அப்பால்…

Spread the love

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இறுதியென்பது முடிவற்றதென
அற்றைத்திங்களொன்றில் சொல்லப்பட்டபோது
சிற்றறிவு நம்பிச் சிரித்து மகிழ்ந்தது…..

முற்றுப்புள்ளி யுண்மையில் அடுத்திரு புள்ளிகளை யருவமாய்ப்
பெற்றிருப்பதென
சற்றும் பொய்யற்ற தொனியில்
நற்றமிழ்க்கவிதையொன்று
நடுமுற்றத்திலொரு மேடையில் எடுத்துரைரைத்தபோது
சற்றும் தாமதியாதென்னிரு கைகள் தட்டத்தொடங்கின.
பற்றின் பரவசம் அடியாழ
மனந்தொற்ற…..

நுழைவாயில் முன்கூடம் உள்ளறை, பின்கட்டு,
விடைபெறல், வெளியேறல் _
எல்லாமிருக்கும்
முப்புறம் சூழ்ந்த நீர்ப்பெருக்கிலும் எனக்
கலங்கித்தெளிந்துய்யக்
கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறது காலம்.

Series Navigationவார்த்தைப்பொட்டலங்கள்