ஆத்ம கீதங்கள் – 5 அவலத் தொழில் .. ! [கவிதை -3]

This entry is part 14 of 22 in the series 16 நவம்பர் 2014

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆத்ம கீதங்கள் – 5

அவலத் தொழில் .. !

[கவிதை -3]

அந்தோ அவலம் மதலை யர்க்கு !

அவர் தேடுவது மரணத்தை

தமது வாழ்வில்,

நொறுங்காத தம் இதயத்தை

ஒருங்கிணைப்பர்,

புதைகாட்டுப் பிணங்களாய் !

வெளியேறு வீர் சிறுவர்களே !

சுரங்கத்தை விட்டும்

நகரை விட்டும் !

முழக்குவீர் எதிர்ப்பைச் சிறுவர்களே !

நோய் நொடி வாய்த்தவர் போல்,

பிடுங்கிச் செல்வீர்

கைப்பிடி அளவு பசும்புல் தளத்தின்

நளினக் காட்டுப் பூக்களை !

உரக்கச் சிரிப்பீர் !

உமது விரல்களைச் சோதித்து

உணர்ந்திட அனுமதிப்பீர் !

ஆயினும் அவர் சொல்வது :

சுரங்கத்துக் கருகில் காட்டுப் பூக்கள்

களைகளா ?

இருட்டறை களில்

எமை விட்டு விலகிச் செல்வீர்

உமது

களிப்பாட்டங் களுக்கு !

சலிப்படைந் தோம் யாமென்று

செப்பினர் சிறுவர்;

குதித்து ஓடியாட இயலாது

எம்மால் !

பசிக்குப் பசும்புல் தேவையெனின்

விழுவதை உண்போம்,

உறங்குவோம்;

கால்கள் நடுங்கும் வளைந்து

காயங்க ளோடு !

நடக்க முயன்றால் நாங்கள்

தடாலெனக் குப்புற

விழுவோம்;

கண்தோல் வளையங்கள் தொங்கும்;

செக்கச் சிவந்த பூ

பனித்துளி போல் வெளுக்கும் !

நைந்து போன

உடம்பை இழுத்துச் செல்வோம்

நாள் முழுதும்,

அடித்தள இருட்டறைச் சுரங்கத்தில் ;

அல்லது

பட்டறை இரும்புச் சக்கரத்தைச்

சுற்றிச் சுற்றி இயக்கிக்

களைத்திடுவோம் !

[தொடரும்]

++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/

2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning

3. http://www.online-literature.com/elizabeth-browning/

Series Navigationவால்மீனில் முதன்முதல் இறங்கிய ஈஸா ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் தளவுளவி.தேன்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *