தப்புக் கணக்கு

ஆதியோகி

சிறகிலிருந்து பிரிந்து

காற்றில் அலைந்த இறகொன்று

பறவையின்றித் தானே

தனித்துப் பறப்பதாய்

மமதையோடு எண்ணி மகிழ்ந்தது,

தரையில் வீழ்ந்து

குப்பையோடு குப்பையாகிப்

போகும்வரை..!

– ஆதியோகி

Series Navigationதொடுவானம் 213. நண்பனின் கடிதம்.கவனம் பெறுபவள்