அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான போராட்ட அரசியலைத் தொடங்கியுள்ளது. அந்தப் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டதும், தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் பொது மக்கள் ஜன நாயகத்தில் பங்கு பெறுவதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. பொது மக்கள் வாக்களிப்பதை மட்டும் ஜன நாயகக் கடமையாய்க் கொள்ளாமல், தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்ததன் அறிகுறி இது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப் பணியாளர்கள் என்று தம்மை அடையாளம் கண்டுகொண்டவர்கள் அரசியலின் பிரசினைகளை சமூகப் பிரசினைகளாய் இனங்காண்பதும், அந்தப் பிரசினைகளுக்காக முன்னின்று போராடுவதும் வரவேற்கத்தக்க மாற்றம். அன்னா ஹஸாரேயும், பாபா ராம்தேவும் தொடங்கி வைத்த இந்த போக்கு இன்னும் பலரையும் இணைத்துக் கொண்டு முன்னெடுஹ்துச் செல்லவேண்டும்.
அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் கூட்டணியின் நிகழ்கால நிர்ப்பந்தங்களையும், எதிர்கால திட்டங்களையும் முன்வைத்து நடத்தப் படுபவை. நீண்ட கால செய்ல திட்டங்கள் அற்றவை. முக்கியமாக கறுப்புப்பண அரசியலுக்கும், ஊழலுக்கும் எதிராக அரசியல் கட்சிகள் வாய் திறக்கவெ இல்லை. ஏனென்றால் எல்லாக் கட்சிகளும் இந்தப் போக்கினால் ஆதாயம் பெற்றவர்கள். மிகத் தெளிவாகத் தெரிந்திருந்தும் போஃபர்ஸ் ஊழலின் நாயகர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. சர்க்காரியா ஊழல் முதல் கலைஞர் டி வி ஊழல் வரை, ஸ்பெக்ட்ரம் ஊழல் வரை புகழ் பெற்ற தி மு க அரசையும் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு இன்னமும் கோர்ட்டில் உள்ளது, இவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது மட்டுமல்லாமல், மீண்டும் இந்த ஊழல் குடும்பங்களே ஆட்சிக்கு வருவதும் நேர்கிறது. மக்களிடம் கேட்டால் மாற்று இல்லை என்பது அவர்களின் பதிலாக இருக்கிறது. மாற்றி மாற்றி அரசியல் கட்சிகளை அரியணை ஏற்றி உட்கார வைத்து வெறும் நம்பிக்கைகளிலேயே காலம் கட்த்தி வருகிறார்கள் மக்கள்.
அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ் போராட்டங்களையும் தமதாக்கிக் கொண்டு குளிர்காய எதிர்க்கட்சிகள் தயாராய் உள்ளன. ஆனால் இந்த எதிர்க் கட்சிகள் ஆளுங்கட்சிகளாய் இருந்தபோது ஊழலை ஒழிக்க எதுவும் செய்யவில்லை என்பதும், ஊழலின் பலாபலன்களைத் தழுவியவர்கள் தான் என்பதும் உண்மை.
லோக்பால் மசோதாவை மீண்டும் அரசியல்வாதிகள் கடத்திக் கொண்டுபோய், என்னை நீ காட்டிக் கொடுக்காவிட்டால், நான் உன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஒரு வசதியை ஏற்படுத்தும் வகையில் லோக்பால் மசோதாவின் வரவு உள்ளது. லோக்பால் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட தனி அமைப்பாக செயல்படுவது ஒன்று தான் லோக்பால் அமைப்புக்கு கொஞ்சமாவது ஆற்றலை அளிக்க முடியும். இல்லையென்றால், லோக்பால் மசோதாவும் காகிதத்தில் சிறந்ததாகவும், நடைமுறையில் பொருளற்றதாகவும் முடியும்.
காந்தியின் அடியொற்றியவர்கள் சிலர் மூலம் மீண்டும் இந்தியா துளிர்விட சில வாய்ப்புகளை இந்தப் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.
- அம்மாவின் மனசு
- ஒவ்வொரு சிகரெட்டுக்கு பின்னாலும் ஒரு தீக்குச்சி
- எதிரொலி
- இடைசெவல்
- கருணாநிதியால் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் கட்டப்படுமா?
- சத்யானந்தனின் பிற படைப்புக்களுக்கான இணைப்பு
- ஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.
- உறைந்திடும் துளி ரத்தம்..
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
- எனக்குச் சொந்தமில்லா உன் பெயர்
- எழுதப்படாத வரலாறு – வெள்ள முறுக்கு தாத்தா
- அண்மையில் செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு
- சபிக்கப்பட்ட உலகு -2
- ஏன் மட்டம்
- மெய்ப்பொருள் காண்ப தறிவு
- பொய்க்கால் காதலி!
- வ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்
- எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு
- ப.மதியழகன் கவிதைகள்
- சிற்சில
- இந்திய சர்க்காரிடம் சாமானியன் கேட்கும் பத்து சாதாரண கேள்விகள்:
- உலரும் பருக்கைகள்…
- பழைய இதழ்கள் பற்றிய குறிப்போ புதிய பயனர்களுக்கான வசதியோ இல்லாதது பற்றி
- இராணுவ முகாமில் நடத்தப்படும் தலைமைத்துவப் பயிற்சி எப்படியிருக்கிறது?
- மனிதநேயர் தி. ஜானகிராமன்
- தவிர்ப்புகள்
- ரகசிய சுனாமி
- மௌனம்
- சௌந்தர்யப்பகை
- குடிமகன்
- ஓரு பார்வையில்
- அம்மாவின் நடிகைத் தோழி
- விசையின் பரவல்
- ஆனியன் தோசை
- கருப்புக்கொடி
- தண்டனை !
- திட்டம் மற்றும் கட்டமைப்பு குறித்த உரையாடல் – பகுதி 1
- பிஞ்சுத் தூரிகை!
- விக்கிப்பீடியா – 2
- தரிசனம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -3)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி கவிதை-44 பாகம் -3)
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 3
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 38
- (68) – நினைவுகளின் சுவட்டில்
- இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்