வால்ட் விட்மன் வசனக் கவிதை -19 என்னைப் பற்றிய பாடல் – 12 (Song of Myself) ஆத்மக் கதிர் உதயம்

This entry is part 12 of 33 in the series 14 ஏப்ரல் 2013

வால்ட் விட்மன் வசனக் கவிதை -19

என்னைப் பற்றிய பாடல் – 12

(Song of Myself)

ஆத்மக் கதிர் உதயம்

Walt Whitman

(1819-1892)

(புல்லின் இலைகள் –1)

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சிஜெயபாரதன்கனடா

 

 

பேராற்ற லோடு எவ்வித வேகத்தில்

சூரிய உதயம் எழுகிறது

பேரொளிப் பகட்டில் எனக்கு

மாரக னாக !

இப்போதும் அல்லது எப்போதும்

என்னிட மிருந்து சூரிய உதயத்தை

என்னால் நீக்க இயலாது !

ஒளிப் பகட்டோடும்,

வலுப் பலமோடும்

பரிதிபோல் நாமும் மேலேறலாம் !

குளிர்ந்த

காலைப் பொழுது புலர்ச்சியில்

அமைதிச் சூழ்நிலையில்

நமக்குரிய ஆத்மக் கதிர் உதயத்தை

நாமே கண்டுபிடிக் கிறோம் !

 

 

என் கண் எட்டித் தொட முடியாததை

என் குரல் பின்தொடப் போகிறது !

என் நாக்கின் சுழற்சியில்

இவ்வுலகங் களைச் சூழ்ந்து கொள்வேன்,

வெவ்வேறு உலகங்களை !

என் கண்ணொளி இரட்டைதான்

என் வாய்ப் பேச்சு !

அதற்கீடு, இணை இல்லை

அளந்து பார்ப்பதில் !

எப்போதும்

என்னைத் தூண்டும்,

ஏளனம் செய்து கொண்டு !

கட்டுப்பாட்டுக் குள் அடைபட்ட

வால்ட் விட்மன் ! ஏன்

விட்டு வெளி வருவ தில்லை ?

 

 

வாய்ப் பேச்சின் மொட்டுக்களில்

மடிப்புகள் எத்தனை

அடுக்காய் உள்ளன தெரியாதா ?

காத்திருக்கும் கவலை யோடு,

காக்கப்படும் பனிமூடி !

என் அருட் போதனை

முன்னறிவிப்புக் பிதற்றல்களில்

பின்னோக்கிச் சரியும் தூசி !

இறுதியில் நான்

மட்டப் படுத்த முயல்வேன்

உட்பட்ட காரணிகளை !

என் உயிரோட்ட உறுப்புகள்

பற்றிய,

என் படிப்பறிவு எல்லாம்

ஒத்திசைந்து செல்லும்

உள் அர்த்தம் ஒன்றி

உவப்பில் மிதந்து !

 

 

என்னுடைய இறுதி முத்திரை:

உன்னை நிராகரிப்பது !

உண்மையில் நான் யார் என்பதை

என்னிட மிருந்து நீக்குவதை

எதிர்ப்பவன் நான் !

உலகங்களைச் சூழ்ந்தவன்

ஆயினும்

தன்னையே சூழ்ந்து கொள்ள

ஒருபோதும்

முயல்பவ தில்லை நான் !

மெலிந்தவரை, மேன்மை யானவரை

உற்று நோக்கி

முற்றுகை செய்வேன் நான் !

 

+++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
    3. Britannica Concise Encyclopedia [2003]
    4. Encyclopedia Britannica [1978]
    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (April 9, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigation​அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 16
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *