ஆதியோகி குழந்தைகளுக்குக் கதை சொல்வதினும் அவர்களிடம் கேட்டலே அலாதி சுகம்..! அவர்களின் கதைகளில்தான் பறவைகளுக்கு மனிதர்களின் பாஷை புரிகிறது. மனிதர்களுக்குப் பறவைகளின் சிறகுகள் முளைக்கிறது. பூமிக்கடியில் ஆகாயத்துக்கப்பால் கடலுக்கடியில் என்று மனிதர்கள் வாழும் சூழலோடு இன்னும் பல உலகங்கள் இருக்கின்றன. சக்திவாய்ந்த மந்திரவாதிகள் ஏனோ ஏழு மலை ஏழு கடல்களுக்கப்பால் எளிதாய் அணுகமுடியாது வசிக்கிறார்கள். குழந்தைகளின் குரலுக்குக் காதுகளைத் தீட்டிக் காத்துக் கிடக்கிறார் கடவுள் தீமை புரிவோருக்கு உடனுக்குடன் தண்டனை கடவுளையே தண்டிக்கும் வலிமையும் வல்லமையும் […]
ஜெய்கிஷென் ஜே காமத். அதிகாலை 3:25 நான் இன்னும் விழித்திருக்கிறேன். கணினி மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. நினைவகம், நுண்செயலி மற்றும் புற சாதனங்கள். கணினி அமைப்பில் எனக்கு விதித்த நியமனங்கள் என்னைக் கொன்றது. அது ஒரு குளிர்ந்த இரவு, மழை இப்பொழ்து நின்று விட்டது. பழைய பீட்டில்ஸ் பாடல், “இது ஒரு கடின தின இரவு, நான் ஒரு கட்டை போன்ற தூஙக வேண்டும்” என் மனதில் இசைத்தது. என் மூளையில் உள்ளீடு தரவுக்கு […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2017 http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்கு தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு
கிராமங்களின் கோவில் விழாக்களில் நடைபெறும் துகிலுரி நடனங்களில் பார்ப்பவர்கள் தங்கள் ஆடைகளை களைந்து விட்டு ஆடுவது போன்ற ஒரு நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த விளிம்பு நிலை தான் “பாம்பும் தடுக்கப்பட்ட பழமும் உள்ள ஈடன் காடு”. இந்த உள்ளவியலின் உள்ளாடைகளை களைந்து எறிய மசாலாக்காடுகளில் ஒரு மகாத்மா கண்ணாமூச்சி ஆடுகிறார் என்று மயக்கம் அல்லது தொங்குநிலை போன்ற ஹேலுசினேஷன்கள் மூலம் தங்கள் ஹிட் ரேட்டை உயர்த்திக்கொள்ளும் ஊடக விளையாட்டு இது. ஆரவ் ஊட்டிய காதல் […]
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ‘ஏன் இந்த வேதனை? இங்கிராம் உயிரோடிருந்தால் இப்போது மூன்று குழந்தைகள் என்றாலும் பிறந்திருக்குமே? ஏன் அவன் என்னிடமிருந்து பிரிந்தான்? எனது காதல் புனிதமற்றதா? ஏன் எனது காதலைக் கடவுள் ஆசிர்வதிக்கவில்லை? தாங்கமுடியாத வேதனையுடனான அலிசனின் சிந்தனை வெளியில் வீசிக்கொண்டிருந்த பயங்கரக் காற்றின் அதிர்வால்; ஜன்னல்கள் சாடையாக அடிபட்டுக்கொண்டிருந்ததுபோது தடைப் பட்டது. இங்கிலாந்தின் காலநிலை கடந்த சில தினங்களாகப் பல பிரச்சினைகளைத் தந்துகொண்டிருக்கின்றது. சூழ்நிலை வெப்பமடைவதால் சாதாரணமான பருவமாற்றங்கள் அசாதாரணமாகிவிட்டன. இயற்கையின் பருவமாற்றங்களில் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) நான் பார்த்த நீயல்லாத நீ பார்க்கும் நானற்ற நான் தான் நான் தானா வலி ஆணா பெண்ணா விடை தெரிந்து ஆவதென்ன காலத்தீயில் கடையெரிந்து கரிந்து உடல் வெந்து சாம்பலாகிப் போன பின் வந்ததென்ன வருவதென்ன…. தலையென்ன காலென்ன முண்டமென்ன குலைகுலையாய் முந்திரிக்கா காய்த்த மரத்தைக் கண்டதுண்டமாய் வெட்டிய கை நட்ட செடிகளும் நிறையவே உண்டுதான். சுட்ட பழமும் சுடாத பழமும் கட்புலனுக்கானதோ? அவரவர் கைப்பக்குவமோ….. […]
மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ வேறொரு வனிதை எனக்கு ! இப்போது வேறொரு வனிதை ! உனைத் தவிர வேறொருத்தி எனக்கில்லையென நானுரைக் கும்படி செய்தவள் நீ ! ஆனால் மெய்யாக இன்று முதல் நானொரு புது நங்கை நாடுகிறேன் ! முட்டாள் இல்லை நான்; இட்ட மில்லா தவளை நானென்றும் ஏற்றுக் கொள்வ தில்லை ! வேறொரு வனிதை எனக்கு ! இப்போது […]
அன்புடையீர் வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உலகத்தமிழ் குறுநாவல் போட்டி தொடர்பான அறிவித்தலை தங்கள் ஊடகங்களில் வெளியிட ஆவன செய்யவும். தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. அன்புடன் முருகபூபதி உலகத்தமிழ் குறுநாவல்போட்டி(1)
அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு வணக்கம் எதிர் வரும் 08-10-2017 ஞாயிறு மாலை சரியாக 6.00 மணிக்கு 95, சையத் அல்வி சாலையில் (முஸ்தபா எதிரில்) உள்ள ஆனந்தபவன் உணவகம் 2ம் தளத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 58 வது நினைவு நாள் சொற்பொழிவு மற்றும் கவியரங்கம் நடைபெற உள்ளது தங்கள் வருகை தந்து ஆதரவு தரும்படி வேண்டிக்கொள்கிறோம் நன்றி பா உத்திராபதி தலைவர்
தரங்கம்பாடி சென்றபோது அங்கு அண்ணி ஆவலுடன் காத்திருந்தார். புதுப்பெண்ணை கட்டி அணைத்து வரவேற்றார். அன்று இரவு தடபுடலாக மீன், இறால் நிறைந்த இரவு உணவு தயார் செய்து வைத்திருந்தார். அன்று இரவே திருமணம் பற்றி பேசினோம். பெண் தரங்கம்பாடியிலேயே இருப்பது என்று முடிவு செய்தோம் . திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தபின்பு திருமணத்தின் முதல் நாள் இரவு பெண்ணை வீட்டுக்கு அழைப்பது என்றும் முடிவு செய்தொம். இடையில் நான் […]