மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களின் அண்மைய நூல்களான “நீர் மேல் எழுத்து” என்னும் சிறுகதைத் தொகுப்பும் “விமர்சன முகம் 2” என்னும் கட்டுரைத் தொகுப்பும் மின்னூல்களாக Kobo Books தளத்தில் இடம்பெற்றுள்ளன. தமிழ் மின்னூல்கள் புத்தக வர்த்தகச் சந்தையில் விற்குமா என்னும் கேள்விக்கு விடைகாண சோதனை முறையிலேயே இந்த நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.Kobo Books தளத்தில் இடம்பெறும் முதல் தமிழ் மின்னூல்களும் இவையே. ஆங்கில மொழியில் உள்ள மின்னூல்களில் உள்ள அனைத்து அம்சங்களும் கொண்ட நூல்களாக இவை […]
க.சோதிதாசன் இந்த நேரத்தில் இறுதி முத்தத்தை பகிர்ந்து விடை பெறுகிறது ஓர் காதல் இன்னோரிடத்தில் கண்களின் வழியே உயிருள் நுழைகிறது விண்மீன்களின் ஒளியில் இரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி சூரிய தகிப்பால் வியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம் இந்த நேரம் அகால வேளைகாரணமின்றி கைதுசெய்யப்படும் மகனுக்காக கதறுகிறாள் ஒருபெண் விடுதலை பாடலை பாடி உயிர் விதைக்கிறான் ஓர் போராளி. சிலர் கனவுகளில் இன்பம் துய்கிறார்கள் பலர் மரணக்கனவுகள் கண்டுவிழித்து வியர்வையில் விழுகிறார்கள் ஏதோ ஓர்முலையில் இனிய சங்கீதம் ஒலிக்கிறது இன்னுமோரிடத்தில் பேரழிவு குண்டொன்று விழுந்து கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் யாரோ சிலர் இந்த கவிதையை படித்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணம்.
சீதாலட்சுமி அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூரன் எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே. இது ஓர் பெண்ணின் புலம்பல். அவள் யாராயிருந்தால் என்ன, பெண்ணிற்கு இயல்பாகத் தோன்றும் உணர்வுகள் கட்டியவளுக்கும், காதல் பரத்தைக்கும் ஒன்றுதான். இப்பாடல் நம் சங்க இலக்கியத்தில் ” குறுந்தொகை” காட்டும் […]
சிறகு இரவிச்சந்திரன். Little drops make an ocean என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. Little scenes make a Mishkin film என்பது புதுமொழி. முகமூடி அக்மார்க் தமிழ்ப் படம். ஆனால் டைட்டில் கார்டில் காட்டப்படும் பெயர்கள் எல்லாம் ஆங்கிலத்தில்! புதுமை அத்தோடு குளோஸ். மற்றபடி, படத்தில் வருவது எல்லாம், வழக்கமான உட்டாலக்கடிதான். வழக்கமான கதைகள் இப்படி இருக்கும். அண்ணன் கடத்தல்காரன். தம்பி போலீஸ்காரன். இது எம் ஜி ஆர், நம்பியார், அசோகன் பார்முலா. ஒரே […]
பாஸ்கர் லக்ஷ்மன் வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதன் சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன்கூட ஒரே தெருவிலோ, கிராமத்திலோ இருப்பவர்கள் ஒரே குடும்பம் போல்தான் இருந்து வந்தார்கள். இன்று , குறிப்பாக, நகரங்களில் பக்கத்து வீட்டில்கூட யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்ல நேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒரு […]
சித்ரா சிவகுமார் ஹாங்காங் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில், அமெரிக்க திரைப்பட ரசிகர்களைப் புயலெனத் தாக்கியுள்ளது ‘2016 ஒபாமாவின் அமெரிக்கா’ என்ற ஆவணத்திரைப்படம். ஒபாமா இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால்.. அமெரிக்கா எப்படி இருக்கும்? என்பது தான் இந்த ஆவணப்படத்தின் முக்கிய கரு. 2010இல் வெளியான “ஒபாமாவின் பெருங்கோபத்திற்கான ஆணிவேர்” (ரூட்ஸ் ஆப் ஒபாமாஸ் ரேஜ்) ஒபாமாவைப் பற்றிய பல விவரங்களைத் தந்தது. இதை அமெரிக்காவில் 17 வயதில் குடியேறிய இந்திய […]
வில்லவன்கோதை விடியற்காலை நான்கு மணியிருக்கும் ! இரண்டு நிமிடங்கள் மட்டுமே நின்று இளைப்பாறிய சதர்ன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் நெடுங்காடு ரயில் நிலையத்தை விட்டு தெற்கு நோக்கி தன் பயணத்தை துவக்கியது. அந்த அதிகாலை நேரத்தில் அது எழுப்பிய பார்…..ம் என்ற பிசிரடிக்கும் பேரொலி அந்த மலைப்பிராந்தியம் முழுதும் எதிரொலித்து பெருவாரியான உயிரினங்களின் உறக்கத்தை தொலைத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்த பெட்டிகளில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருந்து குறைந்தபட்ச சுமைகளுடன் குதித்து இறங்கினான் […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]
சிறகு இரவிச்சந்திரன். ஹீரோ சைக்கிளின் கதை ஒன்றும் புதுமையில்லை. ஆனால் ஒரு சைக்கிள் ஹீரோவாகும் கதை புதுமைதானே! பாகனின் அச்சாணியே ஒரு சைக்கிள் தான். வாய்ஸ் ஓவரில் கதை நகர்த்தும் உத்தி அரதப் பழசு. ஆனால் அந்த வாய்ஸ் ஒரு சைக்கிளுடையது என்றால் புதுசுதானே! அதுதான் பாகனின் ஸ்பெஷாலிட்டி. சித்தார்த்தின் “ காதலில் சொதப்புவது எப்படி “ யை, ரீ வைண்ட் பண்ணி, ஓட்டிப் பாருங்கள். அதில் சித்துவுக்கு பதிலாக ஸ்ரீகாந்தைப் போடுங்கள். பேக்கிரவுண்டை கிராமமாக […]
1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள் விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே. அரசு அலுவலங்களிற்கூட அதிக எண்ணிக்கையில் விடுப்பெடுப்பதற்கு இக்காலங்களையே தேர்வு செய்கின்றனர். நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கடையை கட்டிவிடும் காரியமும் அரங்கேறும். சோர்வைத் தொலைத்து புத்துணர்வுடன் இயங்கும் பிரான்சைக் காண்பதற்கு செப்டம்பர் […]