மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்

This entry is part 15 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நிறுவனர்-தலைவர், வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்(WELFARE FOUNDATION OF THE BLIND) [ஓய்வுபெற்ற பேராசிரியர், ஆங்கிலத்துறை, கிறித்துவக்கல்லூரி, தாம்பரம், சென்னை 13.05.1934 – 25-09.2012 *   அதிராத குரல், நிதானம் தவறாத அணுகுமுறை, எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் பாங்கு, பார்வையற்றவர்களுடைய உரிமைகளுக்காகவும், நலவாழ்வுக்காகவும் ஓயாமல் உழைக்கும் ஆர்வம், மன உறுதி, பார்வையுள்ளவர்கள் பார்வையற்றவர்களுக்கு எதிரி என்று பாவிக்காத மனத்தெளிவும், புரிதலும் கொண்ட பண்பு, அறிவைப் பெருக்கிக்கொள்வதில் சலிக்காத தேடலும் ஆர்வமும், எல்லோரிடத்தும் அன்பு […]

காதல் துளி

This entry is part 14 of 36 in the series 30 செப்டம்பர் 2012

கரையைத் தொட்டுப் பின் செல்லும் அலைகள் எல்லாம் வேறு வேறு என்றாலும் அலைகளில் அடர்ந்த நீர்த்துளிகளுமா வேறு வேறு? ஓர் அலையில் ராட்டினமாடிக்கொண்டு வந்தவை அணிமாறி அடுத்தத் தொகுப்பில் அடைந்துகொண்டு எத்தனை முறை புரண்டெழுந்தாலும் கரைக்குத் தெரியும் எந்தத் துளியின் முத்தம் தன் மடியில் குமிழாய்ப் பொரிந்ததென்று ! — ரமணி

ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்

This entry is part 13 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து எத்தனை லாவகமாக, தங்களுக்கு எந்தவிதச் சேதார முமில்லாமல் கல்லெறிந்துகொண்டிருக்கிறார்கள் என்று வெகுஜன ஊடகங்கள், குறிப்பாக, தொலைக்காட்சி நிறுவனங்களைப் பார்த்து வியக்காமலிருக்கமுடியாது. இப்படிச் சொல்வது நிச்சயம் வஞ்சப்புகழ்ச்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் ஏற்படத் தேவையில்லை. பெண்ணை நுகர்பொருளாகவும் இரண்டாந்தரப் பிரஜையாகவும் 24×7 நேரமும் காட்டி யவாறே, இவ்வாறான பல வழிகளில் பெண்ணிடம் உருவேற்றப் பட்டுள்ள, உருவேற்றப்பட்டுவருகிற பெண்பிம்பங்களுக்காக, பெண்ணைப் பற்றிய எதிர்மறைக் கருத்தாக்கங்களுக்காக பெண்ணுரிமை பற்றியெல்லாம் ஓங்கிக் குரலெடுத்துப் பேசுவதையும் வெகு விமரிசையாக செய்துவருகி […]

ஓடியது யார்?

This entry is part 12 of 36 in the series 30 செப்டம்பர் 2012

பரசுவால் நீலு பேசும் ஒரு வார்த்தைளை பொறுத்துக் கொள்ளவோ மன்னிக்கவோ முடியவே இல்லை. கோபித்து கொள்ளவோ தடுக்கவோ தைரியமுமில்லை. அவளுடைய பேச்சுக்குப் பேச்சு அதை கேட்க நேர்ந்தது. மனம் திடுக்கிட்டு பதறுகிறது. ஆனால் அதற்கு ஒரு காரணமிருந்தது. அவன் சிறுவயதிலேயே யாரோ சொன்ன விஷயம் மனதில் பதிந்து போனது வேறு. யார்? பாட்டிதான் சொன்னாள். ஆமாம். “சிவசுவோட அம்மா குடுகுடுப்பாண்டியோட ஓடிப் போயிட்டாளாம். பாவம் குழந்தைகளை தாத்தா-பாட்டிகிட்டே வுட்டுட்டு அப்பன்காரன் கண்காணாம போயிட்டான். அவமானம்தாங்காம போயிட்டாலும் குழந்தைகளுக்காக […]

நான்கு நண்பர்களும் சசிகுமாரும்

This entry is part 11 of 36 in the series 30 செப்டம்பர் 2012

Beautiful Comeback for Sasikumar!,தொடர்ந்து ரசித்து வந்த என்னை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டேயிருந்தார் நாடோடி’களுக்கப்புறம்.இப்போது திரும்பவும் நம்மை அவர் பக்கம் திருப்பியிருக்கிறார் சசி..! என்ன கொஞ்சம் சுப்ரமணியபுரம்/நாடோடிகள் சாயல் இருந்தாலும் அழகான காதல் கதை..! சுந்தரபாண்டி “பஸ்”பாண்டியாவே போய்ருமோ முதல் பாதி முழுக்க பஸ் பஸ் ..பஸ் மச்சி :-) # அழகுப்பாண்டி..! Friends களுக்காக எல்லாத்தையும் விட்டுக்குடுக்குறார்ப்பா நம்ம சசிகுமார். பகைவனுக்கும் அருள்கிறார் நம்ம சசி. கொஞ்சமா தலைய மட்டும் சாய்ச்சிக்கிட்டு தாடிய லேசா நீவிவிட்டுக்கொண்டு […]

சிறை

This entry is part 10 of 36 in the series 30 செப்டம்பர் 2012

மேலே திடீரென விழுந்து ஊர்ந்த கரப்பானைத் தட்டி விடும் முயற்சியில் மாடத்தில் இருந்த குளிக்கும் சோப்பு டப்பாவுடன் கீழே விழுந்தது. அவனுக்கு வியர்த்தது. இருள் சூழ்ந்த நிலையில் அடுத்த அடி எடுத்து வைக்கும் போது சோப்பு வழுக்கி விடுமோ என்று ஐயமாயிருந்தது. தட்டுத் தடுமாறி ‘வெஸ்டர்ன்’ கம்மோடின் மீது அமர்ந்தான். ஏன் இப்படி நிகழ்கிறது? குளியலறையில் நுழைந்த போது கதவைத் திறந்து தானே வந்தேன்? மின்விளக்கும் எரிந்ததாகவே நினைவு. இப்போது வெளிச்சம் இல்லாதது மட்டுமே சவால் என்று […]

கண்ணீரில் எழுதுகிறேன்..

This entry is part 9 of 36 in the series 30 செப்டம்பர் 2012

-முடவன் குட்டி aஇறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்.. கலிமாவுடன் உயிர் மூச்சு குழைய அம்மா.. காதில் நீ ஊதிய சொல் ஒன்று எனது பெயராகியபோது சுற்றமும் நட்பும் சூழ இருந்தது… யாரையோ தேடுவதாய் என் கண்ணில் கண்ட நீ சொன்னாய் ’அப்பா நாளை வருவார் மகளே’ என. மலர்ந்தேன்… சிரித்தேன்.. தவழ்ந்தேன்…. நடந்தேன்.. தந்தையே…. அள்ளி அணைத்தும் ஆரத்தழுவியும் கொஞ்சி மகிழ்ந்தும் பேசிச் சிரித்துமாய்.. உங்கள் நினைவுகளில் நிறைந்து தழும்பாது ஏழையானதே என் பிள்ளைப் பருவம் […]

சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்

This entry is part 8 of 36 in the series 30 செப்டம்பர் 2012

நம் நாட்டிலேயே முதன் முதலில் முறைப்படி தொழிற்சங்கம் தொடங்கப் பட்டது சென்னையிலும் மும்பையிலும்தான். Madras Workers Union (சென்னை தொழிலாளர் சங்கம்) என்ற பொது அமைப்பு 1918 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. காங்கிரஸ்காரரும், சைவ நெறிச் செல்வரும், தமிழறிஞருமான சாந்த சொரூபி திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அது தொடங்கப் படுவதற்கு முழு முதற் காரணமாக இருந்தார் என்பதுதான் இதில் வியப்புக்குரிய செய்தி! (பி.பி. வாடியா) பி.பி. வாடியா, சிங்காரவேலு செட்டியார், சர்க்கரைச் செட்டியார் ஆகியோர் துணையுடன் […]

இந்திய தேசத்தின் தலைகுனிவு

This entry is part 7 of 36 in the series 30 செப்டம்பர் 2012

இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு. 2012, ஏப்ரல் மாதம் டி.பி சத்திரம் என்ற ஊரில் மலம் அள்ளும் தொழிலாளி ஒருவர் பாதாளச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது மூச்சுத்திணறி இறந்திருக்கிறார். நம் ஊர் தொலைக்காட்சிகளுக்கு அது வெறும் பரபரப்பான செய்தியாக மட்டுமே இருந்தது. பார்ப்பவர்களுக்கும் அதைப் பற்றிய எவ்விதமான சொரணையும் […]

வெளிநடப்பு

This entry is part 6 of 36 in the series 30 செப்டம்பர் 2012

சு.துரைக்குமரன் சிறு அசைவைக்கூட சுவையும் குதூகலமும் நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும் குழந்தைமையைப் போல உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையும் தேடித் தெளியச் செய்தது காதல் தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம் கொதித்தடங்கிய பாலில் படியும் ஆடையைப் போல நம் கொண்டாட்டங்களில் படிந்து கொண்டிருந்தது அடிபட்ட ஆளுமையின் விசும்பல்கள் நிலைநிறுத்த எத்தனித்த தனித்தன்மையால் பின்னப்பட்டு தனித்தனியானோம் உன் நொய்மை உண்டாக்கிய வெறுப்பும் தனிமையும் வெளியேறிக் கொண்டிருந்த குழந்தைமையின் மீது வெளிச்சத்தை வாரியிறைத்துத் தளர்ந்தன தொலைந்த முகவரிதேடி அல்லாடிக்கொண்டிருந்தது காதல். சு.துரைக்குமரன்