பார்த்துப் போ.

Spread the love

ஆ. ச .க 

வீட்டிலிருந்து புறப்படுகையில்
அன்னை எச்சரிப்பு ;

தெருவில் நடக்கையில்
நண்பன் ;

சாலை கடக்கையில்
முகம் தெரியாத பெரியவர் ;

யாவரும் உரைக்கின்றார்
பார்த்துப் போ

புன்னகையோடு பேருந்தில் ஏறி
அமர்ந்த கொஞ்ச நேரத்தில்

குலுங்கி நின்றது வண்டி
ஒரு விபத்தின் பரபரப்போடு .

கண்ணில் வழியும்
வேர்வையைத் துடைத்து

மடித்த அலுமினிய
ஊன்றுகோலைத் தடவுகையில்

மீண்டும் புன்னகை —

நீங்களும்
பார்த்துப் போகக் கூடாதா

Series Navigationநிலை கெட்ட மனிதரைதமிழ்நாட்டில் திமுக அணி பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி எதனை காட்டுகிறது?