தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

This entry is part 10 of 13 in the series 6 செப்டம்பர் 2020

ஸிந்துஜா  தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி   தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் ! ஜானகிராமனின் கிழவிகள் அவரைப் பாடாய்ப் படுத்துகிறார்களா அல்லது அவரால்தான்  அவர்களைக் கண்ட்ரோலில் வைக்க முடியவில்லையா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன அடாவடியாக ஒரு பேச்சு ! ஆளைத் தூக்கிவாரிப் போடச் செய்யும் […]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

This entry is part 11 of 13 in the series 6 செப்டம்பர் 2020

   திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள்.  அனைவரும்  சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள்.  “புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே வந்து கலியாணத்தை நடத்திக் கொடுக்கணும்” என்றாள் திலகவதி குங்குமத்தை நாகலட்சுமியிடமும் பத்திரிகையை சாரங்கபாணியிடமும் நீட்டியபடி. சல்வார் கமீஸ் அணிந்திருந்த திலகவதியைப் பார்த்து “இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு. புடவையைக் கட்டித்தானே  இவ்வளவு நாளா பாத்திருக்கேன்” […]

கவிதை

This entry is part 7 of 13 in the series 6 செப்டம்பர் 2020

முல்லைஅமுதன் என் வீதி அழகானதாய் இருந்தது.அழகிய மரங்கள்குழந்தைகளுடன்குதுகலமாய் கதை பேசி குதூகலிக்கும்.பதிவாய் கட்டப்பட்ட மதில்கள்இளைஞர்களின் சொர்க்கபூமி.சத்தமாய் பேசியபடிசந்தைக்குப்போகும்  மனிதர்கள்.காற்றுப்போன மிதிவண்டியைமுகம் சுழித்தபடி உருட்டிச்செல்லும் சிறுமி..அடுத்த வீடுகளில்தண்ணீர் அள்ளச்செல்லும் பாக்கியக்கா.வேலியில்தொங்கும் பூவரசம் இலையைப்பிடுங்கி மீன் வாங்கும் மாமிகள்.தூரத்தே மெல்லியதாய் ஒலிக்கும்வேலாயுதம் மாஸ்டரின்சங்கீதக் குரல்கள்.மிதிவண்டி பழகப்போய் விழுந்தெழும்பியசின்ன கையொழுங்கை..மாலையில்தண்ணியில் பாடும் மாணிக்கசாத்திரியார்.பரியாரி வளவில் களவாகதேங்காய் எடுத்துச்செல்லும் பூரணம் மாமி..சண்டியன் கட்டுக்குள்புளியம்பழம்,நாவற்பழங்கள் கடத்தியஇளைய நாட்கள்…யாரோ ஒருத்தியின் கண்பார்வை கிடைக்காதசோகத்தில்தண்ணியடித்துவிழுந்துகிடந்த நாட்களிலும்இந்ததெருக்கள் அமைதியாய்த்தான் இருந்தது.அழகாகத்தான் இருந்தது..இப்போது,விசம் தடவப்பட்டகுளதில் குளிக்கவேண்டிருக்கிறது.மெல்லிய காற்றிலும்,சூறாவளியெனினும்அலைந்த மரங்களில்குருவிச்சைகளையே  காணமுடிகிறது.தெருக்கள் […]

நகுலனிடமிருந்து வந்த கடிதம்

This entry is part 8 of 13 in the series 6 செப்டம்பர் 2020

01.09.2020       அழகியசிங்கர்     ஒரு நாள் நகுலனிடமிருந்து கடிதமொன்று வந்தது. எனக்கு ஆச்சரியம்.  கடிதத்தில்,  ‘ இனிமேல் எனக்குப் பத்திரிகை, புத்தகங்கள் அனுப்பாதீர்கள். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,’ என்று எழுதி  இருந்தார்.  நகுலன் கையெழுத்து சிலசமயம் புரியும், சிலசமயம் புரியாது.  அவருடைய மனநிலையை அந்தக் கடித வரிகள் பிரதிபலிப்பதாகத் தோன்றும்.    அக் கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.  நான் அன்றிலிருந்து அவருக்குப் பத்திரிகையும் நான் வெளியிடும் புத்தகங்களையும் அனுப்புவதை நிறுத்திக் கொண்டேன்.    […]

அயலக இலக்கியம் : சிங்கப்பூரிலிருந்து சித்துராஜ் பொன்ராஜ் படைப்பிலக்கியச் சாதனை சமீபத்திய இரு நூல்களை முன் வைத்து …

This entry is part 9 of 13 in the series 6 செப்டம்பர் 2020

1.அயலக இலக்கியம் : சிங்கப்பூர் நாவல்   சுப்ரபாரதிமணியன் மரயானை:  சித்துராஜ் பொன்ராஜ் நாவல் ஏறத்தாழ மூன்று  முதியோர்களை பற்றிய நாவல் இது என்று சொல்லலாம். ஒருவர் சுகவனம் என்ற பள்ளி ஆசிரியராக இருந்தவர். இன்னொருவர் சோமசுந்தரம் என்ற கொஞ்சம் வசதியான தமிழர். இன்னொருவர் சீனக்காரர் .பள்ளி முகப்பில் குழந்தைகளுக்கான ஐஸ்கிரீம் போன்றவற்றை விற்பவர், இந்த மூன்று பேரும் ஒரு பூ இதழின் அடிப்படை மடிப்புகளாக  இந்நாவலில்  இருக்கிறார்கள் .இவர்களைத் தாண்டி நூற்றுக்கணக்கான சிங்கப்பூரின்கள் வெவ்வேறு விதமாக இதில் பரிணமித்து ஒரு வனப்புமிக்க […]

கோவர்த்தமென்னும் கொற்றக் குடை

This entry is part 6 of 13 in the series 6 செப்டம்பர் 2020

                                                         மழைக்காலங்களில் மழையில் நனையா மலிருக்க நாம் குடை பிடித்துக் கொள்கிறோம் அவை பல வண் ணங்களிலும் பல அளவுகளிலும் இருப்பதைக் காணலாம். கறுப்பு, வெள்ளை, பல வண்ணப்பூக்கள் வரையப்பட்ட குடை பெண்களுக் கான குடை, ஆண்களூக்கான குடை, பட்டன் குடை, சிறுவர்க்கான சின்னக்குடை என்று பல வகையான குடைகள்! கேரளாவில் தாழங்குடை இல்லாமல் நம்பூதிரிப் பெண்கள் வெளியே செல்ல மாட்டார்கள் என்று சொல்கிறார்கள். அரைப் பணத்துக்குப் பவிஷு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான்” என்று […]

தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

This entry is part 13 of 13 in the series 6 செப்டம்பர் 2020

                                                                                      பொய்கைசூழ் புகலிப் பெருந்தகை                         பொன்னி நாடு கடந்துபோய்                   வைகை சூழ்மதுரா புரித்திரு                         வால வாயை வணங்கியே.                 [171] [பொய்கை=குளம்; புகலி=சீர்காழி; பொன்னி=காவிரி; ஆலவாய்=மதுரை; ஆலம்=நஞ்சு]       திருக்குளங்கள் பல நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பொன்னி ஆறு என்னும் காவிரி பாயும் சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, வைகை ஆறு பாய்கின்ற பாண்டிய நாட்டின் திருஆலவாய் என்னும் மதுரையை அடைந்து வணங்கினார். மதுரையை வணங்குவது என்பது அங்கே அருள்செய்து […]

ஆவி எதை தேடியது ?

This entry is part 5 of 13 in the series 6 செப்டம்பர் 2020

நத்தை தனது ஓட்டையும்   பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று,  அவுஸ்திரேலியர்களும்  தாங்கள் வாழும் வீட்டை  ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள்.  அதனால்  அவர்கள் வாழ்ந்த  வீடுகள்  ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும்.  வயதானவர்கள்   பெரிய வீட்டை விற்றுவிட்டு,  மற்றும் ஒரு  சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று   குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி,  குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன.  இலங்கை,   இந்தியா போன்ற நாடுகளிலிருந்து  இங்கு வாழ வந்தவர்களால்   அவுஸ்திரேலியர்களின்  இந்த மனப்பான்மையை  நம்ப […]

மீளாத துயரங்கள்

This entry is part 4 of 13 in the series 6 செப்டம்பர் 2020

ப.தனஞ்ஜெயன் −−−−−−−−−−−−−−−−− தினமும் அழைக்காமலேயே தன்னை நிகழ்த்திக் கொள்கிறது மனிதர்கள் நிகழ்த்தும்  பயங்கரங்கள் நாம் எப்பொழுதும் சிந்தனையின் தர்க்கத்தில் தீர்ந்துபோகிறதும் அதற்குள் சாதுரியமாக  தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த இடம் நோக்கிச் சென்றுவிடுகிறது பயங்கரம் மனிதர்களின் குரல்கள் ஒடுங்கியும் ஓங்கியும் பிளவுபட்டு நசுங்குகிறது ஒரு பாதி எதையுமே அறிந்துகொள்ளாமலும் அனுபவிக்காமலும் முடிகிறது பயங்கரத்தை நிகழ்த்தி மகிழ்ந்து விடும் மறு பகுதிக்குள் எப்பொழுதும் ஒன்று நிலைத்திருப்பதையும் ஒளிந்திருப்பதையும் பார்க்கிறேன் danadjeane1979@gmail.com

தொலைத்த கதை

This entry is part 3 of 13 in the series 6 செப்டம்பர் 2020

விதையிலிருந்து பிறந்தோம் உமிகளைத் தொலைத்துவிட்டோம் நம் மரப்பாச்சி பொம்மைகளைக் கறையான் தின்றுவிட்டது மழலையைத் தொலைத்துவிட்டோம் புத்த்க மூட்டைகளில் நம் மயிலிறகைத் தொலைத்துவிட்டோம் ‘ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு ராசா…….’ நாம் சொன்ன கதைகளின் ராசாராணிகள் எங்கோ அனாதைகளாய் அலைகிறார்கள் பாரம்பரியம் தொலைத்துவிட்டோம் மண் தொட்டிகளில் வாழைக்கன்றுகள் நிலங்களைத் தொலைத்துவிட்டோம் மின்மயச் சந்தையில் உழைப்பைக் கேட்பாரில்லை வியர்வையைத் தொலைத்துவிட்டோம் செடிகளுக்கெல்லாம் செயற்கைச் சினைகள் இயற்கையைத் தொலைத்துவிட்டோம். சர்க்கரையை விட சர்க்கரை மாத்திரைகள் அமோக விற்பனை நோயிடம் உடலைத் […]