This entry is part 34 of 51 in the series 3 ஜூலை 2011

நேற்று உன்னை
சந்தித்துவிட்டு வந்த பிறகு
வேலை ஓடவில்லை
பார்க்கப்படவேண்டிய
கோப்புகளெல்லாம்
என்னைப் பார்த்துச்
சிரித்தன
சதா வண்டு ஒன்று
மனதைக்
குடைந்து கொண்டிருந்தது
வீட்டுக்கும்
அலுவலகத்துக்கும் இடையே
எப்படிப் பயணிக்கிறேன்
எனக்கே தெரியவில்லை
மைதானத்தில் உதைபடும்
பந்தாய் ஏன்
நானிருக்கிறேன்
நேற்று
வசந்தத்தைப் பரிசளித்த
காதல் தான்
இன்று
வாழ்க்கையைப் பறித்துக் கொண்டது
என்னை நானே வெறுக்கிறேன்
எல்லாவற்றையும் மறக்கத்தான்
போதையிலே மிதக்கிறேன்
பணக்கட்டுகளை வீசி
பெண்களை வாய் பிளக்க
வைக்கிறேன்
புனிதத்தின் மீது
காறி உமிழ்ந்துவிட்டு நடக்கிறேன்.

Series Navigationமூன்றாமவர்குழந்தைப் பாட்டு