பொய் சொல்லும் இதயம்

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு
 
 

ஒருபோலி முகத்திற்குள்
கண்ணியமாக ஒளிந்துக்கொண்ட போது
எதிர்நிற்கும் உயிரானவனின் விழிகளுக்கு
முகமூடிக்குள் நட்பின் சிநேகிதி என்பது
தெரியாம லேயே போனது

விளையாடுபவளின் நட்பை உணராமல்
எதிராளியை போன்று
குத்தப்படும் வார்த்தைகளை வீசி
நிராகரிப்பின் உச்சத்தை வானத்தில்
எறிந்து போகிறான் !

நிராகரிப்பிலும் நட்பின்
கண்ணியத்தை உணர்ந்த மனம்
வலிகளை மறைத்து வலம் வருகிறது
முகமூடிக்குள் ஒளிந்த இதயம்
வலிக்க வில்லை என்று
பொய் சொல்லி சிரிக்கிறது !

+++++++++++++++++
Series Navigationகாய்நெல் அறுத்த வெண்புலம்மயிலிறகு…!