ஓடுகிறீர்கள்

கண்ணாடியில் உன் முகத்தை

காணமுடியாத ஒரு முகத்தை

அறிய முடியாத முதல் தருணம்

உன் கண்களில் குத்திட்டு

நிற்பதே மரணம்.

கீரி பாம்பு இரண்டையும்

நம் முன் காட்டி காட்டி

ஜனன மரண பிம்பம்பங்களை

ஒரு மலிவான வித்தை காட்டுபவனா

கடவுள்?

அந்த வித்தை பார்ப்பவர்களில்

ஒருவனாய் கூட‌

உன் தோள்மீது கை போட்டுக்கொண்டு

நிற்கலாம் அவர்.

நாம் நம் அறிவின் விளிம்பில்

நிற்கும் அந்த கத்தி முனையில்

கடவுளை எக்ஸ் என்று வைத்து

நம் கையில்

இன்னொரு “ஒய்”யாக இருப்பதை

எக்ஸோடு சமன்பாடு செய்ய முனைகிறோம்.

“டோபாலஜிகல் குவாண்டம் ஃபீல்டு தியரியில்

ஒரு கோஹோமாலஜி”

கண் கொண்டு துருவிப்பாருங்கள்

கோடிக்கணக்கான பிரபஞ்சவெளிகளையும்

உங்கள் கைப்பிடியில் வைத்து

விளையாடிப்பார்க்கலாம் என்கிறார்

எட்வர்டு விட்டன்.

இவர் கணித அறிவின் உச்சத்தில் நின்று

ஒரு நோபல் பரிசுக்கு இணையான‌

“ஃபீல்ட்ஸ் மெடல்”வாங்கிய அமெரிக்க விஞ்ஞானி.

ஓகோ!

இப்படியும் ஒன்று இருக்கிறதா

என்று அந்த கடவுளுக்கு

வியப்பு மேல் வியப்பு.

அதனால் தான்

அவர் நம்மைத்தேடி வந்து

நம்மோடு ஒட்டி நிற்கிறார்.

“அங்கே எங்கே ஓடுகிறீர்கள்?

அது நான் இல்லை.

நான் அது இல்லை”

என்கிறார்

“ஆத்திகர்களே

இந்த நாத்திகனைத்தேடியா

நீங்கள் ஓடுகிறீர்கள்?”

அவர் குரல் துரத்துகிறது

அவரையும் சேர்த்து தான்.

_________________________________________

1Pradeep Edward

ருத்ராகண்ணாடியில் உன் முகத்தைகாணமுடியாத ஒரு முகத்தைஅறிய முடியாத முதல் தருணம்உன் கண்களில் குத்திட்டுநிற்பதே மரணம்.கீரி பாம்பு இரண்டையும் நம் முன் காட்டி காட்டிஜனன மரண பிம்பம்பங்களைஒரு மலிவான வித்தை காட்டுபவனாகடவுள்?அந்த வித்தை பார்ப்பவர்களில் ஒருவனாய் கூட‌உன் தோள்மீது கை போட்டுக்கொண்டுநிற்கலாம் அவர்.நாம் நம் அறிவின் விளிம்பில்நிற்கும் அந்த கத்தி முனையில்கடவுளை எக்ஸ் என்று வைத்துநம் கையில் இன்னொரு “ஒய்”யாக இருப்பதைஎக்ஸோடு சமன்பாடு செய்ய முனைகிறோம்.”டோபாலஜிகல் குவாண்டம் ஃபீல்டு தியரியில்ஒரு கோஹோமாலஜி”கண் கொண்டு துருவிப்பாருங்கள் கோடிக்கணக்கான பிரபஞ்சவெளிகளையும்உங்கள் கைப்பிடியில் வைத்துவிளையாடிப்பார்க்கலாம் என்கிறார்எட்வர்டு விட்டன்.இவர் கணித அறிவின் உச்சத்தில் நின்றுஒரு நோபல் பரிசுக்கு இணையான‌”ஃபீல்ட்ஸ் மெடல்”வாங்கிய அமெரிக்க விஞ்ஞானி.ஓகோ!இப்படியும் ஒன்று இருக்கிறதாஎன்று அந்த கடவுளுக்குவியப்பு மேல் வியப்பு.அதனால் தான்அவர் நம்மைத்தேடி வந்துநம்மோடு ஒட்டி நிற்கிறார்.”அங்கே எங்கே ஓடுகிறீர்கள்?அது நான் இல்லை.நான் அது இல்லை”என்கிறார்”ஆத்திகர்களேஇந்த நாத்திகனைத்தேடியாநீங்கள் ஓடுகிறீர்கள்?”அவர் குரல் துரத்துகிறதுஅவரையும் சேர்த்து தான்._________________________________________

1Pradeep Edward

Series Navigationமுகநூலில்…ஒரு மாற்றத்தின் அறிகுறி