அந்த நொடி

அந்த நொடி
எப்போதும் நிரப்பபடாமலே உள்ளது
அந்த நொடி
எதை கொண்டு நிரப்ப அதை
நிரம்பிவழியும் எனது நினைவுகளைகொண்டு
அதன் முனையை கூட நிரப்ப முடிவதில்லை

கதைகளையும் கவிதைகளையும் ,வார்தைஜாலங்கலையும்
கொண்டு நிர்ப்பிவிடலமா?
மழையையும் வண்ணத்தையும் கொண்டாவது!

பதற்றமான பல பொழுதுகளில்
உன்னை நிரப்பும்
அந்த நொடியை நினைத்தே
மலைத்து போகிறேன்

தேடிய பொழுதுகள் உன்னை நிரப்ப போவதில்லை
தேடாத பொழுதுகlaal உன்னை நிரப்ப சாத்தியம் இல்லை
களவாடவும் முடியாது போனதால்

எப்போதும் என்னை பின்தொடர்கின்றது
அடர்ந்த சூன்யத்தின் வெறுமையாக

உமா மஹேஸ்வரி

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -1)பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…