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனை 21 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றப்பட இருக்கும் சூழல் என் மனத்தை கனமாக்கியது. அந்த நினைவோட்டத்தின் ஒரு […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)

This entry is part 32 of 41 in the series 25 செப்டம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “நீ செல்வந்தருக்காக ஊன்றும் உறுதியின் விளைவுகளை எதிர்காலத்தில்தான் நீ அறுவடை செய்வாய். ஏனெனில் இயற்கை நியதிப்படி அனுப்பியவை யாவும் திருப்பிவரும் தமது மூல இடத்துக்கு ! நீ பட்ட துயரங்கள் களிப்பிடத்துக்குத் திரும்பிவரும், மேலுலக விதிப்படி. எதிர்காலத்தின் பல பிறவிகளில் நேசம், சமத்துவம் ஆகிய இரண்டால் கற்ற பாடங்கள் துயரம், வறுமை என்பது தெரியவரும்.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) “என் […]