உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் வெற்றி

author
2
0 minutes, 36 seconds Read
This entry is part 23 of 23 in the series 7 டிசம்பர் 2014

 wto-inida

விஜய் இராஜ்மோகன்

 

நவம்பர் 27ம் தேதி, 160 நாடுகள் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் பொது சபை கீழ்க்காணும் உறுதிப்பிரமாணத்தை நிறைவேற்றியது: “..until a permanent solution is agreed and adopted, and provided that the conditions set out in paragraphs 3 to 6 of the Bali Decision are met, Members shall not challenge through the WTO Dispute Settlement Mechanism, compliance of a developing Member with its obligations under Articles 6.3 and 7.2(b) of the Agreement on Agriculture (AoA) in relation to support provided for traditional staple food crops in pursuance of public stockholding programmes for food security purposes ..”.

 

இது சமீப காலங்களில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றியாகும். எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

உலக வர்த்தக அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட்து 1995ல். அதற்கு முன்பு இருந்த காட் (General Agreement on Tariffs and Trade – GATT), இப்படி உலக வர்த்தக அமைப்பாக உருமாறியபோது இந்தியா உட்பட அதன் உறுப்பு நாடுகள் பல ஒப்பத்தங்களை ஏற்றுக் கொண்டன. அவற்றுள் ஒன்று விவாசய ஒப்பந்தம் (Agreement on Agriculture). அந்த விவசாய ஒப்பந்த்த்தின் மூன்று பிரதான அடிப்படைத் தூண்களுள் முதல் மற்றும் முக்கியமான அடிப்படை விவசாயப் பொருட்களுக்கு அரசுகள் வழங்கும் உதவியை/மானியத்தை மட்டுப் படுத்துதல். அதுபோலவே, உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை பாதிக்க்க் கூடிய முயற்சிகளுள் ஒரு பகுதியாக அரசு சேமிப்பு கிடங்குகள் உலக வர்த்தக அமைப்பில் பார்க்கப்படுகின்றன. ஒரு அரசு தேவைக்குமேல் உணவு தான்யங்களை சேமிப்பதும், விவசாயிகளுக்கு ஊக்கமளிக்க்க் கூடிய மானியமாக கருதப்படுகிறது. ஆனால், இதை பல வளரும் நாடுகள் எதிர்க்கவே, ஒரு ஒப்பந்த ஷரத்து உருவாக்கப்பட்ட்து.

அதன் படி, முன்னேறிய மேலை நாடுகள் தாம் வழங்கும் உதவியை விவசாயப் பொருட்களின் விலையில் 5% உடன் நிறுத்திக் கொள்வதாகவும், வளரும் நாடுகள் 10% வரை நிறுத்திக் கொள்வதாகவும் உறுதி கூறினர். இந்த அளவுகோள்களுக்கு மேல் அரசாங்க உதவி/மானியம் செல்லும்போது அந்த நாடுகளுக்கு எதிராக பொருளாதார நிர்ப்பந்தங்களை, நஷ்ட ஈட்டை மற்ற நாடுகள் கோரலாம். மேம்போக்காகப் பார்த்தால், இது ஒரு நல்லெண்ண முயற்சியாக தோற்றமளிக்க்க் கூடும். ஆனால், ஒப்பந்தப்படி இதற்கான அடிப்படை (reference base) 1986-88ல் இருந்த விவசாய விலைகள் என்று நிர்ணயிக்கப் பட்ட்து.

இந்தியா போன்ற விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுகின்ற நாடுகள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்ட்து. ஏனெனில், உண்மையில் விவசாய மான்யம் அதிகரிக்கவில்லை என்றால் கூட நிகழ்வு விலை நிலவரம் 1986-88 வருடங்களுடன் ஒப்பிடும்போது வருடா வருடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால், உலக வர்த்தக நிறுவனம் அனுமதிக்கும் மான்யமோ 1986-88ம் வருட விவசாயப் பொருட்களின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்க்கப் படுகிறது. எனவே, 1986-88ல் அரிசி ஒரு கிலோ 10 ரூபாய் என்றால் இன்றைய விலை எவ்வளவு இருந்தாலும், ஒரு ரூபாய் மான்யம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட்து அதற்கு மேல் அரசு மான்யம் அளித்தால் மற்ற நாடுகள் உலக வர்த்தக நிறுவனத்திடம் முறையிட, இந்தியா மீது வர்த்தக கட்டுப்பாடுகளை (trade sanctions) கொண்டு வர முடியும்.

இது இந்தியாவுக்கு கவலை அளிக்கவே, கடந்த வருடம் பாலித் தீவில் நிகழ்ந்த உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் பன்னாட்டு அமைச்சர்கள் மாநாட்டில் முன்னேறிய நாடுகள் கொண்டு வந்த சுமூக வர்த்தக ஒப்பந்த்த்தை (Trade Facilitation Agreement – TFA) இந்தியா ஒப்புக்கொள்ள மறுத்த்து. இந்த சுமூக வர்த்தக ஒப்பந்தமானது பன்னாட்டு வர்த்தகத்திற்கு தடையாக உள்ள சுங்க இலாகா நெறிமுறைகளை (Customs procedures) இலகுவாக மாற்ற(simplification), எதிர்பார்க்க்க் கூடிய அளவிலாக்க(predictable), நவீன தகவல் தொழில்நுட்பங்களின் மூலம் சிரமங்களை நீக்க ஏது செய்யும் ஒரு ஒப்பந்தமாகும்.

அடிப்படையில் இந்த சுமூக வர்த்தக ஒப்பந்த்த்திற்கும், விவசாய மானியத்திற்கும் சம்பந்தமில்லைதான். சுமூக வர்த்தக ஒப்பந்தமும் நன்மை தரக்கூடியதுதான். ஆனால், சுமூக வர்த்தக ஒப்பந்த்த்தால் பெரும் பலனடையப்போவது அதிக அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னேறிய நாடுகள் மற்றும் சீனா. அந்நாடுகள் அவ்வொப்பந்த்த்தின் வழியே அதிக அளவில் பலனடையப் போகும் நிலையில், அவ்வொப்பந்தம் நிறைவேறினால் இந்தியா விவசாய ஒப்பந்த ஷரத்துக்களை மாற்றுவது இயலாத காரியமாகிவிடும் என்பதாலும், உலக வர்த்தக அமைப்பின் அடிப்படை கொள்கையாகிய ‘அனைவரின் ஒப்புதல்’ (single undertaking – everything agreed by everyone) என்ற கோட்பாட்டின் படி இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் சுமூக வர்த்தக ஒப்பந்த்த்தை நிறைவேற்ற இயலாது என்பதால், இந்தியா தனது ஒப்புதலை அளிக்காமல் பிடிவாதம் பிடித்த்து. இதனைத் தொடர்ந்து பெரும் பேரத்திற்குப் பிறகு சென்ற வருடம் பாலியில், முன்னேறிய நாடுகள் 2017ம் ஆண்டு வரை இந்தியாவின் உணவுப் பொருள் மானியம் மற்றும் சேமிப்பு குறித்து எவ்வித வர்த்தக கட்டுப்பாடு/நிர்ப்பந்தம்/தண்டனை நிறைவேற்றமாட்டப்படாது என்ற உறுதி மொழியை அளித்தன. இந்தியாவும் அதை ஏற்றுக் கொண்ட்து.

 

ஆனால், இந்த வருடம் புதிய அரசு அமைந்தவுடன் 2017 வரை மட்டுமே விதிவிலக்கு அதுவரையே மற்ற நாடுகள் அமைதி காக்கும். அதற்குள் இந்தியா இந்த மானியம் மற்றும் சேமிப்பு தொடர்பாக மற்ற நாடுகளுடன் ஒப்பந்த்த்தை நிறைவேற்றாவிட்டால், தனது விவசாயிகளுக்கு தரவேண்டிய மானியத்தை குறைக்க வேண்டும் அல்லது உணவுப் பொருள் சேமிப்பை குறைக்கவேண்டும் இது உணவுப் பாதுகாப்பு சட்ட்த்தை நிறைவேற்ற இயலாது செய்துவிடும் என்ற பிரச்சினையை எதிர்கொண்ட்து. இதனைத் தொடர்ந்து தனது ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து மாற முடிவு செய்த்து.

இது வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. உலக நாடுகள் அனைத்தும், இந்தியா உட்பட சுமூக வர்த்தக ஒப்பந்த்த்தை பாலியில் ஏற்றுக் கொண்ட நிலையில் அதிலிருந்து பின்வாங்கியது இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும், இது சாத்தியமற்ற நிலைப்பாடு, இந்தியா எப்படியும் பின்வாங்கியே ஆகவேண்டும் என்று நம் நாட்டு அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள் கவலைப்பட்டனர், கருத்து தெரிவித்தனர். அமெரிக்காவோ நேரடியாக மிரட்டியது, இனிமேல் உங்களுடனான எங்கள் உறவு முன்பு போல இருக்காது, சுமூக வர்த்தக ஒப்பந்த்த்தை தடுக்காதீர்கள் என்றது. பிற வளரும் நாடுகளுக்கு விவசாய மானியம், சேமிப்பு போன்ற கவலைகள் இருந்தாலும், இப்படி எதிர்நிலைப்பாட்டை எடுப்பது சாத்தியமானதா என்ற கவலை இருந்த்து.

 

ஆனால், தொடர்ந்த நிர்ப்பந்தங்களுக்கு இந்தியா அடிபணிய மறுத்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, சுமூக ஒப்பந்தம் உலக வர்த்தக அமைப்பில் நிறைவேறாது என்ற நிலையில் அமெரிக்கா சென்ற வாரம் தன் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்த்து. 2017 வரை மட்டுமே வளரும் நாடுகளுக்கு இருந்த அமைதி ஷரத்தை (peace clause), விவாசய மானியம், சேமிப்பு தொடர்பாக அனைத்து நாடுகளும் ஒருமித்து ஒரு முடிவுக்கு வரும் வரையில் ஏற்றுக்கொள்ளும் வரையில் நீட்டிப்பதாக உறுதி செய்த்து. இதனைத் தொடர்ந்தே அனைத்து நாடுகளும் மேலே குறிப்பிட்ட தீர்மானத்தை ஒருமித்து நிறைவேற்றியுள்ளன. எனவே இதுவரை இருந்த கவலை இந்தியாவுக்கு இல்லை. இந்தியாவின் மானியங்களைக் காரணம் காட்டி மற்ற நாடுகள் வர்த்தக மிரட்டல்களை விடுக்க முடியாது.

இந்த நிலைப்பாட்டில் இந்தியா ஈட்டியுள்ள வெற்றியானது, உணவு உற்பத்தி, விவாசாயிகளுக்கான மானியம், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள மக்களுக்கான உணவு உதவி ஆகியவற்றை உறுதி செய்துள்ளதுடன் அவற்றையும் தாண்டி உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை, உலக அரசியலில் இந்தியாவின் வலிமையை எடுத்துக் காட்டுவதாகவும், முன்பிருந்த்து போல பிற வளரும் நாடுகளின் இயல்பான தலைமை எனும் கருத்தை உறுதிப்படுத்தவும் செய்துள்ளது.

 

குறிப்பு: கட்டுரையாளர் மத்திய அரசின் வணிகத் துறையில் இயக்குனர். தற்போது கோவை அமிர்தா பல்கலைக் கழகத்தில் உலக வர்த்தக அமைப்பின் அரசு கொள்முதல் ஒப்பந்தம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தாகும்.

 

இந்த கட்டுரையை கணினி படித்து கேட்க கீழே உள்ள இணைப்பை உபயோகிக்கவும்.

இது பார்வை குறைபாடுள்ளவர்களுக்கான சோதனை முயற்சி

Series Navigationதினம் என் பயணங்கள் : 38 கடலும் நானும் -2
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    வைரவன் says:

    சிறப்பான கட்டுரை. எந்த வித கட்சி அரசியலுமின்றி இது எழுதப்பட்டிருக்கிறது பாராட்ட்டுக்குறியது.

    இந்தியா தனக்குமட்டுமே உதவிக்கொள்ளாது, உலகத்தின் மற்ற வளரும் நாடுகளுக்கும் இன்றியமையாத உணவுப்பாதுகாப்பையும் அதற்கான மானிய உதவிகளையும் காப்பாற்றியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *