ஏன் எப்போதுமே இந்துக்களே தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்?

Spread the love

(வங்கதேசப் பத்திரிகை  “டெய்லி ஸ்டார்” தலையங்கம்)

மேலும் ஒருமுறை பங்களாதேஷின் இந்து சமூகம் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.

பொது தேர்தல்களின் முடிவில், தாகுர்காவ்ன், தினாஜ்புர், ரங்பூர், போக்ரா, லால்மோனிர்ஹட், ராஜ்ஷாஹி ஜெஸ்ஸூர், சிட்டகாங் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடியிருக்கிறார்கள்.

பங்களாதேசின் விடுதலைப்போரின் போது எவ்வாறு பாகிஸ்தான் ராணுவமும் அதன் பங்காளி கூட்டாளிகளும் பங்களாதேசிய வாதத்தின் ஆதரவாளர்கள் மீது வன்கொடுமைகள் இழைத்தார்களோ அந்த வன்முறை, மற்றொருமுறை, இப்போது பங்களாதேசத்தின் இந்து மக்களின் மீதான அவலத்தின் மூலம் நினைவூட்டப்பட்டிருக்கிறது.

BxJfmhqCUAEFaLW
இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக ஒரு நாட்டில் வாழமுடியாது, அவர்கள் தனித்தனி தேசத்தினர் என்ற கோரிக்கையை இரண்டு தேச கோரிக்கை என்று இந்திய விடுதலையின்போது முஸ்லீம் தலைவர்கள் முன்வைத்தனர். அந்த கோரிக்கையின் முடிவில் இந்தியா இரண்டாக பிரிந்தபோது பல கோடிக்கணக்கான இந்துக்கள் குடிபெயர்ந்து இந்தியாவுக்கு சென்றார்கள். அப்போது உயிர்வாழ தப்பி ஓடியது அந்த சமூகம்.

மூன்றுவருடங்களுக்கு பிறகு 1950இல் பெரிய மதக்கலவரம் தோற்றுவிக்கப்பட்டு இன்னொரு முறை இந்துக்கள், அன்று கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பங்களாதேஷிலிருந்து துரத்தப்பட்டு மேற்கு வங்காளம் சென்றார்கள்.

1964இல் அயூப்கான், மோனெம் கும்பலின் நடவடிக்கைகளால் மேலும் ஏராளமான இந்துக்கள் கிழக்கு பாகிஸ்தானை விட்டு துரத்தப்பட்டார்கள். அப்போது மதசார்பற்ற தலைமையால், முக்கியமாக பங்கபந்து என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மானால், அது எதிர்க்கப்பட்டு ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

1971இல் பாகிஸ்தான் ராணுவம், அடங்காத வன்மத்துடன் பங்களாதேஷின் இந்துக்களின் மீது தாக்குதலை தொடுத்தது. அந்த வன்மமும் வன்கொடுமையும் 9 மாதங்கள் நீடித்தது. அது நடந்த போது, ஜோதிர்மாய் குஹாதகுர்த்தா, கோவிந்த சந்திர தேவ், திரேந்திரநாத் தத்தா மற்றும் பல முக்கிய இந்து தலைவர்களை கொன்றது மட்டுமல்லாமல், டாக்கா பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான இந்து மாணவர்களையும் கொன்று தீர்த்தது.
BtIEabsCQAAtq0t
சுதந்திர பங்களாதேஷில் விஷயங்கள் வேறுமாதிரியாகக்த்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், 1975க்கு பிறகு, (சர்வாதிகார ராணுவ ஆட்சியின்பிறகு) மேலும் ஒருமுறை இந்து சமூகம் தாக்குதலுக்கு உள்ளானது. பல நேரங்களில் ஆளும் வர்க்கத்தின் நேர்முக ஆதரவுடனும் மறைமுக ஆதரவுடனும் இந்து சமூகத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது. கடந்த 40 வருடங்களில் ஏராளமான இந்துக்கள் பங்களாதேசத்தை விட்டு உயிருக்கு பயந்து நடைப்பயணமாகவே இந்தியாவுக்கு ஓடியிருக்கிறார்கள். சில அதிர்ஷ்டக்காரர்கள், தங்களது படிப்பின் காரணமாகவும், பணத்தின் காரணமாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு சென்றிருக்கிறார்கள்.

1971இல் சுமார் 25 சதவீதமாக இருந்த பங்களாதேஷின் இந்து மக்கள்தொகை, இன்று 10 சதவீதத்துக்கும் குறைவாக ஆகியிருக்கிறது. கடந்த 40 வருடங்களாக இந்துக்களின் வீடுகள் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்திருக்கின்றன, இடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்துக்களை இந்திய ஏஜெண்டுகளாகவே பார்க்கிறார்கள்.
04_Dinajpur_Election_Violence_060114__0001
பி.என்.பி கட்சி – ஜமாத்தே இஸ்லாமி கட்சி கூட்டணி அக்டோபர் 2001இல் ஆட்சியை பிடித்தபோது அவர்கள் இந்துக்களின் மீது தொடுத்த தாக்குதல் அவமானகரமானது. இந்த கூட்டணியின் ஆதரவாளர்கள், சுமார் 2500 கிராமங்களில் இந்துக்களின் மீது தாக்குதல் தொடுத்தார்கள். இந்துக்களை அடிப்பதும், சூரையாடுவது, இந்துப்பெண்களை கற்பழிப்பதுமாக அவர்கள் செய்த அட்டூழியம் கேவலமானது. இன்றுவரை அந்த குற்றவாளிகள் மீது ஒரு வழக்கும் தொடுக்கப்படவில்லை. 2014 ஜனவரியில் நடந்த பொதுத்தேர்தலின் முடிவில் பங்களாதேஷின் இந்துக்கள் தயங்கள் உயிருக்கு பயந்து நடுங்கிகொண்டிருக்கிறார்கள். நாடெங்கிருந்தும் வரும் செய்திகள் இந்த அச்சுருத்தலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
BswWDZmCQAErrAD
ஏன் இந்த தாக்குதல்களும், அச்சுருத்தல்களும், அரசால் கண்டுக்கொள்ளப்படவில்லை? இந்த மக்களுக்கு பங்களாதேசின் குடிமக்கள் என்ற பாதுகாப்பு எங்கே? தேர்தல் முடிந்ததும், பி.என்.பி கட்சி, ஜமாத் கட்சி- ஷிபிர் (மாணவர் பிரிவு) தாக்குதல்கள் நடக்க ஆரம்பித்ததும், அவர்கள் போலீஸிடம் முறையிட்டார்கள்.

ஒரு பதிலும் வரவில்லை. அவாமி லீக் கட்சியிடமிருந்து கூட தாக்குதலுக்கு உள்ளாகும் இந்துக்கள் ஆதரவாக ஒரு சொல்லும் செயலும் இல்லை.

பெரும்பான்மை மக்களின் மதத்தை விட்டு வேறொரு மதத்தை பின்பற்றுவதற்காக தாக்குதலுக்கு உள்ளாகும் பங்களாதேசின் சக குடிமக்களுக்காக மிகுந்த அவமானத்துடன் தலைகுனிகிறோம். மதசார்பற்ற ஜனநாயகத்தை நம்புவதாக சொல்லிகொள்ளும், எந்த ஒரு அமைப்புமோ, அல்லது தனிநபருமோ, இந்த வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இந்துக்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை, குரல் கொடுக்கவில்லை என்று அறியும்போது, இன்னும் அவமானத்துடன் தலைகுனிகிறோம்.

பங்களாதேஷ் நாட்டில் வாழும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், பழங்குடிகள் அனைவரும் இங்கே வாழலாம், இது ஒரு மதசார்பற்ற நாடு, ஒரு சமூகத்தின் மீது நடக்கும் தாக்குதல் மற்றொரு சமூகத்தின் மீது நடக்கும் தாக்குதலுக்கு சமம், எந்த ஒரு சமூகத்தையும் தாக்கும் கும்பல் கடுமையாக தண்டிக்கப்படும் என்று இங்கே பங்களாதேஷ் அரசு இங்கே மக்களிடம் உறுதி தரவேண்டும்.

அரசு மீண்டும் ஒரு முறை தோல்வியடையக்கூடாது. அப்படி தோல்வியடைந்தால், இந்த அரசு இனப்படுகொலை செய்த அரசு என்று தீராப்பழியை சுமக்க நேரிடும்.


சமீபத்திய செய்தி.

காஜிபூரில் இந்து கோவில் தாக்குதலுக்கு உள்ளானது

அடையாளம் தெரியாத சிலர் பத்தானியா சாலாவில் உள்ள இந்துகோவிலை தாக்கி அங்குள்ள விக்கிரகங்களை உடைத்துள்ளார்கள்.
சர்போஜனின் கோவில் கமிட்டி உறுப்பினரான திலீப் குமார், துர்கா லட்சுமி, சரஸ்வதி, முருகன், பிள்ளையார் விக்கிரகங்களை இந்த சமூக எதிரிகள் உடைத்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
temple-attack_1
உடைக்கப்பட்ட இந்த விக்கிரகங்கள் கோவில் அருகே உள்ள வயற்காட்டில் வீசப்பட்டிருக்கின்றன. இந்த சமூக விரோதிகள் விக்கிரகங்களை வழிபடக்கூடாது என்றும் அப்படி வழிபட்டால் குண்டு வீசுவோம் என்றும் இந்துக்களை துண்டுப்பிரசுரங்களில் எச்சரித்துள்ளார்கள்.
threat-letter
பெப்ருவரி 10ஆம் தேதியன்று நேபாள் சந்திர பர்மான் என்பவரது வீட்டில் உள்ள விக்கிரகங்களை சமூக விரோதிகள் உடைத்துள்ளார்கள்.

கலியகோயிர் போலீஸ் அதிகாரி முகம்மது ஓமர் பருக் இது உதிரி தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.

வைஸ் செய்தி

அவாமி லீக் கட்சியினரே கோவில்களை உடைப்பது பற்றிய செய்தி

Naogaoin-Manda-mondir

ஜமாத்தே இஸ்லாமி ஆதரவாளர்கள் இந்துக்களின் கோவில்களை இடிப்பது பற்றிய டெய்லி ஸ்டார் செய்தி

ஜெஸ்ஸூரில் இந்துக்கள் மீது தாக்குதல்

Series Navigationகைவிடப்படுதல்