This entry is part 16 of 32 in the series 15 டிசம்பர் 2013

தாகூரின் கீதப் பாமாலை – 93

என் கனவுப் பெண்மணி.

 image (2)

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. 

எந்தன் கனவில் வழக்கமாய்த்

திரிந்து வரும்

அந்தப் பெண்மணியை நான்

அறிந்து கொண்டாலும்

புரிந்து கொள்ள

முடிய வில்லை  என்னால் !

தேடிச் சென்றதில்

காலம் தான் வீணாய்க் கழிந்தது !

மங்கல வேளையில்

என்னை நீ

உன்னருகில் வர அழைத்தாய் !

என் அவமானத்தை

கவசத்தால் மூடி மறைத்தாய் !

உன்னை  எளிதாய்ப்

புரிந்து கொள்ள முடியும்  !

 

யாரென்னை ஒதுக்கிப் புறக்கணிப்பார்

ஏறிட்டுப் பாராமல் ?

யாரென்னை

அருகில் அமரச்  சொல்வார் ?

எவரது காதல் மனத் துயர்

எனக்கோர் அளவுக் கோலாகும்  ?

இரக்க மற்ற

இந்த ஐயப் பாட்டில்

அந்தோ !

நிலைப்புடன் நானிருக்க

இயலாது !

உன்னை மட்டுமே

புரிந்து கொள்ள முடிந்தது

என்னால் !

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 205   1938 டிசம்பரி 8 இல்   தாகூர்  77 வயதினராய்  இருந்த போது  எழுதப் பட்டது.  இந்த கீதம் 50 வருடத்துக்கு முன்பு  மாயார் கேளா [Mayar Khela] என்னும் பாட்டு நாடகத்துக்கு எழுதப் பட்டதை மாற்றி எழுதியது.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com] December  10 , 2013

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஎஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *