வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
(These I Singing in Spring)
என் வசந்த காலப் பாட்டு
(1819-1892)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
காதலருக்காக நான் பாடப் போகும்
வசந்த காலப் பாட்டு
அவரது சோகத் துயர்களை நான்
அறிந்து கொள்ள வேண்டும்.
தோழருக்கு
என்னைத் தவிரத் தகுதி யான
கவிஞன் யார் ?
சேமித்துக் கொண்டு
பூமியின்
பூந்தோட்ட மெல்லாம்
பார்வை இட்டுவேன்.
விரைவில் கடப்பேன் அந்த
வாசல்களை.
ஏரிக்கரை வழிச் செல்வேன்
இப்போது.
சேற்றில் கொஞ்சம்,
நீரிலும் கால்பட அச்சமில்லை !
வேலிக்கு அருகில்,
பூர்வக் கற்கள் வீசி எறிந்து
சேர்த்த குவிப்பில்,
காட்டுப் பூக்கள்
திராட்சைக் கொடிகள்,
களைகள்,
நிரம்பிய களத்துக் கப்பால்,
வெகுதூரக் கானகத்தில்
அல்லது
பிந்தைய வேனிற் காலத்தில்
தனியனாய்
தரணி மண் வாசனையில்
இங்கு மங்கும் மௌனமாய்
உலவிச் செல்வேன்;
சிலர் பக்கத்திலும்
சிலர் என் பின்னாலும்
சிலர் என்னைப் பின்பற்றியும்,
வருவதாய் நினைத்தேன்.
அவருடன் பாடிக் கொண்டு
திரிந்தேன்.
பூக்களைப் பறித்துக் கொண்டு,
இறுதியில்
இங்கொருவன் என்னைப்
பரிவுடன் நேசிக்கக் கண்டேன்.
திரும்பி வந்தான்
மறுமுறை;
ஒரு போதும்
என்னை விட்டுப் பிரியேன்
என்றுரைத்தான்
உறுதியுடன் !
ஏரி நீரில் எடுப்பதை நான்
ஒதுக்கி வைப்பேன்;
என்னை நேசிப்போர்க்கும்,
என்னைப் போல்
நேசிக்கத்
தகுதி உள்ளோர்க்கும்
மட்டுமே
மகிழ்வுடன் அளிக்க !
+++++++++++++++++++++++
தகவல்:
1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]
4. Encyclopedia Britannica [1978]
5. http://en.wikipedia.
- குழந்தைமையின் கவித்துவம் – ராமலக்ஷ்மியின் ‘இலைகள் பழுக்காத உலகம்’
- வீடு திரும்புதல்
- உயர்ந்த உள்ளம் உயர்த்தும்
- திண்ணையின் இலக்கியத் தடம் -31
- தொடுவானம் – 12. அழகிய சிறுமி ஜெயராணி
- கம்பனின் புதுமைப்பெண் சிந்தனை
- சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்
- தினமும் என் பயணங்கள் – 13
- அம்மாகுட்டிக்கான கவிதைகள்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 71 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam)
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- நட்பு
- சீன மரபு வழிக்கதைகள் 2. பட்டாம்பூச்சிக் காதலர்கள்
- க.நா.சுப்ரமண்யம் (1912-1988) – ஒரு விமர்சகராக
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோள் வளையத்தில் புதிய துணைக்கோள் தோன்றுவதை நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி கண்டுபிடித்தது
- இலக்கிய சிந்தனை 44 ஆம் ஆண்டு நிறைவு விழா
- “போடி மாலன் நினைவு சிறுகதைப்போட்டி”
- சீதாயணம் நாடகப் படக்கதை – 29
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3
- ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்
- ’ரிஷி’யின் கவிதைகள்
- ரொம்ப கனம்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – 24 -5-2014
- திரை ஓசை – தெனாலிராமன் ( திரை விமர்சனம் )
- பயணச்சுவை 2 . நினைவில் வந்த ஒரு கனவுத்தொழிற்சாலை
பின்னூட்டங்கள்