பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு

Spread the love

இரண்டாம் உலகப் போரிலிருந்து வெளிவந்த பெரும்பாலான மறக்கமுடியாத கவிதைகள் பல அமெரிக்கர்களால் எழுதப்பட்டவை. அமெரிக்க இராணுவ ஏர் கார்ப்ஸில் பணியாற்றிய ஜார்ரெல், போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றியே எழுதினார். இது இவருடைய புகழ்பெற்ற கவிதை.
இந்த கவிதையை புரிந்துகொள்ள பால் டர்ரட் என்றால் என்னவென்று அறிந்துகொள்ளவேண்டும். இரண்டாம் உலகப்போரின் போது வெடிகுண்டு வீசும் விமானத்தில் அந்த விமானத்தை ஓட்டும் விமானியின் பின்னே, அந்த விமானத்தின் வயிற்று பகுதியில் மெஷின் துப்பாக்கிகளை இயக்க ஒரு குட்டியான மனிதர் வேண்டும். அந்த விமானத்தின் வயிற்றில் இரண்டு இய்ந்திர துப்பாக்கிகளும் ஒரு சிறிய மனிதரும் இருப்பார்கள். plexiglass உள்ளே இருக்கும் அவரை பார்த்தால் விமானத்தின் கர்ப்பபையின் உள்ளே இருக்கும் கருவின் இருக்கும் குழந்தை மாதிரி தோற்றம். ஜாரலின் இந்த துப்பாக்கியை இயக்கும் மனிதர் வாழ்க்கை என்னும் கனவிலிருந்து இறப்பு என்னும் நிகழ்வுக்கு உயிர்த்தெழுகிறார். “நான் இறந்தபோது என்னை டர்ரட்டிலிருந்து தண்ணீர் பீச்சி கழுவி எடுத்தார்கள்” என்னும்போது கருக்கலைப்பின் முழு வீச்சும் நம்மை அடிக்கிறது

பால் டார்ட் துப்பாக்கி இயக்குபவரின் இறப்பு

ரண்டால் ஜாரல் எழுதிய கவிதை

என் தாயின் தூக்கத்திலிருந்து நான் வெளியே விழுந்தேன்
என் ஈரமான உரோமம் உறைந்த வரை அதன் வயிற்றில் நான் முடங்கியிருந்தேன்
பூமியிலிருந்து ஆறு மைல்கள் தொலைவில், வாழ்க்கையெனும் கனவிலிருந்து வெளியேற்றபப்ட்டேன்
நான் கருப்பு உடையில் தீக்கனவு போர்வீரர்களிடம் விழித்தேன்
நான் இறந்த போது அவர்கள் ஒரு தண்ணீர் குழாய் மூலம் என்னை கழுவி வெளியே எடுத்தார்கள்

Series Navigationமயக்கமா இல்லை தயக்கமாஓவியர் இயூஜின் கருணாவின் இழப்பு எமது சமூகத்தின் பெரும் இழப்பாகும்