சொற்களின் வல்லமை

Spread the love

மஞ்சுளா

யாரிடமும்
எதைச் சொன்னாலும்
குறைத்துச்
சொல்ல வேண்டாம்

அதிகம் சொல்லிக்கொள்வது
ஆபத்து
என்றும்
நினைத்து விட வேண்டாம்

அதிகம் சொல்லிக்கொள்ளும் போது
குறைவாக உதடசையுங்கள்

உதடுகள் இணைப்பது
சொற்களை
உங்களையும் என்னையும்
அல்ல

உதடுகள் பிரியும் போது
தெறித்து விழும்
சொற்களின் மீது தான்
அதிக கவனம் வைத்து
விடுகிறார்கள்
எதிரே இருப்பவர்கள்

அவர்களுக்கும் இருக்கின்றன உதடுகள்

இருக்கிய உதடுகளை
அவர்கள் பிரிக்க கூடும்

முக மூடிகளை கழற்றி
வீசி எறியக்கூடும்

பதிலுக்கு காத்திருக்கின்றன
உங்கள் முக மூடிகள்

சண்டையிட்டு
பிரிந்து விடும்
முகமூடிகள் மீது
காறி உமிழ்ந்தபடியே
இருக்கின்றன
சொற்கள்

மனித உதடுகளின்றி !

      -----மஞ்சுளா 
         மதுரை 
Series Navigationவிருதுகள்புதுப்புது