கடல் வந்தவன்

Spread the love

ரன்யா மர்யம்

பேராழியின்
மென்சலன மையத்தில்
மிதக்கிறது ஆளற்ற
மரக்கலமொன்று.
சில அலுமினிய பாத்திரங்கள்
மீன் வலை சூழ கிடந்தாடுகிறது
அதை செலுத்தியவனின்
உடற்கூறுகளை
சுறாக்கள் ஆராய்ந்து செரித்திருக்ககூடும்.
ஒருவேளை அடியாழத்தில்
பிணமரித்து போய்
எலும்புகள் மிச்சமாய்
கிடக்கக்கூடும்.
கனவாய் மீன்களுக்காய் கடல் வந்தவன்
கடலுக்கு உடல் தந்தானென
ஆழிப்புறாக்களின் கூட்டமொன்று
அம்மரக்கலத்திலமர்ந்தவாறு
காணாமல் போனவனைப்பற்றி தங்களின் பாஷையில் தர்க்கித்து கொண்டிருக்கிறது.

Series Navigationஒன்றுமில்லை