வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.

வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய
அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.
——————————————————————–
நவ – 7 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி சித்த மருத்துவ
மனையில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி நிறுவனர் வைத்தியர்
கே.பி.அருச்சுனன் தலைமையில், கிருபானந்த வாரியார் நினைவு தினக் கூட்டம்
காலை 10 மணி அளவில் நடைபெற்றது. வாரியார் சுவாமிகளின் திருவுருவ படம்
திறப்பு செய்து மாலை அணிவித்தல் மற்றும் மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைமை ஏற்று பேசிய கே.பி.அருச்சுனன் அவர்கள், வாரியார்
சுவாமிகளின் ஆன்மீக தொண்டினையும், தமிழ்ப் பற்றையும், இலக்கிய செரிவையும்
மேற்கோள் காட்டி, இன்றைய தலைமுறையினர் வாரியாரின் தமிழ்ப்பற்றினை அறிய
முறபட வேண்டும். இது சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் எனக்
குறிப்பிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி தலைவர் ப.கண்ணன்சேகர்
வரவேற்று பேசினார். ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி பொருளாளர் வனவர்
சிங்காராம் அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பி.சேகர் தென்னக
ரெயில்வே, சித்த வைத்தியர்கள் எஸ்.செல்வம், டி.சாமிநாதன், வெங்கிடேசன்,
ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அன்புடன்.. ப.கண்ணன்சேகர்.

Series Navigationமெரிடியனுக்கு அப்பால்உண்மை நிலவரம்.