பொருள்பெயர்த்தல்

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.

கேட்டு

நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய்

நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர்.

நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.

சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை

சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.

இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி

பூர்த்திசெய்தார் கவிதையை.

Series Navigationகுறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்செயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சட்டப் பயன்பாடு – பகுதி 16