சாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்கு

27.08 2014 அன்று புக் பாயின்ட் அண்ணா சாலை 160 எண் கொண்ட கட்டிடத்தில் ஆவணப்படங்கள் திரையிடல் நடந்தது இந்திய இலக்கிய ஜாம்பவான்கள் அறுவரைப்பற்றி வாழ்க்கைபடங்கள். போட்டுத்தான் காண்பித்தார்கள்.
சாகிதய அகாதெமியின் அழைப்பிதழ்கள் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு ஒரே நபருக்கு நிகழ்ச்சி முடிந்த மறு நாள் என்கிறபடி வரும் ஆனால் இந்த முறை ரெண்டு நாட்கள் முன்னம் வந்தது. நல்ல விஷயம். அழைப்பிதழை என்றைக்கு ஏற்பாட்டாளர்கள் அஞ்சல் பெட்டியில் போட்டார்கள் என்பது விலாசத்தில் அச்சாகியிருப்பது ஒரு ஆரோக்கியமான அம்சம்.
புக் பாயின்டை 160 அண்ணா சாலை என்று தேடினால் நாய் படாதபாடுதான்.போறாதக்குறைக்கு சென்னை அண்ணாசாலையில் பாதாள ரயில் பிரம்மாக்களின் ஆக்கிரமிப்பு வேறு..
ஸ்பென்சருக்கு எதிர்ப்புறம் வருக என்று புக் பாயின்ட் விலாசம் போட்டிருந்தால் ரொம்ப ஒத்தாசையாக இருந்திருக்கும்.
நிகழ்ச்சி சரியாக அழைப்பிதழில் போடப்படிருந்த நேரத்துக்குத்துவங்கியது.வழக்கம்போல் வரவேற்புரை,தலைமையுரை,சிறப்புரை,நன்றியுரை இத்யாதிகள்.செயல்ர் ஸ்ரீனிவாச ராவ் சாகிய அகாதெமி வரவில்லை.ஏதோ அமைச்சர் அலுவலகத்தில் தவிர்க்கமுடியாத அலுவல். கி.நாசிமுத்து. வந்திருந்தார் தலைமையுரை ஆற்றினார்.சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் தலைமை ஆசிரியர் ஒருவர் வழக்காக ஆற்றும் உரைப்பாணி.
மாலனும் எஸ்.ராமகிருஷ்ணனும். சுருக்கமாகப்பேசினார்கள்.பாலமுரளி கிருஷ்ணாவை அழைத்து வந்து ‘மங்கள ஆரத்திக்கு ஒரு பாட்டுப்பாடுமே’ என்றபடிக்கு இருந்தது
இளங்கோவன் அகாதெமிக்காரர் வழக்கம் போல் கச்சிதமான டிப்ளமேடிக்.பேச்சு பேசி முடித்தார்.
திரையிடல் துவங்கியது. முதலில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கம் சா. கந்தசாமி.
ஜெயகாந்தன் ஒரு பிரமிக்கத்தக்க படைப்பாளி என்பது ஆவணப்படம் பார்த்தவர்கட்கு போய்ச்சேரவில்லை.அவரை ப் படத்தில் பார்த்துப் பார்த்து ஒரு பரிதாபம் ஆற்றாமை இவைகளே செய்தி ஆனது.யாரைப்பற்றி ப்படம் என்பது குறுகி கி.வீரமணியை பெரிதுபடுத்திய மாதிரியுமே கூட அனுபவமானது. ஜெயகாந்தனுக்குஇருந்த பொதுவுடமையின் அன்றைய காத்திரமான ஈர்ப்பு போதிய கவனம் பெறவில்லை.இன்றைய ஜெயகாந்தன் வேறு என்பது அறிவோம்.எது சரி என்பது தனித்த சமாச்சாரம். மாஸ்கோ உருண்டை கோபுரங்கள் காட்சியில் வந்தன.

அடுத்து சுனில் கங்கோபாத்தியாய இயக்கம்;உத்பலேந்து சக்ரவர்த்தி.இந்த திரையிடலில் வந்த குஜராத் இனக்கலவரம் குறித்து எழுத்தாளரின் கருத்துக்கள் ஆரோக்கியமானவை.இன்றைய கால கட்டத்தில் மக்களே அதனைச்செமித்து சம்பந்தப்பட்டவர்களை அரியணைக்கு அனுப்பியிருதாலும் அந்த நிகழ்வு வரலாற்றில் ஒரு கரும்புள்ளி என்பதை அழுத்தமாகக்குறிப்பிடுவது எழுத்து நேர்மக்கு உரைகல்.

மூன்றாவது.மஹாசுவேதா தேவி இயக்கம் சந்தீப் ரே. அந்த எழுத்து வீரங்கனை வங்க மொழியில் பேசிக்கொண்டே இருந்தார். நடு நடு வில்.கிராமம் ஒன்றை கொல்கத்தா பள்ளியை கல்லூரியை தார்ச்சலையை ஹூக்ளி நதியைக்கான்பித்தார்கள்.அடியில் ஆங்கிலத்தில் எழுத்து விளக்கம் தருவது திரைப்படம் எடுத்தபோது நடப்புக்கு வரவில்லையாம்.ஆக அது இல்லை. வங்க ஜனகணமனவுக்கு பொருள் புரியாமல் பாடவில்லையா அதுபோலத்தான் இது.
சுவேதா தேவியின் ஆளுமை கம்பீரம் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது ஒரு நிறைவு.

மதிய உணவுக்குப்பின்னர் வைக்க முகம்மது பஷீர் இயக்கம் எம்.ஏ சரவணன். மேல் சட்டை போட்டுக்கொள்ளாத வேட்டிக்கட்டிக்கொண்ட மலையாள எழுத்து ஆளுமையை.நன்றாகத்தான் படம் எடுத்து இருக்கிறார்கள். பாதையில் உள்ள ஒரு முள்ளை அகற்றுவதையும் காய்ந்து போகாமல் இருக்க ஒரு செடிக்குத்தண்ணீர் கொஞ்சம் ஊற்றுவதையும்.இறை வழிபாடாகச்சொல்லும் பஷீர் என்றைக்கும் வாழும் படைப்பாளிதான்.
ஆங்கிலத்தில் கீழே எழுத்து எழுதியது ஒரே ஓட்டமாய் ஓடியது, ஒரு பதம் என்ன என்று பார்ப்பதற்குள் ஜகன் மோகினி படத்தில் வரும் பிசாசுக்கணக்காக எழுத்துக்கள் மறைந்துபோய் அடுத்த காட்சி வருகிறது.
பஷீர் எங்கே என்று படத்தைப் பார்த்தால் கீழே வசனம் படிப்பது கோவிந்தா.கீழ் உள்ள வசனம் பார்த்தால் மேல் போகும் படம் கோவிந்தா.எத்தனை இம்சை தெரியுமா.பஷீர் பார்வையாளர் கூட்டத்தில் இருந்திருந்தால் நம்மைத் தொலைத்து விட்டிருப்பார்,மன்னிக்க முடியாதது இந்த அனுபவம்.

அடுத்து வந்தது கமலாதாஸ் இயக்கம் சுரேஷ் கொஹ்லி.அவர் ஒரு ஆங்கிலக் கவிஞ்ர். அந்த நிறைவு கிடைக்கவேயில்லை.அவர் எழுதிய புத்தகங்களை மேசையில் வாரி இறைத்தபடி காட்டினார்கள்.அவர் இஸ்லாமுக்குப்போனதுதான் திரைப்பட ப்பார்வையாளர்களுக்குத்துருத்திகொண்டு மனதில் அனுபவமானது’
கடைசியாக இந்திராபார்த்தசாரதி ரவிசுப்ரமனியம் இயக்கம்.இபா வை அவ்வப்போது.காட்டி அவரைப்பற்றிய படம் என்று ஞாபகப்படுத்தினார்கள். நெருக்கி அடித்துக்கொண்டு கல்யாண வீடியோ பார்த்த அனுபவம். படத்தில் இத்தனைக்கருத்தாளர்கள் வேன்டுமா கொஞ்சம் சுருக்கியிருக்க்லாம். இபாவின் புதுச்சேரி அனுபவம் பற்றிய சிலாகிப்பு கொஞ்சம் அதிகம். செயற்கையாத்தான் தெரிந்தது.
மொத்தத்தில் இது இன்னும் அரசு சார்ந்து நிகழ்வு என்னும் மனக்கனத்தோடு இதுவே ‘இவா இங்க செய்யறது ரொம்ப ஜாஸ்தி தெரியுமா’ என்னும் கருத்து பிரமிப்போடு வந்தவர்கள் கலைந்து சென்றார்கள். -எஸ்ஸார்சி
———————————————

Series Navigationயேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்புதொடுவானம் 34. சிறு வயதின் சிங்கார நினைவுகள்பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சுஅழகுக்கு அழகு (ஒப்பனை)அப்பாஇந்த நிலை மாறுமோ ?தினம் என் பயணங்கள் -34 திரு. வையவன் வருகைஉஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசுசூரிய மண்டலத்திலே முதன்முதல் வாயுக் கோள்களான பூத வியாழனும், சனியும் தோன்றி இருக்க வேண்டும் என்று கணனிப் போலி வடிவமைப்புகள் [Simulations] மூலம் அறிய முடிகிறது.அமர காவியம்!ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-6பாவண்ணன் கவிதைகள்பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டதுநிஸிம் இசக்கியேல் – இருளின் கீதங்கள் – வயது வந்தோருக்கான கவிதைகள்முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 22எக்ஸ்ட்ராக்களின் கதைஈரத்தில் ஒரு நடைபயணம்வாழ்க்கை ஒரு வானவில் – 21ஒரு புதிய மனிதனின் கதைபாகும் பாறையும் – பெருமாள் முருகன் நாவல் – பூக்குழி