குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

Spread the love

காடு விட்டு
பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும்.

சிறகடிக்கும்
மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில்
குழந்தைகள்.

ஓடித் தொட்டு
ஓடித் தொட்டு விளையாடும்.

யாரும்
தோற்கவில்லை.

யாரும்
ஜெயிக்கவில்லை.

விழுந்து
எழும்.

எழுந்து
விழும்.

கூட
ஓடி ஓடி மைதானமும் களைத்துப் போய்
ஒரு மூலையில் போய் உட்காரும்.

குழந்தைகளின் விளையாட்டு
கலையும்.

குழந்தைகள் விட்டுப் போன விளையாட்டைக் கண்டு
கலையாது
வெளியில் தட்டான் பூச்சிகள் விளையாடும்.

கு.அழகர்சாமி

Series Navigation