ராமராஜ்ஜியம் எனும் மாயை
ஜோதிர்லதா கிரிஜா
ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம் என்று நம்பப்படுகிறது. கடவுள் மனிதனாக இறங்கும் போது, மனிதனுக்குரிய நிறை-குறைகளுடனேயே நடந்துகொள்ளுவதாகவும் கூறப்படுகிறது. இந்துக்கள் கூறி வரும் பத்து அவதாரங்களும் பூமியின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றன. முதல் அவதாரம் மத்ஸ்யாவதாரம். (மீன் – நீரில் வாழ்வது) இரண்டாம் அவதாரம் கூர்மாவதாரம் (ஆமை – நீர் நிலம் இரண்டிலும் வாழ்வது.) மூன்றாம் அவதாரம், வராஹாவதாரம் (பன்றி), நான்காம் அவதாரம் நரசிம்மாவதாரம் (சிங்கமுக மனிதன்), ஐந்தாம் அவதாரம் வாமனாவதாரம் (குள்ள மனிதன்), ஆறாம் அவதாரம் பரசுராமாவதாரம் (கோபக்கார மனிதன்), ஏழாம் அவதாரம் ராமாவதாரம் (முழுமையான மனிதன்), எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரம் (தெய்விக அரசாளன்) ஒன்பதாம் அவதாரம் பலராமாவதாரம் (கலப்பையை ஏந்தும் கிருஷ்ணனின் அண்ணன் – மல்லன்), பத்தாம் அவதாரம் கல்கி அவதாரம். இப்போதைய கலியுகம் முடிந்ததன் பிறகு வரப் போவதாய்ச் சொல்லப்படும் அவதாரம். இவர் வெள்ளைக் குதிரை மீது வாள் ஏந்தியபடி வருவாராம். அராஜகம் செய்து உலகத்தை நாசப்படுத்திவரும் நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து அதைக் காப்ப்பதற்காக வரப்போகும் அவதாரமாம்.
கடவுள் மனிதனாய் அவதரிக்கும் போது மனிதனுக்குரிய குறை-நிறைகளுடன் நடப்பான் என்று சொல்லப்படுகிறதல்லவா? ராமாவதாரத்தை எடுத்துக்கொள்ளுவோம். ராமர் முழுமையான மனிதன் என்று கூறப்படுகிறது. ராமர் எத்தனையோ நற்குணங்களின் உறைவிடமாய்ச் சித்திரிக்கப்பட்டாலும், அவரிடம் காணப்பட்ட இரண்டு பெருங்குற்றங்கள் மன்னிக்கப்படக் கூடியவையல்ல.
மரத்தின் மறைவில் நின்றுகொண்டு அம்பெய்தி வாலியை ராமர் கொன்றது மன்னிக்கக்கூடியதன்று என்று ராமாயணத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய ராஜாஜியே வெளிப்படையாய்க் கூறியுள்ளார். ராமரின் இந்தச் செயல் எதைக் காட்டுகிறது? மனிதன் தன் குறிக்கோளை அடைய நியாயமற்ற எந்த எல்லைக்கும் போகக் கூடியவன் என்பதைத் தானே? அப்படித்தானே இம்மண்ணின் மக்கள் இருந்து வருகிறார்கள்?
அடுத்து, ராம ராஜ்ஜியம் என்று புகழப்படுவதற்கான நிகழ்ச்சிக்கு வருவோம். மனைவி என்றும் பாராமல் சூலுற்றிருந்த சீதையை ராமர் காட்டுக்கு அனுப்பியதையே இதற்கான அடிப்படையாக ராமபக்தர்கள் கூறிவருகின்றனர். ராமர் சீதையைக் காட்டில் விட்டுவரச் செய்தது நியாயமான செயல்தானா என்பதைப் பார்ப்போம்.
சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைத்தது நமக்குத் தெரியும். அவண் சீதையை வலுக்கட்டாய நுகர்வுக்கு உட்படுத்தாததை – அதற்கான காரணத்தை அறியாதவர்கள் – இன்றளவும் புகழ்ந்து வருகிறார்கள். ராவணன் ஒரு பெண் பித்தன். அவன் ஒரு முறை தன் மகள் முறையில் இருந்த ஒரு பெண்ணை – தம்பியின் மருமகளை – வன்கொடுமை செய்ய முற்பட்டபோது தான் அவனுக்கு மகள் போன்றவள் என்பதை அவனுக்கு நினைவூட்டி அவனது தகாத செயலை அவள் தடுக்க முயல்கிறாள். ஆனால் பித்தன் ராவணன் அதை கேட்பதாயில்லை. ‘நீ என் தம்பிக்குத்தான் மகளைப் போன்றவள்… எனக்கு இல்லை’ என்று வாதிடுகிறான். இதனால் பெருஞ்சினமுற்ற அவள், ‘எந்தப் பெண்ணையும் அவள் விருப்பத்துக்கு எதிராக நீ தொட்டுக் கட்டாயப்படுத்தினால், அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறும்’ என்று சாபமிடுகிறாள். பதிவிரதைகள் சாபமிட்டால் அது பலிக்கும் எனும் நம்பிக்கை நிலவிய காலம் அது. எனவேதான் பயந்து போன ராவணன் சீதையைச் சிறை வைத்தபிறகு அவளைக் கட்டாய நுகர்வுக்கு ஆளாக்காமல் இருந்ததோடு, தினமும் சிறைக்கு வந்து அவளெதிரே நின்று, அவளையே தன் பட்டத்து ராணியாக்குவது, எல்லா அணிகலன்களையும் அவளுக்கே அளிப்பது போன்ற ஆசை வார்த்தைகளால் அவளை வழிக்குக் கொண்டு வர முயல்கிறான்.
சீதை எதற்கும் மசிவதாக இல்லை. இதனிடையே ராமர் இலங்கை மீது படை எடுத்து ராவணனை வென்று சீதையை மீட்டு அழைத்துச் சென்றார் என்பது நமக்குத் தெரியும். சீதையை முடிவாக ஏற்பதற்கு முன்னால், அவர் லட்சுமணன் மூலம் நெருப்பூட்டி அதில் சீதையைப் பிரவேசிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபித்தார். இது மட்டுமின்றி, அன்றொரு நாள் மாய மானைத் துரத்திச் சென்று கொன்ற ராமரின் குரலில் மாய மானாகிய ராவணனின் மாமன் மாரீசன் சாகும் முன், “லட்சுமணா! சீதே!’ என்று கூவியதைக் கண்டுகொண்டதால், உடனே சென்று ராமனைக் காப்பாற்றுமாறு சீதை விடுத்த வேண்டுகோளை ஏற்காத லட்சுமணனின் அசையாமைக்குத் துர்நோக்கம் கற்பித்து ஒரு பாவமும் அறியாத அவனைச் சந்கேகித்து நோகச் செய்ததற்காக ராமர் சீதைக்கு அளித்த தண்டனை அது எனவே கொள்ள வேண்டும்.
சீதை தூய்மையானவள் என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தவே அந்தத் தீக்குளியல் என்று ராமர் பின்னர் சமாதானம் சொன்னதும் நமக்குத் தெரியும். ஆனால் இதே ராமர் பின்னாளில் செய்தது சரிதானா என்பதே இப்போது கேள்வி.
அந்நியனின் சிறையில் பல நாள் இருந்த சீதையை ராமர் திரும்ப ஏற்றுக்கொண்டது கேவலமான செயல் என்று சிலர் பேசுவதாய் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டு, ராமர் சீதையைத் துறந்து காட்டுக்கு அனுப்பினார். யாருக்கும் தன் ஆட்சியின்பால் மனக்குறை இருக்கக் கூடாது என்று ராமர் நினைத்து நியாயமாய்ச் செயல்பட்டதாய்ப் பலரும் புகழ்வதும், ராம ராஜ்ஜியம் என்பதன் மெய்ப்பாடாக இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவதும் அசட்டுத்தனமல்லவா?
சீதையின் தூய்மையை மெய்ப்பிப்பற்காகவே அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னதாய் அன்று விளக்கம் அளித்த ராமர் பின்னர் இவ்வாறு செய்ததில் என்ன நேர்மை இருக்கிறதாம்? தமது ஆட்சியை யாருமே குறை சொல்லக் கூடாதென்று நினைத்தவராயின், அவரது இந்த அடாத செயலிலும் குற்றம் கண்டவர்கள் நிறைய எண்ணிக்கையில் இருந்திருப்பார்கள்தானே? ராமர் அவர்களைத் திருப்தி செய்ய வேண்டியதில்லையாமா?
ராமரின் செயல் என்ன காட்டுகிறது? இன்ன பிற எத்தனை நற்குணங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் தன் மனைவியை உணர்வுகள் அற்ற சொத்தாகவே எண்ணி அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதுகிறான் என்பதைத் தானே இந்த அவரது அடாத செயல் காட்டுகிறது?
ராஜாஜி வாலிவதத்தை மட்டுமல்லாது, ராமரின் இந்தச் செயலையும் துளியும் அங்கீகரிக்கவில்லை. சீதையின் துயரம் இன்னும் முடியவில்லை என்றும், அது நம் பெண்களின் வாழ்க்கையில் இன்னமும் தொடர்கிறது என்றும் தாம் எழுதிய ராமாயணத்தின் முடிவுரையில் அவர் கூறுகிறார்.
எனவே ராம ராஜ்ஜியம் எனும் மாயையிலிருந்து நாம் விடுபடுவோமாக!
…….
https://jayabarathan.wordpress.com/seethayanam/
சீதாயணம் (முழு நாடகம்)
அன்புள்ள நண்பர்களே,
“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், சீதா, இராவணன், அனுமான், வாலி, சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.
கனிவுடன்,
ஜெயபாரதன், கனடா
+++++++++++++
https://jayabarathan.wordpress.com/seethayanam
தீண்டப்படாத சீதா
~ சீதாயணம் ~
(ஓரங்க நாடகம்)
சி. ஜெயபாரதன், கனடா
முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.
கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்க வில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.
உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!
உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.
அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் ஹிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.
உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.
லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.
ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப் போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!
+++++++++++
I can understand Jayabharathan writing like this, but Jyothirlatha girija taking this view is surprising. Rama has been accepted with all his shortcomings.
There are also many reasons why He killed Vali from behind. Vali was no saint. He attacked his brother, insulted him & even abducted his wife.
You have take rajaji’s wrings as the basis & criticized even Kamban for his work. Since when did Rajaji become an authority for Ramayana?
Ramayana is not just a story to be reviewed here. It is an epic out of which a lot of lessons can be gleaned out.
Pls don’t behave like the so called rationalists & ask stupid questions like ” How can ravana have 10 heads”?
S. Jayabarathan
22 Jun 2022, 00:10
to Oru, kanmani, nandhitha, vallamai, Ganesan, houstontamil
சீதாயணம் (முழுநாடகம்) | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா (wordpress.com) நான் எழுதிய சீதாயண நாடகம்.
புதிய ராமாலயத்தில் ராமனுக்கு தனியிடம், சீதாவுக்குத் தனியிடம் அமைக்கப்பட வேண்டும்.
சி. ஜெயபாரதன்
நன்றி. உங்களுக்கு விடை கூற நான் எனது கட்டுரையையே மீண்டும் எழுத வேண்டியிருக்கு மென்பதால் பதில் சொல்லவில்லை. தவறாக எண்ண வேண்டாம். ராமன் அவதாரம்தான். ஆனால் அவதாரங்கள் மனிதராய்ப் பிறக்கும்போது குறைகளுடன்தான் இருப்பர்.
அன்புடன்
ஜோதிர்லதா கிரிஜா
அயோத்திய புரிக்கு சீதாவோடு மீண்ட பட்டத்து இராமன் செய்த அவசர முடிவு முதல் வனவாசம்.
கூனிக் கிழவி ஆலோசனைப் படி கைகேயி இராமனிடம், “உன் தந்தை பட்டத்தைப் பரதனுக்கு கொடுத்து விட்டு, பதினாங்கு வருடம் நீ வனவாசம் செல்ல வேண்டும்,” என்று கட்டளை விதித்துள்ளார் எனக் கூறியதும், உடனே இராமன், தந்தையைப் பாராமல், கேளாமல், தனது தாயைக் காணாமல், கேளாமல், மரவுரி தரித்து வனவாசம் சென்றான் என்று அறிவது பெரு விந்தையாக உள்ளது. இத்தகைய அரச அதிர்ச்சி கட்டளையை இராமன் தந்தையிடம் நேரே கேட்டுத் தெரிந்து கொள்ளாதது மாபெரும் தவறு.
சி. ஜெயபாரதன்.
ராமன் அவதாரம்தான். ஆனால் அவதாரங்கள் மனிதராய்ப் பிறக்கும்போது குறைகளுடன்தான் இருப்பர்.
That is what even I have said, but seeing the shortcomings alone is not healthy journalism. In fact, that is the greatness of our Indian epics. It gives you the freedom & space to analyse & discuss, which you will dare not do with other religions.
ஆனால் அவதாரங்கள் மனிதராய்ப் பிறக்கும்போது குறைகளுடன்தான் இருப்பர்.
That is what even I have mentioned, but you have to look at the bigger picture. There are many management theories which have been gleaned out of Ramayana. The very fact that you are criticizing the epic shows the freedom that has been given. Can you dare do that with other religious books?
You’re diverting much. Referring to other religions is irrelevant and mischievous diversion. Concentrate on the article. Your only defense is that Ram has shortcomings but he has other major positive traits that make him purushothaman and we ought to concentrate on them only. In a large white canvas, if there is a black spot, all will notice only that spot. It is common sense. Another reason is provided by Shakespeare: “”The Evil That Men Do Lives After Them; The Good is Oft Interred with their Bones”. He wrote it in the context of Kings or other big personalities. In the same play, he provides yet another reason (using the wife of the King): CEASOR’S WIFE SHOULD BE ABOVE Board. Ram is big and it applies to him squarely. He should be above board. When he falls, the world talks about it animatedly. Not when his soldier falls. Shakespeare gives another reason why Tamil writer is aggrieved over Ram’s conduct, in the same play Julius Caeasar. Caesar’s wife reminds and warns her husband: Behave responsibly because When beggars die, there are no comets seen; The heavens themselves blaze forth the death of princes. These Shakespeare’s quotes impresses on the largeness, imperialness and mightiness (all apply to Ram, s/o of a big King) of the hero of the Epic. Mind it.
In the Epic, thousand and one good acts he might have performed. Still the evil acts – as pointed out by the Tamil writer here – stick out like sore thumbs. You can’t ignore them as they strike your eyes if you want to call him PURUSOTHAMAN. It does not require rationalism – as you naively think – to point them out. When the Epic itself openly points them out, why do you need rationalists to come and tell you? YOU ARE yourself ATTACKING them, not they, not the Tamil writer who merely extrapolate them here. Her major point or grouse or thrust of her article follows – which you conveniently sweep under the carpet.
Her major point or base on which she builds her article is that of treatment of women. How the King treats his wife – as I already pointed out, being big, his every act becomes a model for its citizens – is her thrust. Sita suffers speechlessly like Desdemona when Othello suspects her fidelity and finally kills her. Agnipravesham is nothing but an act of killing only. She emerges out unscathed being herself an avtar. Women suffer everywhere, whether it is Desdemona’s Venetian society or Ayodhya. They have to carry out all kinds of orders of their husbands: fair or foul. Here foul: to please society of bad men who slander character of virtuous women. Rajaji’s objections are cavalierly dismissed by you:Is he an authority? It is a naive question. Rajaji writes like a common man, not an authority. Joyothirlatha Girija writes like a common women. I, too. So, it is common masses that the Epic came to be proffered. Common people will feel the same as both Jyotirlatha Girija and Rajai agonised. Ram Raja may be anything: good, bad or ugly. But it should not kick its women under whatsoever reasons. THIS IS THE MAIN POINT OF JYOTIRLATHA GIRIJA with which I commisserate.
If everything is good in Ram Rajyam, but treatment of women is bad there, such Rajyam is unacceptable. It is not only Jyotirlatha Girija’s opinion (for writers I don’t add Mr or Mrs/Ms) but of every right thinking person.
தமிழ் எழுத்தாளர் வாலி வதத்தைப்பற்றி எழதும்போது சொல்ல மறந்தது என்னவென்றால்:
வாலிக்கு சிவனால் அருளப்பட்ட ஒரு சக்தி இருந்தது. அவன் முன் வந்து நின்று போருக்கு வந்தால், எதிராளியின் 50% வலிமை வாலிக்குத் தானாகவே வந்து சேர, வாலியின் வலிமை 150% ஆகிவிடும் (தன் வலிமை 100% புதிதாக வந்து சேர்ந்தது 50%). எதிராளியின் வலிமை வெறும் 50%. எனவே எவருமே அவனை நேருக்கு நேர் நின்று போட்டியிட்டு வெல்ல முடியாது.
இதை அறிந்த இராமன் பின் நின்று அதுவும் மரத்தின் பின்னால் (பின்னால் வாலி திரும்பி இராமனைப்பார்த்து விட்டால் இராமனின் 50% வாலிக்குப் போய்விடுமே!) மறைந்து நின்று வாலியை கொல்ல வேண்டியதாயிற்று. போர்க்களத்தில் நிராயுதபாணியான இலங்கேஸ்வரனை இன்று போய் நாளை வா (அதாவது நிராயுதபாணியைக் கொல்வ்து ஷத்ரிய தர்மமில்லை) என்ற இராமன், நேருக்கு நேர் நின்றுதான் போரிடுவது சத்திரிய தர்மம் எனப்தை மறந்திருப்பானா?
வள்ளுவர் எதிராளியின் வலியறிந்துதான் போருக்குச் செல்ல வேண்டுமென்று சொல்லியிருக்காரே!
Vinayagam,
There is no diversion here. When you talk openly & criticise only hindu epics, naturally the question will arise as to why you do not apply the same yardstick on other religions. What is wrong with that? When some remarks were made on prophet Mohammed, a lot of hue & cry was raised even though what was said is true.
What happened to your freedom of expression then? why is it so restricted?
The very fact that Rama avtaar is about the trials & tribulations of a man is worthy enough.
Nobody is saying that everything about Ramayana should be accepted whole heartedly. The vary fact that you guys are openly criticising it is proof enough.
But to only detect the flaws (??) & demean the epic is not the right way.
Women are not kicked around, as you out it.
It would be better if Girija, you & others of your creed read the epic in full objectively & then pass comments, instead of looking at only some incidents & making half baked comments.
மிஸ் சுமிதா மேடம்,
வில்லாதி வில்லன் ராமன் ஒரு மாவீரன், மாமனிதன் என்று சொல்லலாம். அவன் தெய்வீகன் என்று அவனே நினைக்க வில்லை. வால்மீகியும் அப்படி எழுத வில்லை. ராமன் மனிதனாய் ஆண்டான், வாழ்ந்தான். சீதாவுக்குச் செய்த கொடுமையால் ராமன், முடிவில் ஆற்றில் தன்னுயிரை நீக்கிக் கொண்டான்.
சி. ஜெயபாரதன்