கூண்டு

உதயசூரியன்குகை மனிதன்
என்னிடம்
எனக்காக வருகிறான்
ஒரு
சிறிய
பாதுகாப்பு கூண்டை
காட்டுகிறான்
நுழைகிறேன்
மதம்
என்னை உரிமைக்கோருகிறது
சாதி
என்னுள் நுழைய பார்க்கிறது
கட்சிகள்
என்னை சுற்றி சுற்றி வருகின்றன
பொய்யும் புரட்டும் விடாமல்
என்னிடம் பேரம் பேசுகின்றன
கூண்டை விட்டு
உண்மைச் சிறகில் பறக்கிறேன்
கூண்டு பெரிதாகிறது
சிறகுகள் விரிய விரிய
கூண்டும் பெரிதாகிறது
மாயக்கூண்டில்
குகை மனிதர்கள்
இருவர்
கவலை தேய்ந்த முகத்தோடு
எதோ
பேசிகொண்டு இருக்கிறார்கள்

Series Navigationஅம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?