நேரத்தின் காட்சி…

ரேவா

 

 

இது அதன் பெயரால்
அப்படியே அழைக்கப்படும்
தனக்கான அந்தரவெளிகளோடு
தனித்தே தான் இருக்கும்
துயரத்தின் காட்சியையும்
பாவத்தின் நீட்சியையும்
துறத்தும் பாவனையை
தொடர்ந்தே தான் கொடுக்கும்
தப்பிக்கும் நேரமும்
தப்பிழைக்கும் காலமும்
தப்பாமல் தவறுக்குள்
வரவொன்றை வைக்கும்
இருப்பின் ஓடமதும்
சுழல் காற்றின் கையில் சிக்கி
சிருங்காரமாய் ஆடும்
ஆடுமிந்த ஆட்டமது
முடிந்த பின்னும்

முயற்சிக்கு முற்றுவைத்து

முடிவைத்தேடி தொடருமிதை
அதுவென்றே
நல்லுழகம் கூறும்…

 

-ரேவா

reva.maheswaran@gmail.com

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20’பிறர் தர வாரா..?’