மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -42

This entry is part 6 of 28 in the series 9 செப்டம்பர் 2012

    நாகரத்தினம் கிருஷ்ணா     ஹரிணி   53.       மீண்டும் மனம் தற்செயல் நிகழ்வு பற்றிய விவாதத்தில் இறங்கியது. செஞ்சியிலிருந்து புதுச்சேரி திரும்பும்போது எரிக் நோவாவிடமிருந்து பெற்ற தகவல்களும், நேற்று எனக்கேற்பட்டிருந்த அனுபவமும்,  திசைதெரியாமல் அலைக்கழித்தது. பெரியவரை பார்ப்பது, அவரது செஞ்சி நாவல் பற்றிய எழும் ஐயங்களை கேட்டு விளக்கம் பெறுவது, நாவல் பதிப்புச் சம்பந்தமான தகவல்களைத் தெரிவித்துவிட்டு இரவு புதுச்சேரி திரும்புவதென்பது எனது திட்டங்கள். என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட சாமிநாதனும், அவன் மாயமாய் […]

இடைவெளிகள் (11) – மாறும் சூழல்களும் சபலங்களும்

This entry is part 5 of 28 in the series 9 செப்டம்பர் 2012

இராம. வயிரவன் rvairamr@gmail.com             பங்குச்சந்தை நிலவரத்தைப் போல, வாழ்க்கையும் மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சினையானாலும் சரி, வங்கியின் வட்டிவிகிதம் மாறினாலும் சரி, மழைவந்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பங்குகள் கிடிகிடுவென ஏறும்! அடுத்தநாளே மளமளவெனச்சரியும்! எல்லாவற்றுக்கும் காரணம் ‘செண்டிமெண்ட்’ என்பார்கள் அந்தத்துறையில் இருப்பவர்கள். அதைப்போலத்தான் வாழ்க்கையும் ரோலர் கோஸ்ட்டர் விளையாட்டைப் போல ஏறுவதும், இறங்குவதும், விழுவதும் எழுவதுமாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது! எல்லா உறவுகளிலும் கணவன் மனைவி […]

கேள்விகளின் வாழ்க்கை

This entry is part 4 of 28 in the series 9 செப்டம்பர் 2012

================= நம்மோடு நம்மிடையே வாழ்கின்றன நம் கேள்விகளும் பேருந்துப் படிக்கட்டுகளில் தொங்கியபடி சில மின்சார ரயில்களில் அருகமர்ந்தபடி சில மழையில் நனைய மறுத்து நாம் ஒதுங்கும் நிழற்குடைக்குள் ஒண்டியபடி சில கேள்விகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டேதானிருக்கின்றன அவைகளின் இருப்பை அறியாதார் நாமே மனிதரின் வாழ்விடங்களையெல்லாம் அவை தம்முடையதாக்கிக் கொள்கின்றன தாயைத் தொலைத்த மகவைப் போல சில மாந்தரே வாழா இடங்களிலும் வாழ்கின்றன தம்மைப் பெற்றவர் யாரெனும் ரகசியம் தெரியாமலேயே. – வருணன்.

கதையே கவிதையாய்! (4) செவிடாக இருந்தவள்

This entry is part 3 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  பவள சஙகரி     ஒரு செல்வந்தன் முழுச்செவிடான தம் இளம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான்.   ஓர் காலைப் பொழுதினில் தங்கள் விரதம் முறிக்கும் நேரமதின் போதான (உணவருந்தும் பொழுது) உரையாடலில் “நேற்று நான் சந்தைக்குச் சென்றிருந்தபோது அங்கு, டெமாஸ்கஸ் நகரிலிருந்து வந்த பட்டாடைகளும், இந்தியாவிலிருந்து வந்த மேலாடைகளும், பெருசியாவிலிருந்து வந்த கழுத்து மாலைகளும் யாமனிலிருந்து வந்த  கைவளைகள போன்றவைகளும்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. திருத்தலப் பயணக் குழுவினர் .இப்பொருட்களை நம் நகரத்திற்கு இப்போதுதான் கொண்டு […]

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -1

This entry is part 2 of 28 in the series 9 செப்டம்பர் 2012

(மூன்றாம்  அங்கம்)  அங்கம் -3 பாகம் -1 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, கட்டாய அழுத்தம் போன்ற சமூக இடையூறுகளே அப்பாவிப் பெண்டிரை மீளாத பரத்தைமைச் சிறையில் […]

கருணையினால் அல்ல…..!

This entry is part 1 of 28 in the series 9 செப்டம்பர் 2012

பவள சங்கரி ”ஐயா.. நன்றிங்க. சாமியாட்டமா வந்து எம்பட குழந்தையை காப்பாத்திப்போட்டீங்கோ… எங்க குலசாமியே நீங்கதானுங்கோ. புருசனும் இல்லாம என்னோட வாழ்க்கைக்கே ஆதாரமா இருக்குற இந்த ஒத்தைப் புள்ளையையும் நோய் கொண்டுபோயிடுமோன்னு உசிரை கையில புடிச்சிக்கிட்டிருந்தேங்க.. மவராசன் ஒத்த காசு கூட வாங்காம எம் புள்ளைய காப்பாத்திப்போட்டீங்க.. உங்க குலமே நல்லா வாழோணும்.. அந்த ஆத்தா மகமாயி உங்க குடும்பத்தையே காப்பாத்துவா” அம்மா.. அம்மா.. எழுந்திருங்க . இப்படி காலில் எல்லாம் விழாதீங்க. பையனுக்கு மருந்து மாத்திரையெல்லாம் […]

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிற

This entry is part 27 of 28 in the series 9 செப்டம்பர் 2012

கர்நாடக இசை மேதை மணக்கால் எஸ்.ரங்கராஜன் பற்றிய டாகுமெண்டரி படம் சென்னையில் திரையிடப்படவிருக்கிறது. குரு என்று எவரிடமும் பாட்டு கற்றுக் கொள்ளாமல் தானே சுயமாக சாதக வலிமை மூலம் இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். ஜி.என்.பி., மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் காலத்தில் தொடங்கி இன்றும் கச்சேரிகள் செய்பவர். 90 வயதாகும் இவர் இன்று வாழ்கிற கர்நாடக இசைப் பாடகர்களிலேயே மிகவும் மூத்தவர். இன்றைய தலைமுறையினருக்கும் வருங்கால சந்ததியினருக்கும் அறிமுகம் செய்விக்கும் வகையில் […]

Bharathiar-Bharathidasan Festival 2012,Singapore

This entry is part 28 of 28 in the series 9 செப்டம்பர் 2012

Dear Members, friends and well-wishers of TLCS, Greetings! On Behalf of the Tamil Language and Cultural Society i have the pleasure to invite you with family and friends to: Event          :  Bharathiar-Bharathidasan Festival 2012, Date           :  Saturday, 08 September 2012 Time           :  6.00 […]