நிலையாமை

Spread the love

எஸ். ஸ்ரீதுரை

வாழ்க்கையின் நிலையாமை,
வயசாளிகள் படும் பாடு,
வசதியான ஹோம் எதுவென்ற விசாரம்,
அத்துவைத தத்துவம் பற்றிய
அரைகுறைக் கேள்வி பதில்,
‘அந்நியன்’ படப்புகழ் கருடபுராண தண்டனைகள்,
ஏகாதசியன்று நேரும் இறப்பின் மகிமை,
கல்யாணத்தை விடவும் அதிகமாகிவிட்ட
‘காரியச்’ செலவுக்கான கடன்கள்,
‘போய்ச்சேருவதற்கான’ காத்திருப்பு பற்றிய
கதையளப்புகளுடன் கூடிய
மயானம் நோக்கிய யாத்திரைகள் யாவும்,
எரித்துவிட்டுத் திரும்புகையில்
பெரும்பாலும்
இறந்தவரின் சொத்துக்கணக்கையும்
அந்தரங்கங்க வாழ்வையும் பற்றிய விவாதங்களுடனே
முடிவுக்கு வருகின்றன….

sriduraiwriter@gmail.com

Series Navigationதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாக மாநாடு அழைப்பிதழ்பாலகுமாரசம்பவம்