எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.

author
0 minutes, 13 seconds Read
This entry is part 15 of 32 in the series 15 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன்
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார்கலைக்கல்லூரி,கடலூர்.

தமிழ் இலக்கியப்படைப்புகளில் கதைஇலக்கியங்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்;றன. புதினங்களில் கதைப்பின்னல் வடிவமைப்பு உட்பொருள் படைப்பாளுமை இவைகளைப் பொருந்து பல நிலைகளில் அமைகின்றன.சிறுகதை புதினங்களைவிட அதிகமாக வெளிவருவதைப்போன்றத் தோற்றங்கள் தென்பட்டாலும் புதினங்;கள் எண்ணிக்கை அளவினைக் கடந்து உணர்த்தும் உட்பொருளும் உத்தியும் நடையும்வரவேற்பைப் பெற்றுள்ளன.அவ்வகையில் எஸ்ஸார்சியின் கனவுமெய்ப்படும் என்னும் புதினம் வாசிப்புக்கும் விமர்சனத்துக்கும் உகந்ததாக காணப்படுகிறது.எஸ்ஸார்சி நவீனஇலக்கியத்தளத்தில் இயங்கிவருபவர்.வாசிப்பு அனுபவத்திலும் படைப்பு அனுபவத்திலும் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார.;கவிதைஇ சிறுகதை புதினம் கட்டுரை மொழிபெயர்ப்பு என்னும் பன்முகங்களில் அவரின் படைப்புகளைக் காணமுடிகிறது.அவரின் ஆழமானச்சிந்தனை எளியநடை சுவையுடன் கூடிய கதையாடல் இவைகள் இவரின் கனவு மெய்ப்படும் புதினத்தை வாசிக்கவைத்தது.இப்புதி;னம் சாதி என்னும் நிறுவனத்தை மையமாகக்கொண்டு இயங்குகிறது. எனவே இப்புதினம் உணர்த்தும் சாதியக்கருத்துகளை உடன்பாட்டுநிலையிலும் எதிர்முகநிலையிலும் அணுகுவதாக இக்கட்டுரை அமைகிறது.
இலக்கியமும் சமுதாயமும்:
கலை இலக்கியங்களின் வரலாறு மனித சமுதாய வரலாற்றுடன் பின்னிப்பினைந்ததாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ளவர்களின் இன்ப துன்பங்களை சக மனிதர்களிடம் பரிமாறிக்கொள்ளும் நோக்கத்தில் படைப்புகள் தோன்றுகின்றன. சமூகத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகள் மறுக்கப்படும் உரிமைகள் பொருளாதார சிக்கள்கள் என்று பல்வேறு நிலைகளில் உருவாகும் படைப்புகள் உயிரோட்டம் உள்ளவையாக இருக்கும். புடைப்பாளன் தனது அனுபவ கீறல்களில் அவசியமானவற்றை சமூகத்தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கும்போது பொதுமைப்பண்பு பெறுகிறது இன்றைய இலக்கியப்படைப்பாளர்களில் சமூகநிலையுணர்ந்து எழுத்துலகில் தடம் பதித்த பாரதி ‘சோதிமிகு நவகவிதை’ என் கவிதை என்று படைப்புக்குள் வந்து பறையருக்கும் புலையருக்கும் விடுதலை என்று பதிவு செய்து அதிர்வு தந்ததுபோல் இலக்கியங்கள் சமுதாயத்தோடு நூறுசதம் உரன்பெற்றதாக இருக்க வேண்டும்;.
“எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன்
அல்லன். அவன் சமூகப்பிராணி. சமுதாயத்தில்
எல்லாக்காலங்களிலும்முரண்பாடுகளும் போராட்டங்களும்
இயக்கங்களும்இடைவிடாதுநடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
வர்க்கவேறுபாட்டினால் இவை எழுகின்றன. இவற்றின்
மத்தியிலே எழுத்தாளனும் வாழ்கிறான்.”
என்ற டாக்டர் க.கைலாசபதியின் (சமூகவியலும் இலக்கியமும்-ப.26) கருத்தில் பொருந்தும்படியாக எஸ்ஸார்சியின் இப்படைப்பு உள்ளது.
கனவுமெய்ப்படும் காட்டும் சாதிகள்:
இந்திய சமுதாயத்தில் இயங்கி வரும் சமூக நிறுவனங்களில் சாதி முதன்மைநிலையில் எண்ணத்தக்கதாக உள்ளது.இந்தியநாட்டில்; சாதி அமைப்பு உலகில் வேறுஎந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இறுக்கமும் தனித்தன்மையும் பெற்று விளங்குகிறது அரங்க.முருகையனின் கருத்தால்(காலந்தோறும்சாதி-ப.1)உணரமுடிகிறது.சாதி தொடர்பான எண்ணில்அடங்காக் கருத்தாடல்கள் பலநிலைகளில்நிகழ்ந்து கொண்டும் அதே நேரத்தில் சாதி என்னும் நிறுவனம் வலிமை அடைந்து கொண்டே வருகிறது.
எஸ்ஸார்சியின் இப்புதினத்தில் பறையர,; பள்ளர், வெட்டியான், என்ற சாதியாரையும் நாவிதர் வண்ணான் போன்றோரையும் ஐயர,; ஓதுவார், கோனார் போன்றோரையும் வெள்ளாழர,; பிள்ளை, செட்டியார் போன்றோரையும் கதைக்குரிய மாந்தர்களாக படைத்து அவரவர்களுக்கான வாழ்வியல்களையும் போராட்டங்களையும் அதிகமாகக் காணமுடிகிறது.குறிப்பாக சிறிய ஊர்களில் சாதியின் பாதிப்புகள் ஆழமாக நிகழ்வதை உணர்த்துகிறார்.சமுதாயக் கட்டமைப்பாலும் சமூக மதிப்பீடுகளாலும் பொருளாதாரம் நிலவுடைமை பதவிகள் போன்ற பலவற்றாலும் சிலர் பலர் மேல் ஆளுமை செலுத்துவதற்கு சாதி எனபது ஒரு சௌரியமான கவசமாக விளங்கியுள்ளதையும் ஆளுகைக்கு ஆட்படுகின்றவர் மேற்சொன்ன பல நலன்களில் நசுக்கப்படுவதை உணர்ந்து கேள்விகேட்கும் நிலைக்கு ஆவேசம்கொள்வதையும்இவ்விரண்டு முனைகளுக்கு இடையே ஏற்படும் முரண்பாடுகள் தரும் இழப்புகளையும் கனவு மெய்படும் கதைக்களமாக அவதானிக்கமுடிகிறது.
சாதியக்கட்டுமானங்கள்;; :
கனவுமெய்ப்படும் என்னும் கதைநிகழிடமாக விழுப்புரம் மாவட்டத்து தருமங்குடி என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரில் ஊர்ப்பஞ்சாயத்து பலம் வாய்ந்தது பஞ்சாயத்து தலைவராக இதர பொறுப்பாளர்களாக பிள்ளை, வெள்ளாளர் போன்ற சாதியினர் உள்ளனர். இவர்களின் ஆட்சிக்கு உட்பட்வர்களாக இவர்களின் வாழ்வுக்கும் வசதிக்கும் பாடுபடும் கூலிகளாக வெட்டியான் பறையன் நாவிதன் வண்ணான் போன்றோர் இருந்து வருகின்றனர்.உடைமைகளை உற்பத்தி சாதனங்களால் அதிகரித்துக்கொண்டுள்ள உடையவர்களின் வர்க்க நலனுக்கும் உற்பத்தி சாதனங்கள் இல்லாமல் தம் உழைப்பை நம்பி அதனையே விற்றுப்பிழைக்கின்ற இல்லாதவர்களின் வர்க்க நலனுக்கும் உற்பத்திசாதனங்கள் இல்லாமல் தம் உழைப்பை நம்பி அதனையே விற்றுப் பிழைக்கின்ற இல்லாதவர்களின் வர்க்க நலனுக்கும் உள்ள முரண்பாட்டை சித்தரிப்பதாக இப்புதினப்போக்கு அமைந்துள்ளது. இந்த முரண்பாடு ஓர் எல்லையைக் கடக்கும்போது இல்லாதவர்களின் குமுறலாகவும் கொந்தளிப்பாகவும் இறுதியில் போராட்டமாகவும் வெடிப்பதை கதைச்சித்தரிப்புக் காட்டிச்செல்கிறது.
ஊர்அமைப்பு-வாழ்வியல்முறையைக்கட்டமைத்துள்ளசாதியம்:
கனவுமெய்ப்படும்புதினத்தில்வரும்கதைமாந்தர்களின் வாழிட அமைப்பு சாதியப்பிரிநிலைக்கு ஏற்ப அமைந்துள்ளது.ஊர்நடுவில் சிவன்கோவில் ஊரின் கடைசியில் கருமாரியம்மன்கோயில் ஊரின் கடைசியில்மிகப்பெரிய ஆலமரம் உத்தையடிப்பாதையை மட்டுமே கொண்டிருக்கும் ஊர் கடைசியில் உள்ள சேரித்தெரு பிற தெருக்கள் ஊரின்மையப்பகுதியில் இருப்பதைக் காட்டுகிறார்;;;;;;;;;;;;.ஊரில் உள்ள தெருக்கள்
“வெள்ளாளத்தெருக்கள்இ சின்னஅக்ரஹாரம்”(ப-08)
“வெள்ளாளத்தெருவில்இருந்தும்இமண்ணுடையார்
தெருவிலிருந்தும் ஆட்கள் வந்தனர்”(ப-217)
என்ற பெயரிகளில்வழங்கப்பட்டதைபுதினம்காட்டுகிறது.இக்கருத்து
“கோயிலைச்சுற்றி பார்ப்பனர் குடியிருப்பு அடுத்து ஸ்தல
உற்பத்தியில் முதனிலை வகிக்கும் சாதிகளுக்கும் அதற்கு
அடுத்து தனித்தனி வீதிகள் ஆகிய இவற்றை வீதிகள் என்றும்
இதற்கு அடுத்துகிராமத்தின் விளிம்பில் உள்ள மக்கள்
பள்ளர்ஃபறையர் வீடுகளை சேரிஎன்றும் கட்டமைப்பு செய்து
இருப்பிடத்துக்கான படிநிலை வரிசை துல்லியமாகத்தெரிகிறது”
என்றகோ.கேசவனின் (சாதியம்-ப.49)கருத்து ஈண்டு ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.
உயர் சாதியினர் வாழும் தெருக்களில் கீழ்சாதியினர் செல்லும் போது காலில் செருப்பு அணியக் கூடாது மேல்சட்டைப்போடக்கூடாது மேல்துண்டு போடக்கூடாது கூலிக்கொடுக்கும் உயர் சாதியினரைக் கண்டால் உடம்பை வளைத்துக்கொண்டு சாமி என்று அழைத்து தரையில் முழுஉடம்பும்படும்படி விழுந்து வணங்க வேண்டும். இதனைஇ
“ஏன் சிங்காரம் மிதியடி போடுவியா?”
என நாகலிங்கம் சிரித்தப்படி பல்லெல்லாம் தெரியக்கேட்டான்….
“என்னா புதுப்பழக்கம் இனிமே தானா வரப்போவுது?”(ப-27)
என்றும்,
“அப்பா சட்டை வச்சிருக்காரு சட்டையை ஒரு
துணிப்பையில் உள்ளார மறச்சி வச்சிருப்பாரு
வெளியூரு போனா அங்கு போயிப்போட்டுகினு
சுத்துவாரு ஊருக்குள்ளவரும்போது ஊருல
உள்ள அத்தினி பேருக்கும் துணி வெளுப்பாரு
ஆனா அவரு ஒரு சட்டை போட்டது இல்ல”(ப-63)
என்றும் புதினத்தில் காணப்படும் கதையாடல்கள் உணர்த்துகின்றன.
பெயர்சூட்டலிலும் அழைத்தலிலும் புழங்கிய சாதியம் :
பெயர் சூட்டுவதிலும் அப்பெயரை சொல்லி அழைப்பதிலும் சாதியத்தாக்கங்கள் நிலவி வந்ததை புதினத்தின் வழி அறியமுடிகிறது.உயர் சாதியினர் பெயரை தாழ்ந்த சாதியைச் சார்ந்தவர்த் தங்களின் பிள்ளைகளுக்கு சூட்டுவதில் பெருமை அடைந்து இருக்கின்றனர். அதே வேளையில் உயர்சாதியினர்ப்பெயரைத்தாழ்ந்த சாதியினர் குரலெழுப்பி அழைக்கக்கூடாது என்றும் தடையும் அச்சமும் நிலவியுள்ளதையும் புதினம் வெளிப்படுத்துகிறது இதனை ஊர் மக்களின் தொழிலாளியாகவாழ்க்கையை றநடத்தி வரும் நாவிதனன் நாகலிங்கத்தின் மகனுக்கு அவ்வூரின் நடுப்பிள்ளை என்று அழைக்கப்படும் உயர்சாதியினரின் பெரிய மனிதரின் பெயரான “ஞானசம்பந்தம்”(ப-8)என்ற பெயரை சூட்டுகின்றான்;. ஆனால்,உயர்சாதியினர் பெயரை அழைக்கக்;;கூடாது என்ற அச்சத்தால் சின்னானின் தாய் நீண்ட அடர்த்தியான கூந்தலை உடையவளாக இருந்தும் அவளை ‘மொட்டை’ ஊரார் அழைக்கின்றனர்;. இதனைஇ
“ எங்கம்மா மொட்டை அது எப்படி மொட்டைன்னு
ஆச்சி தெரியல ஆனா மொட்டைன்னு கூப்பிடுவது
சரின்னு சனம் நெனைக்கிறது”(ப-62)
உயர்சாதியினர் பெயரைத்தாழ்ந்த சாதியினர் அதாவது அவரிடம் அதிக வேலை செய்து குறைவாக கூலியைப் பணமாகவோ அரிசியாகவோ பெறுகின்றவர்கள் தங்களின் குழந்தைக்கு உயர்சாதியினர்ப்பெயரை வைப்பது அவர்களை போலத் தன்னுடைய மகனும் வருவான் என்ற நம்பிககையாகக்கூட இருக்கலாம் அப்பெயரை சூட்டியவர்கள் அப்பெயரை சொல்லி அழைக்கமாட்டார்கள் என்பதும் ஈண்டு எண்ணத்தக்கது. அதே வேளையில் உயர்ந்த சாதியினரைத் தங்களுக்கு கீழுள்ளவர்களின் பெயர்களை தங்கள் குடும்பத்தைச்சார்ந்தவர்களுக்கு இட்டு வழங்குவது இல்லை என்பதும் கவனத்திற்குரியதாகும். (ப.18)
இதுபோல நாவிதன் நாகலிங்கத்தின் மகன் சின்னவனின் தாய்மொட்டை சலவைத்தொழிலாளி சிங்காரம் அவன் மகன் சிங்காரபாலன் என்ற இப்பெயர்களை உயர்சாதியினர் தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சூட்டமாட்டார்கள் என்பதையும் புதினம்.
“தருமங்குடியில் எந்த ஒரு நபரும் நாகலிங்கம்என்ற
பெயரை சூட்டிக்கொள்ள மாட்டார்கள் இதில்
ஊர்மக்கள் கூடுதல் கவனமாய் இருந்தார்கள்
தெருவில் போவோரும் வருவோரும் கூவி கூவி
அழைத்து அந்த பெயரை ஈனப்படுத்திவிட்டதாய்
எண்ணிணார்கள் மற்றும் யாரேனும் தன்
பிள்ளையைப் பெயர் மட்டுமே கருதி தொழிலாளிக்குப்
பதிலாய் என்று நினைத்துக்கொண்டு விட்டால் என்ன
செய்வதுஎன்ற பெருங்கவலையில்அப்படிஇருந்தார்கள்”(ப-19)
கூறுகிறது. மேலும் சாதியால் தாழ்ந்தவர்களான அனைவரையும் பிற சாதியைச்சார்ந்தசிறுவர்கள்முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெயரைக்சொல்லி அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதையும் புதினம் கூறுகிறது.இதனை
“ஊரில் ‘டா’போட்டுத்தான் ஐயர் பழகி
இருந்தார் மேல் தட்டு பிள்ளைமார்களில்
யாருக்கும் இது பொருந்தாது”(ப-8)
என்ற சித்திரிப்பு காட்டுகிறது. ஊயர்சாதியினர் கீழ்நிலையில் உள்ள எவரையும் பெயர் சொல்லியும் ‘டா’என்று அழைத்தும் தங்களின் ஆதிக்க நிலையை வெளிப்படுத்திக்கொண்டதை உணரமுடிகிறது.
சுடுகாட்டில் வாழும் சாதி:
சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் சாதியின் தாண்டவம் நிகழ்வதைப் புதினம் காட்டுகிறது. ஒரே இடத்தை அடிக்கணக்கில் பகுத்து இருந்ததை
“தருமங்குடி கொள்ளையில் வடக்கே இருந்து
இருபது தப்படி பாப்பானுவ வெள்ளாளனுவ
செட்டிமக்கள்அப்புறம் வன்னியசாதி பிறகு கோனாரு
கடைசியா விசுவகர்மான்னு அது முடிஞ்சுபோகும்”(ப-142)
என்ற கதையாடல் காட்டுகிறது.
குடிமை அடிமை முறையில் சாதி:
செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு சாதி சொல்லப்பட்டு வந்தன என்றும் தொழில்கள் சாதிகளுக்கான அடித்தளத்தில் செயல்பட்டுவந்தது தவறு என கூறப்பட்டு வரும் கருத்தை சமூகவியலாளர்கள் மறுத்தும் உடன்பட்டும் வருகின்றனர். இப்புதினத்தில் தொழில்செய்வோர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அவர்களுக்கான சாதிகள் சுட்டப்பட்டு வருவதை
“நாகலிங்கம்முடித்திருத்தறத நிறுத்தி, ஐயரு
சாமிபடைக்கிறதநிறுத்திசிங்காரம்துறைப்பட்டுல
துணிவெளுக்கிறத நிறுத்தி ஆசாரி-கொல்லன்-தட்டான்
கொயவன் குடியானவன் அவங்க ஜோலிய
உட்டுட்டுப்போனா என்னா ஆவுறது”(ப-7)
என்ற கதையாடல் வெளிப்படுத்துகிறது.
குடிமைத்தொழில் செய்வதும் அதன் வழியாக சாதிக்குரிய அடைப்புக்குள் பலரை அடையாளம் கண்டு வருவதும் மேல்சாதியினரின் வழக்கமாக இருந்து வருகிறது தங்களைவிட உயர்ந்த சாதியினருக்குக்; குடிமைத்தொழில் செய்கினிறவர் தங்களினும தாழ்ந்த படிநிலைகளில் உள்ளவர்களுக்குத்தொழில் செய்வது தீட்டு என்றும் குற்றம் கடைபிடிக்கப்பட்டுவருவதைஎஸ்ஸார்சிபுதினம் புலப்படுத்துகிறது.மேற்கூறிய வரையறையை மீறி தொழில்செயவோரைத்தண்டிக்கும் அல்லது தண்டனைக்கு உட்படுத்தும் ஆதிக்கப்போக்கும் உயர்சாதியினரிடம் காணப்பட்டதாகக் கூறுகிறார்.
இதனைஇ
“ நாவிதன் நாகலிங்கத்தின் மகன் சின்னவன்
தன்னுடையதோழனும் சேரிப்பகுதியில் வாழ்பவனும்
சிவபெருமானுக்கு முடிதிருத்துகிறான்.இதனை கண்ட
சாதியைச்சார்ந்த ஊர்நாட்;டாண்மை அடியாட்களை
அனுப்பி உடன் அழைத்துக்கொண்டு சின்னவனை
அடித்துத் துன்புறுத்துகின்றனர். அதுமட்டுமன்றி இனி.
ஊர்மக்களுக்குத் தொழில் செய்யக்கூடாது என்று
ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கின்றார் இதனை மீறினால்
நாகலிங்கத்தின் குடும்பம் ஊரைவிட்டு வெளியேற்றப்படும்
என்ற உத்தரவையும் போடுகின்றனர்.”(ப-219)
என்ற புதின சித்தரிப்பு வழி அறியமுடிகிறது.
சாதியக்கட்டுடைப்பு :
; தலித் இலக்கியம் என்பது தமிழி இலக்கியஙகளில் மற்ற இயக்கங்களுக்கான இடத்ததை விட மிக நிறைவான இடத்தைப்பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்டவர்களில் குரலாக ஒலிக்கும் இவ்வொலி அழுகைவொலியாக இருப்பதைவிட போராட்டஒலியாகவும் மீறல் ஒலியாகவும் சமூகத்தின் தளத்தில் தனக்கான சம அடையாளங்களை மீட்டெடுத்து நிலைநிறுத்தும் ஒலியாகவும் இருக்கினிறன. ஆரியவாத அமைப்பு நிலபிரபுத்துவ அமைப்பு வர்ணாசிரமஅமைப்பு தொழில்பிரிவு போன்ற அனைத்து கட்டுகளை அறுத்தெரியும் கலகக்குரலாக மவை இருக்கின்றன என்னும் பாதையில் எஸ்ஸார்சியின் கனவுமெய்படும் புதினத்திதை ஆராயமுடிகிறது.
அடிமைத்தொழிலை அடிமை- அறுத்தல்; :
எஸ்ஸார்சியின் கனவு புதினத்தின் தொடக்கமே கலகக் குரலுடனும் எதிர்ப்புக்குரலுடனும் தொடங்குகிறது; உயர்சாதியினரின் வீடுகளில் மரணம் ஏற்படும் தருணங்களில் அதற்கான இறுதிவேளைகளைச் செய்வதற்காக சேரியில் உள்ளவர்களைக்கொண்டு செயது வந்தனர். ஆதனை இனி செய்ய மாட்டோம் என்று பறைகொட்டி அறிவித்து அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையும்படி முடிவு எடுக்கின்றனர்.இதனை..
“வெட்;டியானுங்க என்ற ஈனவேலையை இனி செய்ய
மாட்டோம் சாவு விழுந்தாலும் சுடலை வேலை
செய்தல் பாடைகட்டுதல் குழிதோண்டுதல்
புதைத்தல் எரித்தல் மாடுசெத்தால் அகற்றுதல்
சொக்கபானைக்கு மௌhறு கட்டுதல் என்று
எதனையும் செய்ய மாட்டோம”(ப-1)
என்ற பகுதியில் சுட்டுகிறது.இவ்விடம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கிறது. தாங்கள் முழங்கி வந்த பறைகளை ஆவேசமாக கிழித்து தூக்கிஎறிவதாக எஸ்ஸார்சி கூறுகிறார.; இவ்விடம் சற்று நெருடலாக இருப்பினும் அடிமையின் சின்னமாகப்பறை இனி இருக்காது என்பதை வெளிப்படுத்துவதாக இக்கதைச்சித்திரிப்பை உள்ளவாங்கமுடிகிறது.
“இதுநாள்வரை தலைமுறை தலைமுறையா நாங்க
சவம் எடுக்கறத்துக்கு துணைநிக்குறது. மாடு
செத்ததுனா தூக்குறதுன்;னு வேல செய்தோம்
நீங்க இட்ட பல வேலய முடிச்சொம் ஆமாம்
தப்பு அடிச்சோம் இன்னிலேர்ந்து நாங்க எதுவும்
செய்யறது இல்லன்னு முடிவு”(ப-6)
என்றும்..
“நீங்க அந்த ஜோலிகள் ஏன் செய்யக்கூடாது?
ஏன் செய்றது இல்ல?அதுக கேவலம்னு தானே
கேவலம்ங்கர வேலய நாங்க ஏன் செய்யனும்?
எல்லோருமாசெஞ்சா அந்தகேவலம் பொதுவாபூடுமுல்ல”(ப-6)
என்றும் ..
“செய்ய முடியாதுன்னுட்டு நாங்க வுடுல இதுக
நாங்க செய்யறது இல்லன்னு முடிவு செஞ்சிஇருக்கம”(ப-6)
என்றும் வரும்
புதின சித்தரிப்புகளின் வழிமரணசடங்கின்போதுசாதியத்தின் கூறான அடிமைகுடிமை மறையின் அனைத்து செயல்களையும் நன்கு உணரமுடிகிறது. இவைகள் காலந்தோறும் அடிமைபடுத்தும் ஆதிக்க சக்திகளாக செயல்படுவதை எதிர்கொள்ளும் ஆற்றலும் துணிவும் போராட்டத்தின் மூலம் கிடைத்திருப்பதை இப்புதினம் புலப்படுத்துகிறது மௌனிகளாகவும் குடிமைமுறையின் நீதியைக்காக்கும் ஜடமாகவும் இல்லாமல்நாங்கள் செத்த மாடுகளையும்மனிதர்களையும் குழிதோண்டிப்புதைக்கும் வேலைக்காகவே உருவாக்கப்பட்டவர்கள் இல்லைஎன்னும் துணிச்சலானக் கருத்துகளை எடுத்துரைக்கப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்டவர்கள் உருவாக்கி விட்டதை அவதானிக்கமுடிகிறது.
இயற்பெயரை சூட்டுதல்-மீட்டெடுத்தல்-தோற்றம் மீதான கருத்துருக்கள்;:
சுhதியத்தின் அடக்கு முறைகளில் உளவியல் நோக்கில் முதன்மைக்கொண்டதாக பெயர்கள் அமைகின்றன. சுhதியத்தின் பெயரால் கீழ்மைநிலைக்குதள்ளப்பட்டவர்களின் அடையாளங்களாக விளங்கும் அவர்களின் பெயர்கள் பெற்றோர்களால் இடப்படுவது ஒன்றாக இருக்க அவர்களை அப்பெயரிட்டு அழைக்காமல் கீழ்மைப்படுத்தும் சொற்களை பெயர்களாக்கி அழைக்கப்படுவதும் மேல்சாதி ஆதிக்கமாக இயங்கி வருகிறது.அவ்வகையில்
மொட்டைஇசின்னான் போன்ற பெயர்கள் உள்ளன. மொட்டை என்னும் பெண்ணிற்கு நீண்ட கூந்தல் இருந்தபோதிலும் அவளை மொட்டை என்று அழைப்பதைஅந்த ஊரில் உள்ள மக்களே வழக்கமாகக்கொண்டிருந்தனர். சின்னான் என்று அழைக்கப்பட்டவனின் இயற்பெயர் “திருஞானசம்பந்தம்” ஆனால், அப்பெயரிட்டு அவனை அழைப்பது இல்லை.அந்த ஊரில்உள்ள மேல் சாதியினைச்சார்ந்த நடுப்பிள்ளை என்பவரின் இயற்பெயர் அது என்பதையும் அப்பெயரிட்டு அழைத்தால் அவரைக்கீழ்மைப்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாக அழைக்கவில்லை என்பதையும் புதினம் காட்டுகிறது.
சின்னவனிடம் பல நிலைகளில் விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது சுயசிந்தனை பகுத்தறிவு கல்வியறிவு போன்றவைப்பெற்றவர்களிடம் நட்பு ஏற்படுகிறது. அதனால் தனது பெயரை இயற்பெயராலேயே அழைக்க விருப்பம்கொள்கிறான்.
“இனி உன்னை தோழர் ஞானன்னுதான் கூப்பிடப்
போறேன் சின்னவன் ஒரு முறை தோழர் ஞானன்
என்று சொல்லிப்பார்த்தான். மீண்டும் ஒரு முறை
இப்புவியில் தான் பிறந்ததாய் எண்ணிக்கணநேரம்
பெருமை கொண்டான்”.(ப-198)
இயற்பெயரினால் ஏற்படும் மிடுக்கும் கம்பீரமும் உணரக்கூடியதாக இருக்கிறது.
சாதிய அடுக்கு முறைகளில் தோற்றப்பொலிவு முக்கியமாகக் கருதப்படுகிறது.உயர்சாதியினரின் தலையில் குடுமி, தூயவெள்ளுடை வெய்யில் மழை இரண்டும் இல்லையெனினும் கையில்குடை, காலில்செருப்பு, ஆணவமும் தற்பெருமையும் கலந்த பேச்சு இவைகளின் கலவையாககாட்டுகிறதுபுதினம் .அதேவேளையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் சட்டையை அணியாத வெற்றுடம்பு, கந்தல்இடுப்பாடை, செருப்புஅணியாமை உயர்சாதியினரைக் காணும் இடங்களில் சாமி கும்புடறேன் என்று மண்ணில் விழுந்து வணங்குதல் என்ற தோற்றத்துடன் காணப்படுவதாகக் கூறுகிறார். இதனை மாற்றி..
“சின்னவன் மேல் சட்டையோடு அதன்மேல் ஒரு
துண்டு அணிவதையும் வழக்கமாகக் கொண்டான்
இடுப்பில்வெள்ளைவெளேர்என்றஎட்டுமுழ
வேட்டியைக்கட்டிக்கொண்டான்.”(ப-197)
என்று காட்டுகிறார்.
சலவைத்தொழிலாளியாகப்படைக்கப்பட்டுள்ள சிங்காரத்திற்கு செருப்பும் சட்டையும் அணிவது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருப்பதை எஸ்ஸார்சி சோகத்துடன் பதிவு செய்கிறார.;(ப-81)
கல்வியில் மேன்மையும் அரசியல்தெளிவும் பெறல்:
காலங்காலமாக சாதியின் பெயரால் கீழ்நிலையில் ஒடுக்கப்பட்டவர்கள் சமூகத்தில் உயர்மதிப்பு அடைவதற்குரிய முக்கியகாரணிகளாக கல்வியும் அரசியலும் இன்றைக்கு இருந்து வருகின்றன. இதைப்பற்றி சிந்திக்கும் போது பொருளாதார நிலைப்பற்றி எண்ணமும் எழச்செய்கிறது.
தாழ்ந்தநிலையில் உள்ளவர்கள் கல்வி அரசியல் பொருளாதாரமேண்மை போன்ற எவற்றிலும் முன்னேற்றம் அடைவது சாதி இறுக்கத்தைத்தளர்வு அடையச்செய்வதாக இருக்கும் என்பதை இப்புதினம் பேசுகிறது.
சுலவைத்தொழிலாளி சிங்காரத்தின் மகன் சிங்காரபாலன் தன்னுடைய தந்தையுடன் சலவைத்தொழிலில் ஈடுபட்டு பணியாற்றிகிறான்.இவர்களின் பெயர்களையும் உயர்சாதியினராக அவ்வூரில் உள்ளவர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு சூட்டாமல் கவனம் செலுத்தினர். சிங்காரபாலன் அந்த ஊருக்கு “ரெவின்யூ இன்ஸ்பெக்டராக வந்த நாமக்காரர்(ப-20)என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்து படித்து அரசு ஊழியனாக மாறுகிறான். ஆவனைப்பார்த்து உயர்சாதியினர் மதிப்பு அளிப்பவராக மாறுகின்றனர்.
சுhதியின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் தருமங்குடிக்கு ஆசிரியராக கண்மணியின் வருகை ஒரு வரமாக அமைகிறது. இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திஎல்லோருக்கும் எல்லாஉரிமையும் உண்டு என்பதை உணர்த்துகிறார்.இதனை உயரசாதியினர் எதிர்க்கின்றனர். துங்களின் சாதி பணம் அரசியல் போன்ற செல்வாக்குகளை பயன்படுத்தி அவரை இறுதியில் கொலைசெய்கின்றனர். ஆசிரியருடன் நட்பு கொண்ட சின்னவன் சிவபெருமான் செம்மலர் போன்றவர்கள் அவ்வூரைசாதி சழக்குகளில் இருந்து மீட்டுஎடுக்கும் தகுதி பெற்று போராடுகின்றனர். பொதுவுடைமை பொருளாதாரம் அரசியல் போன்ற புத்தகங்களை அவர்கள் படித்து உணரச்செய்தல் ஊருக்கு நிகழ்த்தப்படும் தீமைகளைப்போக்குதல் தேர்தலில் நின்று வெற்றிபெறல் போன்ற பல தளங்களில் அவர்களை செயல்படவைத்து அதன்மூலம் சாதியச்சுரண்டலை ஒழிக்க முயல்கிறார்.
“இத படிங்க…மனிதன் உலகை அறிகிற
இயல்பு வரலாற்றில் அவன் செய்கிற பணி அவன்
முன்னேற்றம் இவை இதனுள் சொல்லப்பட்டுள்ளன.
இயக்கவியல் வரலாற்றுப்பொருள்முதவாதம்
என்னும் மார்க்சிய லெனியத்தத்துவ ஞானத்தின்
அடித்தளத்தைப்பற்றியது இந்நூல்”(ப-168)
என்று கூறப்படும் செய்திகள் வாசிப்புத்தளத்தில் விரியவிரிய மனித சமுதாயம் மேன்மையும் பொதுமையும் அடையும் என்பதை வலியுறுத்துகின்றன.
அரசியலில் அறிவும் தெளிவும் பெற வேண்டியது இன்றய அவசியமாகவும் அவசரமாகவும் சாதியொழிப்பு அல்லது விழிப்புத்தளத்தில் கருதப்படுகிறது. இதனை எஸ்ஸார்சி தருமங்குடியில் நடக்கும் தேர்தல் சித்திரிப்புகளால் கூறுகிறார்.
தருமங்குடியில் உயர்சாதியினர் குறைவாகவும் கீழ்சாதியினர்அதிகமாகவும் இருப்பதால் அது ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தும் உயர்சாதியினரின் கைப்பாவையாக இருப்பவர் மட்டுமே நின்றும்; வென்றும் வந்துள்ளனர். சுpன்னவன் சிவபெருமான் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் இனம் சார்ந்த இளைஞர்கள் விழிப்புணர்வுப்பெற்று விட்டதால் இம்முறை சிவபெருமான் ஆசிரியர் கண்மணியின் அறிவுரைப்படி நின்று வென்றான் இதனால் ஊரின் நாட்டாண்மை நடுப்பிள்ளைப்போன்ற நிலக்கிழார்கள் அமைதி இழந்து தவித்தனர்.சிவபெருமான் ஊரின் ஒற்றுமைக்கும் உயர்வுக்கும் உழைப்பதாய்த் தேசியக்கொடியில் சத்தியம் செய்து பல நன்மைகளை செய்தான். மேலும் தாழ்ந்த சாதிமக்கள் கோயிருக்கு செல்லும் நிலை வந்தது சாராய விறபனை ஒழிக்கப்பட்டது பரம்பரை அடிமைத்தொழில்களை கைவிட்டு வேறுபல துறைகளில் பணிபுரிந்த முன்னேறினர். இதனால் மேல் சாதியினரின் பலர் தீயசெயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஐயர் -தொழிலாளியா?
எஸ்ஸார்சியின்சாதியப்பற்றியகதையாடல் ஐயர்இனத்தை உயர்நிலைக்கு கொண்டு சித்தரிக்காமல் அவர்களும் கீழ்நிலை வகுப்புக்கு இணையானவர்கள் என்று நிலைப்படுத்துகிறது. அக்ரகாரத்தில் வசித்துக்கொண்டு கோயில் பூசை செய்து வரும் ஐயர் அவ்வூரில் உள்ள நாட்டாண்மை, நடுப்பிள்ளை போன்ற வெள்ளாளர், கோனார் போன்றவர்க்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றார்;. சலவைத்தொழிலாளி சிங்காரம் ஐயருக்கான உடைகளை சலவைசெய்து கொடுக்கும் போது அழுக்குநீக்கிஈரத்துடன்கொடுக்கும்அளவிற்குதீட்டு-தூய்மை போன்றவற்றில் கவனமுடன் கதையாடல் நிகழ்கிறது.உலரவைத்துக்கொடுத்தால் தீட்டு ஏற்படும் என்று எண்ணும்ஐயர் பிற நேரங்களில் தொழிலாளியாக உள்ள நாவிதர், சலவைத்தொழிலாளி என்று ஐயர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.இதனை,
“அனைவரும் ‘டா’ போட்டுட அழைக்கும் ஐயர்
பிள்ளைமார்களிடம் அவ்வாறெல்லாம்பேசாமல்
அடக்கமாக பேசுவது”(ப-8)
“நானாலும்,நீன்னாலும்,இன்னும்துணிவெளுக்கிற
சிங்காரவேலுன்னாலும,; மரஞ்செத்துர ஆசாரின்னாலும,;
தட்டாரா இருந்தாலும்,இரும்புதட்டுரஆசாரின்னாலும்
குசவன்னாலும் நாம தொழிலுதானே செய்யறம்
வான்னாவரணும் போன்னா போவனும் கழுதை
கத்தினா எதனா ஆவுமா சொல்லு”(ப-48)
என வரும் கதைச்சித்தரிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
சாதியப்படிநிலைகளில் மேல் வர்க்கமாக இருக்கும் பார்ப்பனரகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இவர்கள் தங்களையும் கீழ்நிலை சாதிகளாக அடையாளப்படுத்தும் முயற்சிகளாக இதனை ஏற்றுக்கொள்வதும் ஆய்வுக்கு உட்படுத்துவதாகவே உள்ளது.
எஸ்ஸார்சியின் கனவு மெய்ப்படும் என்னும் புதினம் இன்றைய சமுதாயத்தில் நிலவும் சாதிய மையங்களை தனதாக்கிக்கொண்டு பின்னப்பட்டுள்ளது.ஓர் ஊரின் அமைப்பு வாழும் மக்களின் வாழிடங்கள்,வாழ்முறைகள் மரணசடங்குகள் அரசியல்,கல்வி,போன்ற பலநிலைகளில் சாதிகளின் ஊடாட்டம் உள்ள நிலைகளைக்காட்டுகிறது.கீழ்-மேல் என்னும் பகுப்பில் உள்ளவர்கள் அவற்றில் இயங்கும் தன்மையையும் மற்றதையும் எதிர்கொள்ளும் முறையினையும் கதை இலக்கியங்களுக்கு ஏற்ப இயம்பியுள்ளார். கீழ்நிலையில் உள்ளவர்கள் மேன்மை அடைய பெண்சமூகம் விழிப்புணர்வை இன்னும் விசாலப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதை செம்மலர் என்னும் பாத்திரப்படைப்பின் ஊடாக வெளிப்படுத்துகிறார்.பேதைக்கு அடிமையாகும் நிலையிலிருந்து விடுபட்டு அரசியலில் அறிவுபூர்வமாக செயல்ட்டு கல்விஅறிவில் உயர்ந்து விட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் சுயபலதத்துடன் சமூகமதிப்பையும் பொதுமைவாழ்வையும் மீட்டெடுக்க முடியும் என்கிறார். இருப்பினும் புதினத்தின் இறுதிப்பகுதியில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை இன்னமும் விடியலைத்தொடுவதற்கான சுயதயாரிப்பிலேயே இருப்பதாக முடிவு செய்கிறார். வுpடியலில் பயணிக்கத்தொடங்கி விட்டார்கள் என்பதை இன்னமும் ஆழமாக வலியுறுத்தி இருக்கலாமோ என்ற எண்ணத்தின் நெருடல்களிலேயே கனவுமெய்ப்படும் நிறைவடைகிறது.

பயன்பட்ட நூல்கள்
1.கனவு மெய்ப்படும்(புதினம்) -எஸ்ஸார்ஸி
மணியம் பதிப்பகம்.
2.சமூகவியலும் இலக்கியமும் -க.கைலாசபதி-ப.26
3.சாதியம்-கோ.கேசவன் – ப.49.

Series Navigationஅன்பின் வழியது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *