*மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் * *அறம் • அரசியல் • இலக்கியம்* *இரு நாள் உரைகளும் கருத்தமர்வுகளும்.* * * * • கலாநிதி இ. பாலசுந்தரம் • பா. தேவகாந்தன் • தீபன் சிவபாலன் • ஜெனிற்றா நாதன் • கிருத்திகன் குமாரசாமி • வின்சன்ட் போல் சந்தியாப்பிள்ளை • இரா சிவரட்ணம் • பா. அ. ஜயகரன் • பால சுகுமார் • விஜய் சவரிமுத்து • ராம் சர்வேந்திரன் • பொன்னி அரசு […]
எப்போதோ பார்த்தவர்களெல்லாம் எதிர்பாராது வந்து போகிறார்கள் இப்போது. திருட்டுக் குற்றம் சாட்டின பழைய ஊரின் பக்கத்துவீட்டுக்காரர் பிரியவே மாட்டோம் எனச் சத்தியம் செய்து பின் காலச் சூழலில் பிரிந்துபோன பள்ளி நாட்களின் இணைபிரியா நண்பர்கள் எனப் பழகியவர்கள் மட்டுமில்லாது கண்களால் மட்டும் பேசிக்கொண்டிருந்த ரகசியக் காதலிகள் கூட எதிர்பாராது வந்து பேசிப் போகிறார்கள். வந்து பார்த்ததும் பேசிப்போனதுமே பழகிய பாசம் தந்த பெரிய பரிசென்றிருக்கும் அக்காவுக்கு அமெரிக்க சித்தப்பா வெறுங்கையோடு சும்மா வந்தது மட்டும் பிடிக்கவேயில்லை. — […]
பச்சை வயல்வெளி .. பக்கத்தில் காவலுக்குப் பனை மரங்கள்…!! —————————————- என்றும் நீ கூண்டில்.. நான் நீதிபதி.. மனசாட்சி.! ————————————– பூமியை அளக்கிறதோ..? நெடுஞ்சாலைகள்..! —————————————– இரவும் பகலும் ஒன்றுதான் உறங்குபவனுக்கு..! ——————————————- மீண்டும் தாய்வீடு… நிம்மதியாய்…. விதைநெல்..! _________________________ வான்மேகங்கள் வேடிக்கை பார்க்கும் பூமியில் சாகசங்கள்..! _________________________ வில்லு போல் உடல் புறப்படும் அம்பு.. குறிகோள்கள்..! _________________________ கரும்புக் காடுகள் இரும்புகளால் முள்வேலி..! _________________________ சிறு புல்லும் நெடு மரமும் எண்ணுமாம் தாங்களே பூமிக்குத தூண்..! […]
கவிதாவஸ்தை வந்து எழுதும் கவிஞர்கள் மத்தியில் கவிதைகளை சுகமாகப் படிக்க முடிவது பத்மஜாவின் எழுத்துக்களில்தான். வலைப்பதிவர்களில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்க கவிஞர் பத்மஜா. தனிமையும் அன்பும் பரிவும் நிரப்ப இயலாத வெற்றிடங்களும் நிரம்பிக் கிடக்கும் கவிதைகளில் மலைப்பாதையில் நடந்த வெளிச்சம் இப்போதெல்லாம் பாதைகள் இருண்டு கிடப்பது குறித்து பெரும் சோகத்தைக் கிளர்விக்கிறது. நாய்க்குடைகள் மலர்வது சிறுமியின் பருவமாற்றத்தை சட்டென்று புரிய வைக்கும் கவிதை. ஓவியப் பார்வையை ஓவியக்கண்காட்சிகளில் நாம் யோசித்து யோசித்துப் பார்க்கும் ஒரு ஓவியத்தின் மீதான மனிதர்களின் […]
கூடுகளில் அடைபட்ட புறாக்கள் கல்லெறிந்து தீ எரித்து இரவினில் கலைத்து விடுவதற்கல்ல விடிகாலையில் தீனிகொத்தும் அழகைரசித்து குழந்தைகளோடு தத்தித்தத்தி நடந்தாடும் ஒரு கூட்டம் புறாக்கள் முன்பொரு நாள் நேர்ச்சைக்கடனுக்காய் வழங்கிய குஞ்சுப்புறாக்களும் இவற்றில் காணக்கூடும் பறக்கவும் நடக்கவும் தெரிந்த புறாக்கள் மினராக்களில் உட்கார்ந்து நடுங்குகிறது.
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பயணத் துக்கு அவர் புறப்பட்டு விட்டார் என்று புரிந்து கொண்டேன். எனக்குத் தெரிந்து விட்டது அது. கால்நடைப் பயணியின் அந்த அறிவுரை ஆலய மணி போல் அடித்திடும் என் நெஞ்சினில் ! எங்கே வந்துள்ளார் அவர் ? எப்போது அவர் வருவது கடற் கரை மேல் கான கத்தின் முடிவு எல்லையில் ? வானம் விடாது முணுமுணுக்கும் அதனை ! வெகு தூர மூலை […]