பூபேன் ஹசாரிகா –

author
0 minutes, 0 seconds Read
This entry is part 52 of 53 in the series 6 நவம்பர் 2011

மும்பை, நவ.5: பிரபல இசை வல்லுநரும் பாடகருமான பூபேன் ஹசாரிகா மும்பையில் சனிக்கிழமை மாலை 4.37க்கு காலமானார். அவருக்கு வயது 86. கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறால் நோய்வாய்ப் பட்டிருந்த அவர், மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டயலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானதாக பூபேன் ஹசாரிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தாதா சாகேப் பால்கே விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் இவர். பலதுறை வல்லுநராகப் பரிமளித்த இவர், காந்தி டூ ஹிட்லர் என்ற படத்தில் பாடல் எழுதி இசை அமைத்து, காந்திக்கு மிகவும் பிடித்த பாடலான வைஷ்ணவ ஜனதோ பாடலைத் தன் குரலிலேயே பாடி, சிறப்பான வெற்றிபெற வைத்தவர்.
அஸ்ஸாமிய பாரம்பரிய பாடல்களை இசையமைத்து, பாடல்கள் எழுதி இசை உலகுக்கு சிறப்பான பங்காற்றியவர். பாடகராக, எழுத்தாளராக, பத்திரிகையாளராக, இசை வல்லுநராக, திரைப்படத் தயாரிப்பாளராக என பல்துறை வித்தராகத் திகழ்ந்தவர் ஹசாரிகா. துரதிருஷ்டவசமாக தனது 86ம் பிறந்த நாளை கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கொண்டாட வேண்டியிருந்தது.

நன்றி தினமணி

தில் ஹூம் ஹூம் கரே

கங்கா பஹ்தி ஹை க்யூன்

Series Navigationநம்பிக்கைதொலைந்து கொண்டிருக்கும் அடையாளங்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *