இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் சாத்தியமா?

hamas_human_shield_kartoonலாரி கோல்ட்ஸ்டீன்

(டொரோண்டோ சன்னில் வெளியான கட்டுரை )

(இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் சமாதானம் ஏற்படும் என்று எண்ணுபவர்கள் ஹமாஸின் கொள்கை விளக்க அறிக்கையைப்  படித்ததில்லை.)

ஹமாஸிற்கும், இஸ்ரேலுக்கும் மோதல் ஏற்படும் போதெல்லாம், ஐநா பொதுச் செயலாளர் பான் கிமூன் தொடங்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரையில் இஸ்ரேலுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.
அடிப்படையில் ஹமாஸுடன் இஸ்ரேல் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக முனைய வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.
இந்த அறிவுரையில் இரண்டு பிரசினைகள் உள்ளன.
முதலாவதாக ஹமாஸின் தலைவர்கள் பித்த வெறி பிடித்தவர்கள்.
இரண்டாவதாக ஹமாஸிற்கு சுதந்திர பாலஸ்தீனம் தேவை  இல்லை.
இஸ்ரேலில் உள்ள யூதர்களை அழித்து ஒழிப்பது ஒன்று தான் ஹமாஸின் நோக்கம்.
கீழே உள்ள வாசகங்கள் ஹமாஸின்  1988-ம் ஆண்டு வெளியிடப் பட்ட நிறுவன கொள்கை விளக்க அறிக்கையிலிருந்து எடுக்கப் பட்டது.
“இஸ்லாம்  மற்றவரைக் கொன்றழித்தது போலவே இஸ்ரேலையும் அழிக்கும்.”
“ஹமாஸின் கோஷம் : அல்லாவே எங்கள் குறிக்கோள், இறைத்தூதுவரே  வழிகாட்டி, குரானே சட்ட அமைப்பு. அல்லாவிற்ககாக மரணம் அடைதலே பெருவிருப்பம்.”
“அல்லாவின் ஆணையை நிறைவேற்றுவதே ஹமாஸின் கடமை. எத்தனை காலமானாலும் சரி. இறைத் தூதுவர் சொன்னார் ” முஸ்லிம்கள் யூதர்களைக் கொன்றழிக்கும் வரையில் நற்காலம் வராது. கல்லிலும், மரத்திலும் யூதர்கள் மறைந்திருந்தால்- முஸ்லிம்களே அவர்களைக் கண்டுபிடித்துக் கொல்லுங்கள்.”
“இஸ்லாமிய இயக்கம் இஸ்ரேலை இஸ்லாமிய வக்ப் (சொத்து) என்று நம்புகிறது. இறுதித் தீர்ப்பு நாள் வரையில் முஸ்லிம்களின் எதிர்காலத் தலைமுறைகளே அவற்றில் வசிக்க வேண்டும். இதில் விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.”
”  அமைதி பேச்சு வார்த்தை, அகில உலக மாநாடுகள் எல்லாம் இஸ்லாமிய போராட்டத்திற்கும் இயக்கத்திற்கும் முரண்பட்டவை. ஜிஹாத் அல்லாமல் பாலஸ்தீனப் பிரசினைக்கு தீர்வு இல்லை. அமைதித் தீர்வு என்பதெல்லாம் கால விரயம் தான்.”
“சியோனிச ஊடுருவல் நச்சுத் தன்மையானது. அது பிரீமேசன், லயன்ஸ் கிளப், ரோடரி கிளப் போன்ற அமைப்புகளையும் இது போன்ற மற்ற ரகசிய அமைப்புகளையும் கொண்டது. இந்த அமைப்புகள் எல்லாம் ஜியோனிசத்தின் ஏவலாளிகள். சமூகத்தைக் கெடுத்து, மதிப்பீடுகளை தாழ்த்தி, மனசாட்சியை நசித்து, நற்குணங்களை அழித்து இஸ்லாமை அழிக்க நோக்கம் கொண்டுள்ளார்கள். போதை மருந்து வியாபாரம், மது வியாபாரம் செய்து தம்மை விரிவாக்கம் செய்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.”
“இஸ்ரேல், யூத மதம் , யூதர்கள் இஸ்லாமையும், முஸ்லிம் மக்களையும் கேள்விக்குள்ளாக்குகின்றனர். அவர்களை நிம்மதியாய்த் துங்க விடமாட்டோம்.”
“ஜியோனிஸத்தை எதிர்ப்பதை நிறுத்துவது பெரும் துரோகம். அப்படிச் செய்பவர்களைச் சபிப்போம். எல்லா ஆற்றலையும் பயன் படுத்தி இந்த நாஜிகளை எதிர்ப்போம்.”

“இரண்டு நாடுகளாகப பிரித்து தீர்வு காணுதல்” என்பதும் , பாலஸ்தீன் அருகில் இஸ்ரேல் அமைதியுடன் சகவாழ்வு வாழக் கூடும் என்பதும் இன்றைய நிலையில் ஆகாத ஒன்று.

தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியறினால் அமைத் திரும்பும் என்று சொல்பவர்களுக்கு – 2005-ல் காஸா பகுதியிலிருந்துதானாகவே முன்வந்து இஸ்ரேல் வெளியேறியது

பிரதமர் ஏறிய ஷரன் 45,000 இஸ்ரேல் படையினரையும், 8,500 யூத வாசிகளையும் காஸாவிலிருந்து பின்வாங்கச் செய்தார்.
மேற்குக் கரைப் பகுதியிலிருந்தும் சில குடியிருப்புகள் காலி செய்யப் பட்டன.  பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுடன் சகவாழ்வு வாழ்வார்கள் என்று அவர் நம்பினார்.

ஆனால் காஸாவை ஹமாஸ் உடனடியாகக் கைபற்றி ஏவுகணைகளு நிறுவியது. இன்றுவரை அங்கு ஏவுகணைகள் அங்கிருந்துதான் இஸ்ரேலுக்குள் வீசப் படுகின்றன.

Series Navigation