அறமாவது …மறமாவது ?!

 

  • சல்மா தினேசுவரி மலேசியா

அற வாழ்வென்று

புற வாழ்வொன்று வாழும்

பட்டியல் நீளாமல் இல்லை,

 

துறத்தலில் துப்பல்களும் துரோகங்களும்

நிறைத்துக் கொண்டு

புத்த சிலைகளுக்கு மத்தியில்

முகம் மறைத்து வாழும் நாகரிகம்

அறிந்தவர்கள்…

 

வெறுப்புகளும் பகைமைகளும்

மூளை வரை நிரப்பி

வாயின் வாசற்படியில் போதிமரம் வளர்த்து

நிஜங்களின் நிழலாடும நிறங்களாய்

 

நம்மை ‘கருப்பாக்கி’ …

நல்ல ‘எருமை’ கிடைத்தால் கொம்பு சீவி..

மனிதம் தெரிந்தால் மிருகமாக்கி

சித்துவேலை செய்யும் கைங்கரியம்

கூடு விட்டுப்பாயாமலே குழுமியிருக்கிறது…

 

மனிதனாய் இருந்தால் நிதம் மரணிக்க வேண்டும்

மிருகமாய் இருந்தால் மிதிப்பட வேண்டும்

எதுவாய் இருப்பது???

 

அறமாவது மறமாவது

வாழும் சூட்சமம் புரிவதற்குள்

சிவபுராணம் பாடக்கூடும்…

 

நல்ல வேளை கேட்பதற்கு

நாம் இருக்கப்போவதில்லை!!!

 

  • சல்மா தினேசுவரி மலேசியா
Series Navigationபயணம் – 1,2திளைத்தல்