இளைஞர்களுக்கு வழிகாட்டும் இலக்கியம்

This entry is part 1 of 14 in the series 19 மே 2019

” உலகமயமாக்கலுக்கு முன்பு பொதுமக்கள் ஒன்றுகூட சந்தர்ப்பங்கள் இருந்தன. சேர்ந்து செயல்படுவது, சிந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது தொலைக்காட்சி, . ஊடகங்கள் மக்களைப் பிரிக்கின்றன. முன்பு தீவிரமான தொழிற்சங்கங்கள் இருந்தன. எழுத்துக்களிலும் ஓரளவு சமூக வாழ்க்கை இருந்தது. பின்பு உலகமயமாக்கல் காலத்தில் சமூகத்தில் தனிநபர் சார்ந்த கோபம், உணர்வு, தனிமை பற்றிய படைப்புகள் வந்தன.இப்போது மீண்டும் பழையபடி சமுதாயம் சார்ந்து வாழ்க்கை மாற்றம் குறித்த இலக்கியங்கள் வருகின்றன.. . கலைஞர்கள் கதை எழுதலாம், கற்பனை செய்யலாம். ஆனால் சமுதாயத்திலிருந்துதானே தரவுகள் வர வேண்டும்.சமுதாயத்திலிருந்தே இலக்கியம் வருகிறது. அது எந்தக்காலத்திலும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் “ என்றார் எழுத்தாளர் இரா.முருகவேள் ஞாயிறு அன்று திருப்பூரில் நடைபெற்ற ஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை & அன்னையர் தின விழாவில் கலந்து கொண்டு பேசும் போது குறிப்பிட்டார்.

கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது வாசகர்களுக்கான கவிதை, சிறுகதை எழுதுதல் பற்றிய கோடை முகாம் 12/5/19 ஞாயிறு ,. எம்கேஎம் ரிச் ஹோட்டல், ராயபுரம் பிரதான சாலை, ஸ்டேட் பாங்க் காலனி அருகில், திருப்பூரில் நடைபெற்றது. எம்கேஎம் ரிச் ஹோட்டல் உரிமையாளர் எம்கேஎம் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். .தலைமை : தோழர் பி ஆர். நடராஜன் ( திருப்பூர் மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ) வரவேற்புரை :தோழர் சண்முகம் ( திருப்பூர் மாவட்டத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ). பயிலரங்கங்கள் நடைபெற்றன .சிறுகதை பயிலரங்கம் ( இரா.முருகவேள், சுப்ரபாரதிமணியன் நடத்தினர் .)., கவிதை பயிலரங்கம் ( நறுமுகை தேவி,சுபசெல்வி நடத்தினர்) பாடல்கள் பயிலரங்கம் ( துருவன் பாலா, துசோபிரபாகர் நடத்தினர் ) கனல் “ அரசியல் கவிதைகள் “ என்றத் தலைப்பிலும்., சிவதாசன் மரபுக்கவிதையும் ஓசையும் என்றத் தலைப்பிலும் உரையாற்றினர்

அன்னையர் தினththaiththaithத்தை முன்னிட்டு சுப்ரபாரதிமணியன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த “ பெண்களும் தொழிற்சங்கங்களும் :என்ற நூலினை munnittu எழுத்தாளர் இரா.முருகவேள் வெளியிட பேராசிரியை சுபசெல்வி munniபெற்றுக்கொண்டார்.( இதை திருப்பூர் சேவ் அமைப்பு வெளியிட்டுள்ளது .) கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது வாசகர்கள் கலந்து கொண்டு கவிதை, கதை எழுதுவது பற்றிக் கற்றுக் கொண்டனர்.மகிழ்ச்சியடைந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு : தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.

செய்தி: பி ஆர் நடராஜன் ( செயலாளர் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் , திருப்பூர் மாவட்டம்.) ( 94434 27156 ),

Series Navigationகனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச சிறுகதைப்போட்டி – 2019
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *