பார்வையற்றோர் நன்னல அமைப்பு

WELFARE FOUNDATION OF THE BLIND – நான் சார்ந்துள்ள இந்த பார்வையற்றோர் நன்னல அமைப்பு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகளையும், அவர்களின் படைப்புத்திறனையும் வெளிப்படுத்தும் படைப்புகளையு வெளியிட்டுவருகிறது. பார்வையின்மையையும் மீறி சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவர்களை முக்கியப் பொறுப்பில் கொண்டிருக்கும் இவ்வமைப்பின் நிறுவனர் திரு.ஜெயராமன் பார்வையின்மை, ஒரு காலிழப்பு, சர்க்கரை நோய் எல்லாவற்றையும் மீறி பார்வையற்றவர்களின் நலனுக்காகத் தன் இறுதி நாள் வரை பாடுபட்டவர். செயல்பாடுகள் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அவை குறித்த documentationம் என்பார். வருடா வருடம் எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்று பார்வையற்றோர் பிரச்னைகள், படைப்புத்திறன் குறித்த கதை,கவிதை,கட்டுரைப் போட்டிகள் நடத்துதல். இவ்வாண்டு அக்டோபர் இறுதியில் நடக்கவுள்ள எங்கள் ஆண்டுவிழாவின் பொருட்டு பார்வையற்றோர் நலவாழ்வு தொடர்பான கதை, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்துகிறோம். உங்களுக்குத் தெரிந்த பார்வையற்ற தோழர்களிடமும், மாணாக்கர்களிடமும் இதைத் தெரிவிக்கவும். கதை, கட்டுரைகள் 5 பக்கங்கள் வரை இருக்கலாம்(ஏ4). கவிதை 30 வரிகளுக்கு மிகாமல்.ஆறாவது முதல் எட்டாவது வரையுள்ள மாணவர்கள் ஒரு பிரிவு, ஒன்பதாவது முதல் ப்ளஸ் 2 வரை ஒரு பிரிவு,கல்லூரி மாணாக்கர்கள் ஒரு பிரிவு, மற்றவர்கள் ஒரு பிரிவு. பார்வையுடையவர்கள் ஒரு பிரிவு. ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் 10 -20 படைப்பாக்கங்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களும் எளிய பரிசுகளும் தரப்படும். படைப்பாக்கங்கள் நூலாக வெளியிடப்படும். விருப்பமுடையோர் கலந்துகொண்டு படைப்புகளை மின்னஞ்சலிலோ அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கோ இந்த மாதம் முடிவுக்குள் அனுப்பித்தரலாம். wfbchennai@gmail.com. நன்றி, தோழமையுடன், லதா ராமகிருஷ்ணன்.

WELFARE FOUNDATION OF THE BLIND

Reg.no.193 /91

No. 7, Iswaran Koil St, Kilambakkam
Urapakkam Post, Pin code -603 202

 

Series Navigationகவிதைகள்பேச்சுரிமை