மீளாத துயரங்கள்

Spread the love

ப.தனஞ்ஜெயன்

−−−−−−−−−−−−−−−−−

தினமும் அழைக்காமலேயே

தன்னை நிகழ்த்திக் கொள்கிறது

மனிதர்கள் நிகழ்த்தும் 

பயங்கரங்கள்

நாம் எப்பொழுதும்

சிந்தனையின் தர்க்கத்தில்

தீர்ந்துபோகிறதும்

அதற்குள் சாதுரியமாக 

தன் வேலையை முடித்துவிட்டு

அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுகிறது

பயங்கரம்

மனிதர்களின் குரல்கள்

ஒடுங்கியும் ஓங்கியும்

பிளவுபட்டு நசுங்குகிறது

ஒரு பாதி எதையுமே

அறிந்துகொள்ளாமலும்

அனுபவிக்காமலும் முடிகிறது

பயங்கரத்தை நிகழ்த்தி

மகிழ்ந்து விடும் மறு பகுதிக்குள்

எப்பொழுதும் ஒன்று நிலைத்திருப்பதையும்

ஒளிந்திருப்பதையும்

பார்க்கிறேன்

danadjeane1979@gmail.com

Series Navigationதொலைத்த கதைஆவி எதை தேடியது ?