கழுவுவோம்

 

 

‘தகுதியே இல்லை

அவன் எப்படித் தலைவன்’

 

அணையப்போகும் தீபமவன்

ஆடட்டும்’

 

‘சுயநலவாதி அவன்

சூனியமாவான்’

 

‘எரிகிற வீட்டிலும் அவன்

இருப்பதைப் பிடுங்குவான்’

 

‘கண்ணியம்இல்லை

காணாமல் போவான்’

 

‘அவன் தலைக்கனமே

அவனைத் தாழ்த்தும்’

 

‘அவன் கோபம்

அவனையே அழிக்கும்’

 

‘வீம்புக்காரன் அவன்

வெம்பி வீழ்வான்’

 

‘அவன் திமிரே அவனைத்

தின்றுவிடும்’

 

‘அவன் காசெல்லாம்

பாவக்காசு’

 

‘அவன் யாரையுமே

புகழமாட்டான்’

 

ஏழுதலைமுறைச் சொத்து

அவனுக்கேன் ஆசை’

 

‘அவனுக்கு சந்ததி

இல்லாதது சரிதான்’

 

இன்னும்…..இன்னும்…..

 

அடுத்த முதுகை ஒதுக்கி

நம் முதுகைப் பார்ப்பதெப்போது?

 

பூக்களுக்குள்

ஏன் புழுக்கள்?

 

தீபங்கள் தீவட்டியானால்

கரியாகாதா சமூகம்?

 

நம்மைக் கழுவுவோம்

சமூகம் கழுவப்படும்

 

அமீதாம்மாள்

Series Navigationபிரபஞ்சத்தின் யூகிப்பு வடிவம் என்ன ?