கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது

kaasi-ananthan

பொள்ளாச்சியில் உள்ள கவிஞர் சிற்பி அறக்கட்டளை
ஆண்டுதோறும் சிறந்த தமிழ்க் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி
வருகிறது. பதினெட்டாம் ஆண்டாகிய 2013இல் கவிஞர் சிற்பி
இலக்கியவிருது பெற இரண்டு கவிஞர்கள் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் இந்திரன் ஆகிய இருவரும் விருது
பெறும் கவிஞர்கள் ஆவர். இருபதினாயிரம் ரூபாய் தொகையும்,
நினைவுக்கேடயமும் அளிக்கப்படவுள்ளன.
எழுச்சிக்கவிஞராக அறியப்படும் காசி ஆனந்தன் ஈழநாட்டவர்;
காசி ஆனந்தன் கவிதைகள், நறுக்குகள் முதலிய பல தொகுப்புகளைப்
படைத்தவர்; தமிழ் உணர்வும், தமிழர் நலமும் ததும்பப் புரட்சிச்
சிந்தனைகள் தந்து வருபவர்.
கவிஞர் இந்திரன் நகரிய வாழ்வை மையப்படுத்தும் கவிதைகள்
படைப்பவர்; சாம்பல் வார்த்தைகள், முப்பட்டை நகரம், மின்துகள்
பரப்பு ஆகிய தொகுப்புகள் தந்தவர்; சிறந்த மொழிபெயர்ப்புக்காகச்
சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்; கலை இலக்கிய விமர்சகர்.
இதே விழாவில் சூழலியல் அக்கறை மிக்க சமூகப் பணியாளர்
ஓசை காளிதாஸ் சமூக நற்பணிக்கான பொ.மா.சுப்பிரமணியம் விருது
பெறுகின்றார்.
ஆகஸ்ட் 11 (2013) இல் நடைபெறும் விழாவுக்குக் கோவை
பாரதிய வித்யாபவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
தலைமையேற்று விருதுகளை வழங்குகின்றார்; சிந்தனையாளர்
தமிழருவி மணியன் சிறப்புரை நல்குகின்றார்.
பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரி விவேகானந்தர் அரங்கில்
ஆகஸ்ட் 11 காலை 10 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறும் என்று
அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் சிற்பி தெரிவித்துள்ளார்.
Series Navigationவரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…மாயக் கண்ணனின் மருகோன்