சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்

Spread the love

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம்

ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம்

-ஹெச்.ஜி.ரசூல்

கன்னியாகுமரிமாவட்டம் திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மற்றும் இஸ்லாமிய ஆய்வுமையம் ஒருங்கிணைக்கும் இருநாள் தேசியக் கருத்தரங்கம் 2012 பிப்ரவரி 10,11

வெள்ளி , சனி நாட்களில் முஸ்லிம் கலைக்கலூரியில் நடைபெறுகிறது.

முதல்நாள் துவக்க விழாவிற்கு முதல்வர் முனைவர் எ.அப்துல் ரஹீம் தலைமையேற்க தமிழ்த்துறைத்தலைவர் பேரா. என் ஹைருன்னிஸா வரவேற்புரை நல்குகிறார்.ஹாஜி எஸ் செய்யது முகமது முன்னிலை வகிக்க ஆங்கிலத்துறை முனைவர் என்.ஜனார்த்தனன்மற்றும் கொடிக்கால் ஷேக் அப்துல்லா வாழ்த்துரை வழங்குகின்றனர். அறிமுகவுரையை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் நாவலாசிரியர் மீரான்மைதீன் வழங்குகிறார். தமிழ்த்துறை பேரா. பூமா.மெர்சிலின் நன்றியுரைக் கூறுகிறார்.

முதல் அமர்வு:

பேரா. மு. அப்துல்சமது நெறியாளராக இருக்க மீன்காரத்தெரு, கறுத்தலெப்பைஉள்ளிட்ட ஐந்துநாவல்களை எழுதிய நாவலாசிரியர் ஜாகிர்ராஜா நானும் என் எழுத்தும் தலைப்பில் கட்டுரை சமர்பிக்கிறார்.கி.சங்கரநாராயணன் ஆய்வாளர் கட்டுரையை முன்வைக்கிறார்.

இரண்டாம் அமர்வு

முனைவர் பர்வீன் சுல்தானா நெறியாளராக இருக்க நாவலாசிரியர் அர்ஷியா தமிழ்ப் புனைவு எழுத்தும் உருதுமுஸ்லிம்களின் வாழ்வியலும் பொருளில் கட்டுரையை சமர்ப்பிக்கிறார். ஆய்வாளர் செ . ஆமினா பானு ஆய்வுக்கட்டுரையை முன்வைக்கிறார்.

மூன்றாம் அமர்வு

சென்னை புதுக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு. அப்துல்ரசாக் நெறியாளராக செயல்பட நூருல் இஸ்லாம் தமிழ்த்துறைப் பேராசியர் நட.சிவகுமார் பண்பாட்டில் வேர்பிடிக்கும் சிறுபான்மை கவிதைக் குரல்கள் என்ற தலைப்பில் உரையாரற்றுகிறார். பேரா. நா. சிதம்பரம் ஆய்வாளர் கட்டுரையை முன்வைக்கிறார்.

படைப்பாளிகளுடன் உரையாடல் – நான்காம் அமர்வு

முதல்நாள் மாலையில் நடைபெறும் இந்த அமர்விற்கு எழுத்தாளர் களந்தை பீர்முகமது நெறியாளராக இருக்கிறார்.

எழுத்தாளர் பொன்னீலன், காலச்சுவடு கண்ணன்,குளச்சல் யூசுப்.எழுத்தாளர்கள் பிர்தவ்ஸ்ராஜகுமாரன்,ரோஜாகுமார்,தாழை மதியவன்,அப்ழல்,மணவை அமீன்,ஜே.ஆர்.வி.எட்வர்டு,முனைவர் குமாரசெல்வா,எஸ்.ஜே.சிவசங்கர்,அபுஹாஷிமா,அன்வர்பாலசிங்கம்,அசன்மைதீன்,ச.முத்துராமன்,வி.சிவராமன்,ஜி.எஸ்.தயாளன்,ஹெச்.ஜி.ரசூல்,எம்.விஜயகுமார் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் ,மற்றும் படைப்பாளிகள் கலந்து கொள்கின்றனர்.

இரண்டாம் நாள் – ஐந்தாம் அமர்வு

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகிறது.முஸ்லிம்சிறுகதைகளில் இனவரைவியல் கூறுகள் என்ற பொருளில் முனைவர் நா.ராமச்சந்திரன் கட்டுரை சமர்ப்பிக்கிறார்.

பேரா. முகமதுரபீக் ஆய்வுக்கட்டுரை வாசிக்கிறார்.

ஆறாம் அமர்வு

எழுத்தாளர் முஜீப்ரகுமான் தலைமையேற்கிறார். எழுத்தாளர் அன்வர்பாலசிங்கம் அடித்தள முஸ்லிம்களின் வாழ்வை எழுதும் எழுத்து என்ற பொருளில் பேசுகிறார். பேரா.ஹாஜாகனி ஆய்வுரையை நிகழ்த்துகிறார்.

ஆய்வாளர் ஆர். பிரேம்குமார் தர்வேஷ் தொடங்கி இன்குலாப்வரை பொருளில் கட்டுரை வாசிக்கிறார்.

ஏழாம் அமர்வு

முனைவர் எ.ஜோசப்சொர்ணராஜ் ஒருங்கிணைக்க ஆய்வாளர்களின் கட்டுரைச் சுருக்கங்கள் இடம் பெறுகின்றன.

நிறைவுவிழா முஸ்லிம் கலைக்கல்லூரி தாளாளர் லயன் எச். முகம்மது அலி தலைமையில் நடைபெறுகிறது.பேரா. ஏ.கே.ஜோணி ஜெபமலர் வரவேற்புரை சொல்கிறார்.நிறைவுரையை சாகித்திய அகாடமி விருது பெற்ற நாவலாசிரியர் தோப்பில் முகமதுமீரான் வழங்குகிறார். பேரா. ஹாமீம்முஸ்தபா நன்றியுரை வழங்குகிறார்.அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியர்கள் இந்த ஆய்வரங்கில் கலந்து கொள்கின்றனர். படைப்பாளிகள், வாசகர்கள் மற்றும்

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்:

9443450044/979154174

Series Navigationகவிதை கொண்டு வரும் நண்பன்உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்