கொடும்பம்

Spread the love

கட்டிலின்

இடது விளிம்பில் அவள்

வலது விளிம்பில் அவன்

முதுகு நோக்கி முதுகு

உரையாடலெல்லாம்

உலோகத் துண்டோடுதான்

அன்று

அவன் சொன்ன சேதி

‘இன்று நம் திருமண நாள்’

அவளின் பதில்

‘என்றுமே திரும்பாத நாள்’

நடுவில் கிடந்த

குழந்தை கேட்டது

‘என்னெ

என்ன செய்யப்

போறீங்க’

அமீதாம்மாள்

Series Navigationஇந்தியா 2019 ஜூலை சந்திரயான் -2 இரண்டாம் நிலவுப் பயணத்தில் விண்சுற்றி, தளவுளவி, தளவூர்தி மூன்றையும் ஏவப் போகிறது.காமம் பெரிதெனினும் கடந்து நில்